Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யார் தான் தியாகி.பொன்.சிவகுமாரன்?
#1
ஆனி 5ம் திகதி தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் 27வது தினத்தை நினைவு கூரும் முகமாகவும், ஆனி 6ம் திகதி தமிழீழ மாணவர்தினத்தை நினைவூட்டும் வகையிலும் அமைந்த இக்கவிதை தியாகி.பொன்.சிவகுமாரன்
அவர்களுக்கே சமர்ப்பணம்.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/ilakkiyam/sivakumar.jpg' border='0' alt='user posted image'>

<b>யார் தான் தியாகி.பொன்.சிவகுமாரன்?</b>
தமிழினத்தின் விடிவுக்காய்
தன்னையே அர்ப்பணித்து
தாயக உணர்வை மாணவர்க்கு ஊட்டியவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

விடுதலைப் போராட்டத்துக்காய்
விஸ்பரூபம் எடுத்து, முதன் முதலில்
வித்தாகிப் போனவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

அடக்கு முறைகளுக்கு
அடி கொடுக்க
ஆயுதம் எடுத்தவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

வெட்டுப் புள்ளிக்கு
வேட்டு வைக்க - புலி
வேடமிட்டவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

படுகொலைகளுக்கு
பதில் சொல்ல - தலைவன்
வழியில் வந்தவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

சிங்களப் படைகள்
சிறை பிடித்து சித்திரவதை செய்த போதும்
சிதையாத மனத்துடன் சீறிப்பாய்ந்தவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

எதிரிகள் சுற்றி வளைக்க, அவர்கள் கையில் அகப்படாது
எமனின் கைக்கு
ஏற குப்பியைக் கடித்தவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

மாணவர் சமுதாயத்துக்கு
மறக்கமுடியாத நாளை
மரணத்தால் எழுதியவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்


04/06/2004
கவிதன்
கனடா
Reply
#2
இத்தருணத்தில் தியாகி.பொன்.சிவகுமாரனை நினைவுகூர்ந்தது கண்டு மகிழ்வு....
வாழ்த்துக்கள்....
Reply
#3
ஆனாலும்,
ஆனி 5,அவருடைய நினைவு தினத்துக்கு அனுப்பமுடியலை என்று தான் கவலை சண்முகி.

கவிதன்
Reply
#4
கவிதன் நீங்கள் ஏற்கனவே அறிமுகமான ஒருவர் போல் இருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
இல்லை நண்பன் BBC,
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை
யாழ் இணையத்துக்கு
நான் புதிசு
ஆனாலும்
நாம் இப்போ
தெரிந்தவர்கள் தானே.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கவிதன்
Reply
#6
BBC Wrote:கவிதன் நீங்கள் ஏற்கனவே அறிமுகமான ஒருவர் போல் இருக்கின்றது.
பிபிஸி.. நம்ம பத்திரிகையாள சேதுத்தம்பி.. விறிசு விடுறார்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
தியாகி. பொன் . சிவகுமாரனின் நினைவுதினம் நாளை
[b][size=18]
Reply
#8
இளையவனே!
அண்ணா சிவகுமாரா!-தமிழ்
ஈழத்துக்காய் கீழிறங்கியது
உந்தன் பேனா...
துரொகியை அழிப்பதற்காய உன்
கரம் சேர்ந்தது சுடுகுழல்!
துடிப்புடன் பள்ளி
படிப்பதை பாதியிலே நிறுத்தி விட்டு
நிலையான தமிழீழமே-எம்
நிலைமாற்றும் என்றவனே!
மாணவ மணிகளின்-தன்
மான உணர்வினை தட்டி
எழுப்பியவனே!
அண்ணா சிவாகுமாரா...!
நீ மடிந்து இன்றுடன்
ஆண்டுகள் பல போனதய்யா-எனக்கு
நினைவு தெரியுமுன்னே-நீ
நிரந்தரமாய் உலகைப்பிரிந்தாய்
ஆனாலும் நான் -உன்
உணர்வுகளையறிவேன்-உன்
கொள்கை தானை அறிவேண்-ஏனெனில்
நானும் உன் போல-சிங்கள
கொடியர்களால் அடக்கப்பட்ட
மாணவன் என்பதால்-
[size=9][பிரசுரம்: வன்னித்தென்றல்]

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
Quote:படுகொலைகளுக்கு
பதில் சொல்ல - தலைவன்
படையில் இணைந்தவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

இந்தக் கருத்துச் சரியா கவிதன்...??! அண்மையில் தலைவர் பிரபாகரனுடைய வரலாறு சொல்லும் ஒளிவீச்சைப் பார்த்த போது அவர் சிவகுமாரனைப் பற்றியும் சொல்லி இருந்தார்... அவர்கள் புலிகளோடன்றி தனித்தே இயங்கியதாகவும் அவர்களின் போராட்ட முன்னெடுப்பு மாணவ சமூகத்தை மையமாகக் கொண்டிருந்ததாகவும் தங்களுக்கும் அவர்களுக்குமிடையே தொடர்புகள் இருந்திருப்பினும் பாதைகள் வெவ்வேறக இருந்தன என்றும் குறிப்பிட்டிருந்தார்...எனினும் இலட்சியத்தால் ஒருமித்தவர்களாக இருந்துள்ளனர்...!

