04-30-2004, 04:48 PM
[align=center:a6db4676e1]<img src='http://www.kumudam.com/sinegithi/010404/pg-9t.jpg' border='0' alt='user posted image'>[/align:a6db4676e1]
அலுவலகம் செல்லும் பெண்கள், எவ்வளவுதான் ஃப்ரெஷ்ஜாக வீட்டிலிருந்து கிளம்பினாலும் மதியத்துக்குள்ளாகவே, அவர்களது முகம் வாடி வதங்கிப் போய்விடும்.
அதிலும் நீங்கள் டூ_வீலரில் அலுவலகம் செல்லும் பெண்ணென்றால் அவ்வளவுதான்... மற்ற வாகனங்களிலிருந்து வரும் புகை, தூசி எல்லாமே உங்கள் முகத்தில்தான்! இதற்கு என்ன செய்வது?
ஸ்டெப்_1
இந்த அழுக்கை முறையாக எடுக்கவில்லை என்றால், அது நிரந்தரமாக முகத்தில் தங்கி கரும்புள்ளிகளை உருவாக்கிவிடும். எனவே இரவு படுக்கும் முன்பு, முகத்தில் சிறு சிறு துவாரங்களில் இருக்கும் அழுக்குகூட நீங்கும்படி க்ளென்சிங் செய்ய வேண்டியது முக்கியம். முகத்திலுள்ள அழுக்கை முழுவதுமாகப் போக்க க்ளென்சர் என்கிற காஸ்மெடிக் பொருள் உதவுகிறது. உங்களுடைய சருமத்தின் தன்மைக்கு ஏற்ற க்ளென்சரைத் தேர்வு செய்யுங்கள். மிகவும் வறண்ட சருமம் உடையவர்கள் க்ளென்சிங் மில்க் உபயோகிக்கலாம்.
முகத்தில் பரு மற்றும் 'acne' பிரச்னை உள்ளவர்கள், க்ளென்சிங் க்ரீம்தான் போடவேண்டும். நார்மலான சருமம் உடையவர்கள், க்ளென்சிங் ஃபேஸ்வாஷ் உபயோகிக்கலாம்.
இரவு படுக்கும்முன்பு க்ளென்சரை உபயோகிப்பதுதான் நல்லது. க்ளென்சரை விரல்களில் தொட்டு, முகத்திலும் கழுத்திலும் தடவ வேண்டும். மூன்று நிமிடங்களுக்கு மென்மையாகவும் பின்னர் அழுத்தியும் மசாஜ் செய்த பின், வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரை முகத்தில் அடித்து, முகத்தை ஒரு டவலால் மென்மையாகத் துடைக்க வேண்டும்.
ஸ்டெப்_2
க்ளென்சிங் செய்த பின்னரும் ஏதாவது அழுக்கு இருந்தால் அதை டோனர் (TONER) நீக்கிவிடும். பன்னீர் ஒரு நல்ல டோனர். கொஞ்சம் பஞ்சில் பன்னீரை நனைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியை மென்மையாகத் துடையுங்கள். முக்கியமான விஷயம், கண்களைச் சுற்றியும், வாயைச் சுற்றியும் டோனர் கொண்டு துடைக்கக் கூடாது.
ஸ்டெப்_3
டோனர் வைத்து முகத்தைத் துடைத்தவுடன் கொஞ்சம் மாயிஸ்சுரைசரை எடுத்து, முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து பின் மென்மையாகத் தட்டியும், அழுத்தியும் தேய்க்க வேண்டும். இப்படி செய்யும்போது சருமத்தை அளவுக்கு அதிகமாக இழுக்கவோ, தேய்க்கவோ கூடாது.
ஸ்டெப்_4
நமது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்துதான், புதிய செல்கள் உருவாகும். இது இயற்கையாகவே நடக்கக்கூடியது. ஆனால், இருபத்தைந்து வயதுக்கு மேல், இறந்த செல்கள் நமது சருமத்திலேயே தங்க ஆரம்பித்துவிடும். இந்த செல்களை சருமத்திலிருந்து உதிரச் செய்ய முகத்தில் 'ஸ்க்ரப்' போடவேண்டும். பவுடர் மற்றும் க்ரீம் வடிவத்தில் இந்த ஸ்க்ரப் கிடைக்கிறது. இதை முகத்தில் தடவி, மேற்புறமாகவும் வெளிப்புறமாகவும் இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். பிறகு முகத்தைக் கழுவிவிட்டு, பன்னீரில் பஞ்சை நனைத்து மென்மையாகத் துடைக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை இதைச் செய்தால் நல்லது.
முகத்துக்கு என்ன சோப் போடுவது??
நாம் குளிப்பதற்கு உபயோகிக்கும் சோப் கெமிக்கல் தன்மையுடையது. நிறைய முறை சோப்பை முகத்தில் போட்டால் முகம் வறண்டு போய்விடும்.
ஆகையால், உடலுக்கு மட்டும் சோப்பை உபயோகித்துவிட்டு, முகத்துக்கு பிரத்யேகமாக வரும் 'ஃபேஸ் வாஷை' உபயோகியுங்கள். இது முகத்துக்குத் தேவையான ஈரத்தன்மையைத் தக்க வைக்கும்.
இது முக்கியம்!
வேலைக்குச் செல்லும் பெண்கள் கையோடு கொஞ்சம் டிஷ்யூ பேப்பரை வைத்துக்கொள்ளவேண்டும். இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை டிஷ்யூவால் முகத்தைத் துடைத்தால், அழுக்கு போய்விடும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உடையவர்கள் ட்ரை டிஷ்யூவும், வறண்ட சருமம் உடையவர்கள் வெட் (wet) டிஷ்யூவும் உபயோகிக்கலாம்.
அலுவலகம் செல்லும் பெண்கள், அழுத்தமான கலர்களில் லிப்ஸ்டிக் போடக்கூடாது. அவர்களுடைய நிறத்துக்கு, குறிப்பாக இதழ்கள் அமைந்திருக்கும் நிறத்துக்குப் பொருந்தும் கலர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். சற்றே கறுத்த உதடுகள் உடையவர்கள், லைட்கலர் லிப்ஸ்டிக் போடக்கூடாது. இப்போது லேட்டஸ்ட் ஃபேஷன், லிப்ஸ்டிக் போடாமல் வெறுமனே லிப் க்ளாஸ் மட்டும் போடுவதுதான். இதனால், இதழ்களுக்கு இயல்பான 'பளிச்' தோற்றம் கிடைக்கும்!
Kumudam.com