Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாற்சந்தியில்............
#21
சரி செய்தி சொல்லேலை

உந்த யாழ்ப்பாணத்துக் கம்பஸ் காரங்கள் தான் பொங்குதமிழ் அது இது எண்டு போராட்டங்களோடை ஓடித்திரிஞ்சவங்கள் பெராவிலையிருந்து லீவிலை வாறவை ஊர் சுத்தி கள்ளும் அடிச்சுப் போட்டு திரியுறாங்கள் எண்டு இவையளுக்கு இளப்பம்

போன மாசம் என்ன நடத்திச்சுது தெரியுமோ பெரதெனியா கம்பஸிலை ஏதோ பிரச்சனையாம் கம்பசை இழுத்து மூடிட்டாங்கள் பொடியள் எல்லாம் யாழ்ப்பாணத்துக்கு அள்ளுப்பட்டிட்டாங்கள்

சொல்லவே வேணும் இவ்வளவு நாளும் சொல்லி வந்த கதையளுக்கு முற்று வைக்கிறமாதிரி ஓடி ஓடி தமிழ்க் கூட்டமைப்புக்கு வேலை செஞ்சாங்கள் வருங்கால எஞ்சினியர் மாரெல்லாம் நீளக்காற்சட்டையையும் மடிச்சு விட்டுக் கொண்டு கொடியளோடையும் தோரணத்தோடையும் அலைஞ்ச காட்சி சாய்.... என்ன சோக்காய் இருந்துச்சு

இனி தமிழரின்ரை எழுச்சியை ஆராலும் தடுக்கேலாது படிக்கிற பொடியளின்ரை கையிலைதான் அது
Reply
#22
கதையோடை கதையாய்

ரவுணுக்கை ஏதோ சாமான் வாங்க வந்தவங்களாம் பெரதெனியாவிலையிருந்து வந்த பெடியள் ரண்டு பேர்
ஸ்டான்லி ரோட்டிலை கடை வாசல்ல வைச்சு தோழர் ஒருத்தர் சொன்னாராம் தம்பியவை அவைக்கு கொடிபிடிக்கிறியள் எப்பிடி கொழும்பு திரும்பிப்போப்போறியள் எண்டு பார்ப்பம் எண்டாராம்

அவன் சொன்னானாம் அண்ணை இப்பவும் கொழும்புக்கு போக பாஸுக்கு கிளியரன்சு தாரது தாங்கள் தான் எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறார் பாதையும் எப்பவோ திறந்து லங்காமுடிதவும் சேவையை நிற்பாட்டிட்டுது எண்டு

உது தேவையோ
Reply
#23
இது ஒரு கற்பனைக் கதை

அம்மான்ரை அண்ணர் "அடியுங்கோ அடியுங்கோ" எண்டு சொல்லுற குரல் தான் இப்ப மட்டக்களப்பு பக்கமெல்லாம் கேட்குதாம்

அண்ணை றெஜி தன்ரை ஆட்கள் கொஞ்சப்பேரோடை கதைச்சுக் கொண்டிருக்கேக்கை ஒருத்தர் தற்செயலா வோக்கியை ஓன் பண்ணிராராம் உடனை "அடியுங்கோ அடியுங்கோ" எண்டு றெஜிஜின்ரை குரல் கேட்குதாம் இவர் திடுக்கிட்டுப் போய் றெஜியைத் தனியக் கூப்பிட்டு விசயத்தைச் சொன்னாராம்

அதுக்கு அவர் சிரிச்சுக் கொண்டு சொன்னாராம் கருணா எங்கை எண்டு தெரியாமலே அவனுக்காக அடிபடுறியள் ஒரு உற்சாகத்துக்கு இருக்கட்டுமன் எண்டுதான் என்ரை குரலை றெக்கோட் பண்ணி வோக்கிலை விட்டிருக்கிறன் கேட்கிறவைக்கு ஒரு உணர்ச்சி சுதந்திர தாகம் மட்டக்களப்பு பற்றிய எண்ணம் வரும் எண்டாராம்
Reply
#24
அம்மாவின்ரை அமைச்சரவையிலை 31 பேர் பதவியேற்றிட்டினமாம் இதிலை என்ன விஷேசம் கண்டியளோ சிறுபான்மை மக்களுக்கு நல்லதொரு தீர்வு தருவினம் எண்டவையாலை தமிழர் அஞ்சு பேரைக் கூட அமைச்சராகவோ பிரதியமைச்சர் ஆக்கவோ முடியேலை
தங்களை தமிழர் எண்டு சொல்லுர ரண்டு பேர்
1) கதிர்காமத்தான்
2) டக்ளஸ்

