IP முகவரியும், கணினி இருக்கும் இடமும்..
ஏதோ ஒரு ஊரிலிருந்து உங்களுக்கு ஒரு அஞ்சல் கடிதம் வருகிறது .. அதை உங்களுக்கு அனுப்பியவரின் ஊரைப் பற்றிய தகவல் இருக்கும் .. அது பெயரில்லாமல் எழுதிய மொட்டைக் கடிதமானாலும் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அவர் அனுப்பிய ஊரின் அஞ்சல் முத்திரை இருக்கும் .. இது நமக்குத் தெரியும் .. இதேபோல் நமக்கு வரும் இ-மெயிலை அனுப்பியவர் இருக்கும் ஊரைப் பற்றிய தகவல் இருக்குமா .. ? பதில் என்னவென்றால் ஆம்.. என்பதுதான் .. !
இணையத்தில் இணையும் ஒவ்வொரு கணினிக்கும் முகவரி தரப்படுகிறது.. இதனை IP முகவரி என்கிறோம். இந்த முகவரி நமக்குத் தெரிந்தால் அந்தக் கணினி எந்த ஊரில் அல்லது எந்த நாட்டில் இருக்கிறது என்று நம்மால் கூறிவிட முடியும். உதாரணமாக 80.145.88.48 இந்த IP முகவரி உடைய கணினி பிரேசில் நாட்டில் உள்ளது..
கொஞ்சம் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நமக்கு வரும் இ-மெயில்கள் எங்கிருந்து வருகிறது என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் ஏதாவது தீச்சுவரை உங்கள் கணினியில் நிறுவியிருந்தீர்களானால் உங்களுடைய கணினியுள் உங்களுக்குத் தெரியாமல் எத்தனைபேர் நுழைய முயற்சிக்கிறார்கள் என்றும் அவர்களின் ஐ.பி முகவரியையும் தெரிந்துகொள்ள முடியும். அந்த ஐபி முகவரி மூலம் அவர் எந்த ஊரிலிருக்கிறார் என்றும் கண்டுபிடிக்கலாம்.. சில நாட்களுக்கு முன் எத்தனை பேர் என்னுடைய கணினியுள் எனக்குத் தெரியாமல் நுழைய முயற்சிக்கிறார்கள் என்று ஸோன் அலாரம் என்ற தீச்சுவர் மூலம் கணக்கிட்டபோது ஒரு நாளில் ஆயிரக்கணக்கான தடவை நுழைய முயற்சி நடந்துள்ளது என்பதையறிந்து பிரமிக்குள்ளானேன் என்பது வேறு விஷயம்.
உங்களுக்கு இ-மெயில் அனுப்பியவரின் ஐபி முகவரியைக் கண்டுபிடிப்பது எளிது... உதாரணமாக யாகூ மெயிலை எடுத்துக்கொள்வோம்.. முதலில் உங்களுக்கு வந்த மெயிலை திறங்கள்.. பின்னர் அந்த மெயிலில் வலது மூலையில் உள்ள full headers என்பதைச் சுட்டவும். சுட்டியவுடன் உங்களுக்கு வந்த மின் மடல் பற்றிய விரிவான தகவலைக் காட்டும்.. அதில் உங்களுக்கு மடல் அனுப்பியவரின் ஐபி முகவ்ரி இருக்கும். அவ்வளவுதான் நீங்கள் ஐபி முகவரியைக்கண்டுபிடித்துவிட்டீர்கள்.. அவரின் ஐபி முகவரியை வைத்து இடத்தைக் கண்டுபிடித்துவிடலாம் .. எனவே அவர் சென்னையிலிருந்துகொண்டு தான் அமெரிக்காவிலிருப்பதாய் உங்களை நம்பவைக்கமுடியாது.
ஐபி முகவரியை வைத்து இடத்தைக் கண்டுபிடிப்பது எப்படியென்றால் அது மிக எளிது.. அதற்காகச் சில தளங்கள் இயங்குகிறது.. நீங்கள் அந்தத் தளத்துக்குச் சென்று ஐபி முகவரியைக் கொடுத்தீர்களானால் எந்த இடம் என்று சொல்லிவிடும். இதற்காக நான் வழக்கமாகப் பயன்படுத்தும் தளம் ஜியோபைட்ஸ் (
http://www.geobytes.com/IpLocator.htm) என்ற தளம் . இன்னொரு தளமும் (
http://www.ip2location.com/free.asp) உள்ளது.. இதையும் முயற்சித்துப்பார்க்கலாம்.
இத்தளத்துக்குச் சென்று ஒரு ஐபி முகவரியைக் கொடுத்தீர்களானால்.. உதாரணமாக ... எனக்கு அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு மெயிலில் இருந்த ஐபி முகவரி 216.39.67.119 . இது உண்மையிலேயே அமெரிக்காவிலிருந்து வந்ததுதானா என்று அறிய
http://www.geobytes.com/IpLocator.htm சென்று 216.39.67.119 என்பதைக் கொடுத்தால் அது இந்த முகவரி அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் என்ற இடத்திலிருந்து வந்திருக்கிறது என்று சொல்லிவிடும்..
இன்னும் இத்தகவலைப் பல வழிகளில் பயன்படுத்தலாம்.. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.. சுவாரசியமான துப்பறியும் விளையாட்டு இது .. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி - முத்து
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>