Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள முதியோரர்களின் நிலை?
#1
புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள முதியோரர்களின் நிலை என்ன என்பதைப் பற்றி பேசுவோமா? எவ்வாறு அவர்கள் அவர்களை சார்ந்தவர்களால் கையாளப்படுகிறார்கள்?
அன்புக்கும் ஆதரவிற்கும் ஏங்கி நிற்கும் ஜீவன்கள் எவ்வாறு நடாத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றி உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்...

அப்பு முகத்தார் எல்லோரும் உங்க நிலமையை எடுத்து விடுங்களன்? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#2
புலத்தில் உள்ள முதியோர்களில் சிலர் கவனிக்கப்படுகின்றார்கள் சிலர் உதாசீனப்படுத்தப்படுகின்றார்கள். அவர்கள் சரியாக கவனிக்கப்படுகின்றார்களோ இல்லையோ என்ற பிரைச்சனையை விட முக்கியமானது ஒன்று இருக்கின்றது அதுதான் தனிமை, தாயகத்தில் உறவுகள் நட்புகள் சூழ தமக்கு நன்று அறிமுகமான இடத்தில் இருந்துவிட்டு புலத்திற்கு வருபவர்கள் இங்கு கட்டிட காட்டில் தனிமையில் இருந்து மனதளவில் வாடி வதங்குகிறார்கள். புலத்தில் பிள்ளைகள் மருமக்கள் வேலைக்கு சென்றபின்பு வீட்டில் தனிமையில் இருக்கும் இவர்களுக்கு நேரத்தை எப்படி கழிப்பது என்பதே முக்கிய பிரச்சனை. இந்த பிரைச்சனையை எப்படி தீர்ப்பது?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
எங்களை புலத்தில் கவர்ந்தது இந்த புலத்துப் பூர்வீக முதியவர்கள் தான்... ஆடம்பரமில்லா எளிய வாழ்க்கை...அமைதியான சூழலில் அன்பான சோடிகளா நிம்மதியாக வாழ்கிறார்கள்... பிள்ளைகள் பிரிந்து போக எண்ணினால் தடுக்காது...அவர்களின் சிந்தனைக்கு மதிப்பளித்து வாழ அனுமதிக்கிறார்கள்... ஒரு பூனையையோ நாயையோ பிள்ளைகளாக நினைத்து வளர்க்கிறார்கள்...அவற்றின் மீது அன்பும் பரிவும் காட்டுகிறார்கள்... அதுபோல் மற்றவர்கள் மீதும் அன்பாக நட்புறவோடு பழகிறார்கள்..என்ன அவர்களை அச்சுறுத்தவும் ஏமாற்றமும் என்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்து...அதுவும் குறிப்பாக ரீன் ஏச் கூட்டம்...இந்த முதியவர்களின் முதல் எதிரிகள் எவை தெரியுமா...சிறுவர் கையில் உலாவும் கையடகத் தொலைபேசிகள்...! முதுமை என்பது வாழ்வின் ஒரு கட்டம்...அது கழிக்கப்பட்ட கைவிடப்பட்ட நிலையல்ல....! அவர்களுக்கும் இளையவர்களுக்கு அவர்கள் வயதில் வரும் ஆசைகள் போல...ஆசைகள் இருக்கு...அதை இளையவர்களும் மற்றோரும் புரிந்து நடந்து அவர்களின் அந்த வயதுக்குரிய வாழ்வை...மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்...!

0 - 5 வயது குழந்தைப் பருவமாக கழிய... 5 -15 வயது அறியாமையில் கழியும்... 15 - 18 கல்வியில் கழியும் 18 - 55 வரை இளமை என்று ஏதோ சொல்லி வாழ்க்கை ஓடும்... 55 - 80 வரை...சும்மா இல்ல 25 வருடங்கள் முதுமைக்குள்...தள்ளப்பட்டு சீரழிக்கப்பட்ட...அல்லது கழித்துவிடப்பட...அவ்வயதினர் அதற்குள் சந்திக்கும் மன உளளச்சல்கள் சொல்லில் வரைய முடியாதவை...இதை 20 திலோ 30 திலோ இருப்பவர்கள் சிந்திப்பதில்லை... அவர்களுக்கு அப்ப சிந்தனை தாங்கள் சிரஸ்சீவி இளமை படைத்தவர்கள் என்பதாகவே இருக்கும்...இந்த நிலையை எமது சமூகத்தில் தெளிவாகக் காணலாம்...எனியும் அதை புலத்திலோ...தாயகத்திலோ... அனுமதிக்கக் கூடாது...!