இவை ரண்டு பேருக்கும் தான் இடம் இதிலையிருந்தே தெரியேல்லையே உரிமையை அடிச்சுத் தான் பறிக்கவேண்டியிருக்கெண்டு
Reply
#25
கருணா வெகுவிரைவிலை ஆமியோடை சேரலாமாம் அவனோடை நிற்க்கிற கொஞ்சப் பேருக்கும் வேறை வழியில்லையாம் காட்டுக்கை திரிஞ்சு வளந்தவங்களுக்கு தொப்பிக்கலைக்கை உள்ளடவும் தெரியுமெண்டு கருணாவுக்கு விளங்கிட்டுது

இனியென்ன ஆமியோடை சேர்ந்து மட்டக்களப்பை அபிவிருத்தி செய்யட்டுமன்

ஆனால் சிலர் சொல்லினம் அம்மான் ஆமிக்கும் பயமாம் ஆனையிறவிலை அடிபட்டதிலை அவைக்கும் எரிச்சலாம் அதிலையும் இப்ப சாறு பிழிஞ்ச கறிவேப்பிலை மாதிரி ஆகிட்டார் அவங்களுக்கும் தேவைப்படாது

அம்மான் ஓடிடுவார் வாலுகள் ஆமியோடை சேருமாம்
Reply
#26
உவர் குத்தியன் பழையபடி வெளிக்கிட்டிட்டாராம் வாலாட்ட
அம்மா கேட்டபடி புனர்வாழ்வு அமைச்சைக் குடுக்கேலை எண்டு கவலைதானாம் ஆனாலும் கெதியிலை இன்னுமொரு எலக்ஷன் வரத்தான் போகுது அதுக்கு இப்பவே றெடியாகிறாராம் வர்ற எலக்ஷனிலை மூண்டு சீற்றைத் தன்னும் பிடிச்சு புனர் வாழ்வு அமைச்சை அம்மாட்டை வாங்கிக் காட்டுறன் எண்டாராம்
Reply
#27
என்ன வல்லை எல்லமே வெளியாகத்தான் இருக்கு

ம் முனியப்பர் அருள் பாலிப்பாரோ ?
[b] ?
Reply
#28
உப்பிடித்தான் மோனை நானும் முந்திப் போகவரேக்கை செம்மணி வெளியைப் பார்த்து யோசிப்பன் என்ன ஒரே ஓவெண்ட வெளியாய் இருக்கெண்டு

உவன் துலைவான் சோமரத்ன சொன்னாப் பிறகுதான் உது சும்மா வெளியில்லை காணாமற் போன பெடி பெட்டையள் எல்லாம் இதுக்குள்ளைதான் இருக்கெண்டு தெரிஞ்சாப்பிறகு திகைக்கெடியாய் போச்சுது

அதுசரி சோமரத்தினவுக்கும் கூட்டாளிகளுக்கு என்ன நடந்ததுவெண்டாவது ஆருக்காவது தெரியுமோ?
Reply
#29
இது வெளியாலை தெரிஞ்ச செய்தி தெரியாமல் நிறைய நடக்குது


புலிகளின் ஊர்காவற்துறை அரசியல்துறை செயலகம் மீது ஈ.பி.டி.பியினர் வெடிகள் கொழுத்தி மிரட்டல்
யாழிலிருந்து எழின்மதி திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 7:57 ஈழம்

யாழ் தீவகம் ஊர்காவற்துறை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம் மீது நேற்று முன்தினம் மாலை ஈ.பி.டி.பி தேசவிரோதிகளால் வெடிகள் கொழுத்திப் போடப்பட்டதுடன், கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் மாலை 6.10 க்கு ஊர்காவற்றுறையிலுள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகத்துக்கு முன்பாக பிக்கப் வாகனமொன்றில் வந்த ஈ.பி.டி.பி தேசவிரோதிகள் 12 பேரும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினரும் அரசியல் செயலகம் மீது வெடி கொழுத்திப் போட்டதுடன் அரசியல் பொறுப்பாளர் ஈழமாறனை சுடுவோம் எனவும் கொலைமிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.




முக்கியமா கம்பஸ் பொடியளை குறிவைபட்டிருக்காம் அடுத்த எலக்ஷன் வரமுதல் இவங்களை முறிச்சுக் கிடத்தவேணும் எண்டு தோழர் ஒருத்தர்(இந்திரர்) பப்பிளிக்கிலை சொன்னாராம்
Reply
#30
அடுத்த தேர்தலிற்கு அந்த கட்சியே இருக்காதாம் நீங்களும் ஒரு கதை
[b] ?
Reply
#31
கருணா போன்றவர்கள் உள்ளவரை இவர்களுக்கும் வாழ்வு உண்டு
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)