Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாவிடயத்தில் இந்தியத்தமிழர்களின் நிலை
#1
இலங்கையில் தமிழ் மக்கள் இறந்தபோதெல்லாம் செய்திவெளியிட மறந்த இந்திய ஊடகங்கள் குறிப்பாக சன்டிவி போன்ற டிவிகள் கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தது முதல் அனைத்து செய்திகளையும் ஆரவாரத்ததுடன் வெளியிட்டது கவலை தருகிறது. இப்போது அவர்கள் அடங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் செய்தது குறுகிய கண்ணோட்டத்துடன் இருந்தாலும் இந்தியத்தமிழ் மக்களிடையே மறைந்திருந்த மரத்துப்போயிருந்த புலிகளுக்கான ஆதரவை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது என்று சொல்லலாம். பெரிய பெரிய படித்த தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாம் மனம் திறந்து தங்கள் கவலைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். இதற்கு இநதிய உளவுத்துளை "ரா" தான் காரணம் என்றும் கூறி உண்மையை ஒத்துக்கொண்டனர்.

சாதாரண மக்களும் கருணா செய்தது தவறு அவன் போராட்டத்தையே குழப்பிவிட்டான் என பேசிக்கொண்டனர். அது மட்டுமன்றி கட்டுக்கோப்பான இயக்கம் கலைந்துவிட்டதே ஒரு களங்கம் விடுதலைப்புலிகளின் பெயருக்கு ஏற்பட்டுவிட்டதே என வருந்தியதைகாணக்கூடியதாக இருந்தது.

கருணாநிதி வழக்கம் போல ஏதாவது சொல்லியே ஆகவோண்டும் என்பதற்காக விடுதலைப்புலிகள் சகோதரயுத்தத்தை நிறுத்தவேண்டும் என்று நிருபர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூறிவைத்தார். பாவாம் அவர் என்ன செய்வார் தேர்தல் நேரம். வைக்கோ மட்டும் தான் இதை நன்கு புரிந்துகொண்டு எல்லாம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ராமதாசு வாயைத்திறக்கவில்லை என நினைக்கிறேன். ரஐனி ரசிகளுடன் ஏற்பட்ட மோதலால் இதைப்பற்றி எண்ண நேரம்கிடைத்திருக்காது.

எதுஎப்படியோ மக்கள் புலிகள் பக்கம் எனபது தெரிந்துவிட்டது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)