இப்படி முதியவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக.. பாரபட்சமாக...கழித்துவிட்ட மனிதர்களாக நோக்குவது எமது தமிழ் சமூகத்தில் நிலவும் மிகக் கேவலமான ஒரு பார்வை (அதிக சந்தர்ப்பங்களில்)...என்றே சொல்வோம்...! மேற்குலக அரசுகளை இது விடயத்தில்.. மிகவும் பாராட்ட வேண்டும்...முதியவர்களின் உணர்வுகளுக்கும் வாழ்வுக்கும் மதிப்பளிப்பவர்களாக அவர்கள் பெரிதும் செயற்படுகிறார்கள்...! எங்கள் இளையவர்களில் அந்தச் சிந்தனை இப்போ மிகவும் அருகி வருகிறது...அவர்களின் சிந்தனை தாங்கள்...ஏதோ புதிய பிறவிகள் என்பது போன்ற மாயத் தோற்றம் வளர்ப்பதாகவே இருக்கிறது...முதியவர்களுடனா தொடர்பாடல் உறவு நிலை விரும்பாதவர்களாகவே அநேகர் இருக்கின்றனர்...பெற்றோரும் அதை ஊக்கிவிக்கின்றனர்...காரணம் தான் புரியவில்லை...!

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் பாவனையும் என்பது மனிதனின் சில நடவடிக்கைகளை மாற்றலாம்..ஆனால் வாழ்வியலின் அடிப்படைகளான அன்பு பந்தம் பாசம் காதல் அரவணைப்பு பரிவு உறவு கருணை மற்றும் இவற்றின் மூலமான நித்திய மன அமைதி...ஆகியவற்றை வழக்க முடியாது அல்லது அதன் தேவைகளை இல்லாமல் செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது...இந்த அடிப்படையை...இளையவர்கள் இப்போதே புரிந்து கொள்ள வேண்டும்..அதுவும் சுய தேடல் மூலம்...! மற்றவர்களை எதிர்பார்த்திராமல்... தாங்களே வலிந்து முதியவர்களை இனங்கண்டு உறவாட வேண்டும்...அவர்களை தனிமைப்படுவதை அனுமதிக்கக் கூடாது....அப்படியான ஒரு பாசப் பிணைப்பை பெர்றோரும் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும்...! மனிதர் நாம் சமூக வாழ்வியல் நடத்தையைக் காண்பிப்பவர்கள்...எனவே எவரையும் தனித்து விட அனுமதிக்கக் கூடாது...!