நன்றி கவிதன் மற்றும் நிதர்சன்...காலத்தால் அழியாத காவிய நாயகர்களை நினைவலைகளால் பூஜித்ததற்கு...!

இன்றும் எம்மத்தியில் வெளிப்படையாக புலி ஆதாரவு என்று கொண்டு மனதுக்குள் போராட்டதின் தார்ப்பரியம் தேவை உணராதவர்களாக பலர் இருக்கின்றனர்...குறிப்பாக தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள்....! அவர்களுக்கு அவர்களின் நிலைப்பாடுகளின் தவறை இப்படியான நினைவலைகள் உணர்விருந்தால் உணர வைக்கும்...! மனது மரத்ததுகளுக்கு எதுவும் செய்யமுடியாது...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
kuruvikal Wrote:
Quote:படுகொலைகளுக்கு
பதில் சொல்ல - தலைவன்
படையில் இணைந்தவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

இந்தக் கருத்துச் சரியா கவிதன்...??! அண்மையில் தலைவர் பிரபாகரனுடைய வரலாறு சொல்லும் ஒளிவீச்சைப் பார்த்த போது அவர் சிவகுமாரனைப் பற்றியும் சொல்லி இருந்தார்... அவர்கள் புலிகளோடன்றி தனித்தே இயங்கியதாகவும் அவர்களின் போராட்ட முன்னெடுப்பு மாணவ சமூகத்தை மையமாகக் கொண்டிருந்ததாகவும் தங்களுக்கும் அவர்களுக்குமிடையே தொடர்புகள் இருந்திருப்பினும் பாதைகள் வெவ்வேறக இருந்தன என்றும் குறிப்பிட்டிருந்தார்...எனினும் இலட்சியத்தால் ஒருமித்தவர்களாக இருந்துள்ளனர்...!

நன்றி கவிதன் மற்றும் நிதர்சன்...காலத்தால் அழியாத காவிய நாயகர்களை நினைவலைகளால் பூஜித்ததற்கு...!

இன்றும் எம்மத்தியில் வெளிப்படையாக புலி ஆதாரவு என்று கொண்டு மனதுக்குள் போராட்டதின் தார்ப்பரியம் தேவை உணராதவர்களாக பலர் இருக்கின்றனர்...குறிப்பாக தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள்....! அவர்களுக்கு அவர்களின் நிலைப்பாடுகளின் தவறை இப்படியான நினைவலைகள் உணர்விருந்தால் உணர வைக்கும்...! மனது மரத்ததுகளுக்கு எதுவும் செய்யமுடியாது...! Idea

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி குருவிகளே.. நான் தவறான பொருள் பட எழுதிவிட்டேன். எனக்கும் 100% இப்படி தான் என தெரியாது . நான் நினைத்தேன் இவரும் தலைவருடன் இணைந்து செயற்பட்டவர் என்று தான் ஆனால் முதல் போராளி சங்கர் என்னும் போது இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக கருதப்படவில்லை . தியாகியாக .. கருத்தப்பட்டே அவரின் நினைவு தினத்துக்கு அடுத்த நாளை மாணவர் எழிச்சிநாளாக பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் இவரும் தலைவரின் வழி வந்தவர் என்பதால் உங்கள் கருத்தை ஏற்று கவிதையில் சிறுமாற்றம் செய்துள்ளேன்.

நன்றி
[b][size=18]
Reply
#11
செய் அல்லது செத்துமடி என்ற வரைவுலக்கணத்திறகு அமைய நடந்தவர்தான் தியாகி பொன் சிவகுமாரன்
___________________________________________________________
[size=18] '' போற்றுவோம் இவ் மறத்தமிழனை அவன் நினைவுநாளில் '' ______________________________________________________________________
Reply
#12
உரும்பிராய் மண் தந்த உத்தமனை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றிகள். ஆனால் அவரைப் பற்றிய உங்கள் கவிதையில் தவறான தகவல்களை கூறியுள்ளீர்கள். நம் மண்ணின் முதற் போராளியே சிவகுமாரன் தான் அவர் எவரையும் பார்த்து போராடத் தொடங்கவில்லை. அதேபோல் அவர் சயனைட் குப்பியை பாவித்ததைப் பார்த்துத்தான் விடுதலைப்புலிகளும் பின்பு பாவிக்கத் தொடங்கினார்கள்.
Reply
#13
வசம்பு என்னண்ணா நடந்தது எப்பவுவே எடக்கு முடக்காக தான் பதில் சொல்லுவீங்கள் போல............ :roll:
""
"" .....
Reply
#14
எனக்கொன்றும் நடக்கவில்லை. நான் எப்பொழுதும் சரியாகத்தான் இருக்கின்றேன். வரலாறுகள் பிழையாக மற்றவர்களை சென்றடைந்த விடக்கூடாது. அதனால்த்தான் சரியானதைக் கூறினேன். எழுதியவரே தவறை உணர்ந்து கொண்டாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போலுள்ளது.