இந்த இடத்தில் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்... இது சுய புகழ்ச்சியல்ல... எங்கள் இயல்பு... நாங்கள் சிறியவர்களாக இருக்கும் போதே எங்களுக்குள் ஒரு ஆதங்கள்... ஏன் இந்த முதியவர்களைப் கழித்து விட்ட பிறவிகளாக வேற்று மனிதர்களாக எமது சமூகம் பார்க்கிறது என்று..அதனால் பல சந்தர்ப்பங்களில்...முதியவர்களையே நாடிச் சென்று...உரையாடுவது உண்டு..அப்போ அவர்களின் உணர்வுகளை ஏக்கங்களை உள்வாங்கக் கூடிய நிலை இருந்தது....இப்பவும் செய்வதுண்டு....அதனால் குருவிகளுக்கு முதியவர்கள் தான் அதிகம் நண்பர்களாக இருக்கிறார்கள் என்று கேலியும் செய்வார்கள்..நாங்கள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை...! முதியவர்களுடன் உரையாடுதல் என்பது எங்களுக்கு ஒரு ஆறுதலையும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்து வாழ்வது போன்ற ஒரு பாச உணர்வையும் தருகின்றது..அவர்களின் உணர்வுகளை அனுப பாடங்களை கற்க வேண்டும் என்ற ஆதங்கமும்...அவர்களை நாடிப் போக ஒரு காரணம்.....! இதை ஏன் இன்றைய சிறுவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்...???! அதற்கு பெற்றோர் சொல்லும் "ஜென்ரேசன் கப்" என்ற தப்பான அர்த்தம் கொள்ளுதலும்...காரணமாகலாம்... அப்படி கப் இருந்தால் எப்படி பல்கலைக்கழகங்களுக்குச் சென்று முதிய பேராசிரியர்களிடm உங்களுக்கான நவீன கல்வியைப் பெறுகின்றீர்கள்..எப்படி அவர்கள் ஆராய்ச்சிகளுக்காக உங்களை வழி நடத்துகின்றனர்...! அதே அனுபவத்தை எங்கள் வீட்டுச் சூழலில் வாழும் பெற்றோரும் பெற்றே இருப்பர்..பெற முடியும்..அதற்காக வழிகாட்டுதலை வழங்குங்கள்...அதன் பின் இந்த ஜெனரேசன் கப் என்பது அவசியமற்றதாகும்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Mathan Wrote:புலத்தில் உள்ள முதியோர்களில் சிலர் கவனிக்கப்படுகின்றார்கள் சிலர் உதாசீனப்படுத்தப்படுகின்றார்கள். அவர்கள் சரியாக கவனிக்கப்படுகின்றார்களோ இல்லையோ என்ற பிரைச்சனையை விட முக்கியமானது ஒன்று இருக்கின்றது அதுதான் தனிமை, தாயகத்தில் உறவுகள் நட்புகள் சூழ தமக்கு நன்று அறிமுகமான இடத்தில் இருந்துவிட்டு புலத்திற்கு வருபவர்கள் இங்கு கட்டிட காட்டில் தனிமையில் இருந்து மனதளவில் வாடி வதங்குகிறார்கள். புலத்தில் பிள்ளைகள் மருமக்கள் வேலைக்கு சென்றபின்பு வீட்டில் தனிமையில் இருக்கும் இவர்களுக்கு நேரத்தை எப்படி கழிப்பது என்பதே முக்கிய பிரச்சனை. இந்த பிரைச்சனையை எப்படி தீர்ப்பது?

சரியா சொல்லியிருக்கிறீர்கள் மதன் அண்ணா...இங்கு வயது வந்தவர்கள் முகங்களைப் பார்க்கும் போது அந்தத் தனிமையின் ஏக்கங்கள் தெரியும்...தனிமை என்பது கூடியிருக்கும் கூட்டத்தைவிட அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை இழக்கப்படுவதால் ஏற்படுகிறது என நினைக்கிறேன்...தெரியாத கட்டமைப்புக்களும், புரியாத மொழியும் என்று பல விதமான காரணிகளால் தனிமை உருவாக்கப்படுகிறது முதியவர்கள் மனநிலையில்.....அத்துடன் கூடுதலான முதியவர்கள் தான் குழந்தை பராமரிக்கும் பணிக்கு(தங்கள் பிள்ளைகள் வீட்டில்) அமர்த்தப்பட்டு இருப்பார்கள்.....கவலையான விடயம் என்ன என்றால்...முதுமைப் பருவமும் குழந்தைப் பருவமும் உள்ளத்தில் ஒன்று தானே...அந்தக் குழந்தைகளிடமே திரும்பவும் குழந்தை பராமரிக்கும் பொறுப்பு விழுவது மிகவும் கவலைக்குரிய விடயம்......இத்தனை வருடமும் தங்கள் குழந்தைகளைப் பராமரித்தவர்கள் ஓய்வு பெறவேண்டிய காலத்தில் மீண்டும் குழந்தைப் பாரத்தை சுமக்க வைக்கப்படுகிறார்கள்.....புலம் பெயர்ந்த முதியவர்கள் தான் கூடுதலான தாக்கத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள்....சுயமாக செய்ய முடியாத சூழ்நிலையில் ஏதோ காலம் முடிகிறது தானே வாழ்ந்து விட்டு போவோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு சாமாளிப்புடனான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கும் முதியவர்கள் எண்ணிக்கையில் குறைவிருக்காது.....
" "
" "

Reply
#5
சும்மா இல்ல 25 வருடங்கள் முதுமைக்குள்...தள்ளப்பட்டு சீரழிக்கப்பட்ட...அல்லது கழித்துவிடப்பட...அவ்வயதினர் அதற்குள் சந்திக்கும் மன உளளச்சல்கள் சொல்லில் வரைய முடியாதவை...இதை 20 திலோ 30 திலோ இருப்பவர்கள் சிந்திப்பதில்லை... அவர்களுக்கு அப்ப சிந்தனை தாங்கள் சிரஸ்சீவி இளமை படைத்தவர்கள் என்பதாகவே இருக்கும்...இந்த நிலையை எமது சமூகத்தில் தெளிவாகக் காணலாம்...எனியும் அதை புலத்திலோ...தாயகத்திலோ... அனுமதிக்கக் கூடாது...!



குருவி அண்ணா கூறியது போல காவோலை விழ குருத்தோலை சிரிக்கும் தானும் ஒரு நாள் காவோலையாக மாறும் நிலை உண்டாகும் என்பதை நினைக்காமல்....இங்கு பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் ஏக்கங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பவார்கள் மிக குறைவு....
" "
" "

Reply
#6
«¸¾¢ ¸¡Í ÅÕõ «ÐÅà ±øÄÕõ À¡À÷¸ø þøÄÊ ???????????????????????????
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#7
நான் பார்த்த இரு உண்மைச் சம்பவங்கள். இரண்டிலுமே முதியவர்கள் ஆங்கிலேயர்தான்.

1. முதியோருக்கென பிரத்தியேகமாக உள்ள மருத்துவமனையொன்றில் எனது நண்பனின் தந்தை சிறிதுகாலம் இருக்கவேண்டியேற்பட்டபோது அவரைப் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட அனுபவம். எனது நண்பனின் தந்தையின் படுக்கைக்கு அடுத்ததாக இருந்த கட்டிலில் ஒரு ஆங்கிலேய முதியவர் இருந்தார். அவருக்குக் காது கேட்காது, கண் பார்வையும் சற்றுக் குறைவு, நடப்பதற்கும் சிரமம். அவரை எவருமே பார்க்க வருவதில்லையென்று நண்பனின் தந்தை கூறினார்.