இப்படித்தான் வசி ஒருமுறை திரு.பாலசிங்கம் அவர்கள் எழுதிய புத்தகத்தின் சில பகுதிகளை இங்கு பிரசுரிந்திருந்தார். அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் திரு. எம.ஜி.ஆருக்கம் இருந்த நெருக்கம் பற்றி குறிப்பிடுகையில் நடைபெற்ற சில சம்பவங்கள் பிழையாக குறிப்பிடப்பட்டிருந்தன. அதைப்பற்றி நான் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் எவரும் அதற்குப் பதிலளிக்கவில்லை.

உண்மைகளை சுட்டிக்காட்டினால் உங்களுக்கு இடக்குமுடக்காக உள்ளதோ???
Reply
#15
[size=18]காலம் கரைகிறது
கி.பி.அரவிந்தன்

[1]
காலம் கரைகின்றது.
நீ இன்னமும் மணம் பரப்புகிறாய்.
வண்ணக் குழையலென காட்சிப் புலன்கள்.
வானவில்லின் நிறம் பிரிக்கும்
அணுத்துணிக்கைகள்.
நண்பா,
உந்தன் நிறம் எது?
சுடர்கின்றாய்..

மரவள்ளித் தோட்டத்தில் நீ
வீழ்ந்து கிடந்தாய்.
செம்மண் பாத்திக்கு
நீர் பாய்ந்து கொண்டிருந்தது.
தோட்ட வெளிக்கு எல்லையிட்டிருக்கும்
பனைகளின் பின்னே
ஊரின் புறத்திருந்து விழிகள்
உன்னை மொய்த்திருந்தன.
துப்பாக்கிகளின் முற்றுகை உடைத்து
மதியச் சு10ரியன்
உன்னைத் தொடுகிறான்.
சயனைட் குப்பிக்கு
உன்னை ஒப்படைத்துவிட்டு
சிரிக்கிறாய்.
மிளகாய் புகையிலை
வாழையில் எல்லாம்
உந்தன் சிரிப்பலை படிகின்றது.

முதல் வித்து நீ.
முன்னறிவித்தவன் நீ.

சாத்வீகப் பாதையில்
சந்தி பிரித்தாய்.
கால வெளியில்
சுவடுகள் பதித்தாய்.
காலக் கரைவிலும்
உந்தன் சுவடுகள்.

[2]
நண்பா,
இப்படியும் காலம் வந்தது.
கறையான் புற்றில் கருநாகங்கள்.
அசோகச் சக்கர நாற்காலி அமர்ந்து
தேச பரிபாலனம்.
மரவள்ளிச் செடிகளும்
கண்ணீர் உகுத்தன.
அமிலச் கரைசலில்
உந்தன் சுவடுகள் எரித்தனர்.
முள்முடிகளை மக்கள்
தலைகளில் அறைந்தனர்.
துளிர்களைக் கிள்ளியும்
மலர்களைப் பிய்த்தும்
இரத்த நெடியினைத்
துய்த்து நுகர்ந்தனர்.


நண்பா,
நீ என்ன சொன்னாய்.
கருவிகள் கையெடு
களைகளை அகற்று அப்படித்தானே!
இவர்களோ,
வயல்களுக்குத் தீ வைத்து
வரப்பினில்
தானிய மணிகள் பொறுக்கினர்.
இந்தக்காலம் அந்தகாரமானது.
பேய்களும் பேய்க்கணங்களும்
பூதங்களும் என
நர்த்தனம் புரிந்தது.

ஆயினும்,
உனது சிரிப்பின் அலைகள்
ஆழ்ந்து விரிந்து
எங்கெங்கும் பரவி
வெட்ட வெட்டத்
தழைத்தது.

நண்பா,
உந்தன் இளவயதில்
உயிரை வெறுக்கவும்
சயனைட் குப்பியை
உயிரெனக் கொள்ளவும்
செய் அல்லது செத்துமடியென
பிரகடனம் செய்யவும்
எவை உன்னை உந்தியதோ
இன்னமும் அவை
அப்படியே உள்ளன.
உந்தன் ஒளிரும் சுவடுகளும்
எம்மெதிரே விரிகின்றன.

*1989-06-05 (சிவகுமாரனின் 15வது ஆண்டு நினைவு நாளின் போது எழுதப்பட்டது.)


நன்றி: அப்பால் தமிழ்


Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)