நான் அங்கு நின்றபோது, அந்தக் கிழவர் தனது மாலைச் சாப்பாட்டை ஒருவாறு முடித்துவிட்டு, சற்று எழுந்து நடக்க ஆசைப்பட்டார். அவருக்குக் கட்டிலில் இருந்து கீழே காலை வைக்கவே 3 - 4 நிமிடங்கள் பிடித்தது. மெதுவாக கையைக் கட்டிலில் ஊன்றியவாறே நடக்க எத்தனிக்கத் தாதி வந்து சத்தமாக (காது கேளாதென்றபடியால்) அவரைத் திரும்பவும் கட்டிலில் சென்று படுக்குமாறு கூறினார். கிழவனும் பணிந்து நடப்பதுபோல் பாசாங்குசெய்து, தாதி போனவுடன் மீண்டும் தனது நடை முயற்சியில் ஏடுபட்டார். தாதி மீண்டும் வந்தாள். இப்படியே அவர் நடக்க முயற்சிப்பதும், தாதி வந்து அவரைப் படுக்க வைக்க முயற்சிப்பதுமாகப் நேரம் கழிந்தது. கிழவர் அதிகம் ஆசைப்படவில்லை. தனது கட்டிலைச் சுற்றி ஒருதடவை நடந்தால் போதும் என்றுதான் ஆசைப்பட்டார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அவருக்கு உதவிசெய்யத் தோன்றியது. எனவே அவர் அடுத்தமுறை நடக்க எத்தனித்தபோது உதவிக்குச் சென்றேன். தாதி அவசரமாக வந்து எனக்கு நல்ல ஏச்சுத் தந்தாள். முதியவர் விழுந்து உடைந்தால் தங்களுக்குத்தான் பிரச்சினை எனது தாதியின் வாதம். அதிலும் நியாயம் உள்ளதாகப்பட்டது. வயது முதிர்ந்த காலத்தில் மேற்குலகில் வசதிகள் இருந்தாலும், தனியே வாழக்கூடாது என்று அப்போதே தீர்மானித்துவிட்டேன்.
<b> . .</b>
Reply
#8
இரண்டாவது சம்பவம். இது எதிர் வீட்டில் குடியிருந்த கிழவியைப் பற்றியது. கிழவிக்கு 90 வயதுக்கு மேல் இருக்கும். தனியாகத்தான் வசித்து வந்தார். பிள்ளைகள் தூர இடங்களில் வசிக்கின்றனர். எப்போதாவது வருவர், வீட்டைச் சுத்தம் செய்வர், திரும்பிப் போய்விடுவர். கிழமைநாட்களில் கவுன்சிலில் இருந்து முதியோரைப் பராமரிக்கும் வண்டி வரும், கிழவியை அழைத்துச் சென்று, பிற்பகலில் மீண்டும் கொண்டுவந்து விடும். மாலை நேரங்களில் பராமரிப்பு வேலை செய்யும் கறுப்பினப்பெண் ஒருத்தி வந்து உணவைக் கொடுத்துவிட்டுச் செல்வாள் (இதுவும் கவுன்சிலின் சேவை என்றே நினைக்கிறேன்).

ஒருதடவை பராமரிப்புப் பெண் வந்து கதவைத் தட்டியும் கிழவி திறக்கவில்லை. கிழவிக்கு ஏதாவது நடைபெற்றிருக்கலாம் என்று நினைத்து அயலாரின் முயற்சியுடன் பொலிஸும், தீயணைப்புப் படையும் வரவழைக்கப்பட்டது. அவர்கள் பின்கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, கிழவி கீழே இறங்கமுடியாமல் படுக்கயறையிலேயே இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர், கிழவியின் வீட்டுத் திறப்பு எப்போதும் மிதியடிக்குக் கிழேயே இருக்கும். பராமரிப்புப் பெண் வந்து இலகுவாகத் திறந்து உணவைப் பரிமாறிவிட்டுப் போய்விடுவாள்.

சில வாரங்களுக்கு முன்னர் திடீரென இரட்டைக் கண்ணாடி பொருத்தும் நிறுவனமொன்றின் வண்டி வந்து கிழவியின் வீட்டுக்கு கண்ணாடிகளை மாற்றின்னர்கள். கிழவி குளிர்காலத்தில் கஸ்டப்படாமலிருக்கப் பிள்ளைகள் இரட்டைக் கண்ணாடி பொருத்துகின்றனர் என்று நான் நினைத்தேன். தற்போது வீடு திருத்தப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. அயல் வீட்டுக்காரரிடம் கிழவிக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது, கிழவி சில வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், பிள்ளைகள் வீட்டை விற்றுப் பணத்தைப் பங்கிடப் போவதாகவும் அயல் வீட்டுக்காரர் கூறினார்.

தற்போது, தமிழர்களே அதிகம் வந்து வீட்டைப் பார்வையிடுகின்றனர். எப்படியும் ஒரு தமிழ்க்குடும்பம் வந்துவிடுமென்றே நினைக்கிறேன்.
<b> . .</b>
Reply
#9
மேற்கூறிய சம்பவங்கள் போன்று புலத்தில் உள்ள முதியோருக்கு அனுபவங்கள் தற்போது ஏற்படாது என்றே எண்ணுகின்றேன். எனினும், 10 - 20 வருடங்களில் இதைவிட மோசமாக நடபெற்றாலும் ஆச்சரியம் இல்லை.
<b> . .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)