Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்திலும் பல கும்பகோண நிகழ்வுகள்
#1
ஈழத்திலும் பல கும்பகோண நிகழ்வுகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய தென்படுவதாக தகவல்

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள சுத்தானந்தா பாலர் பாடசாலை ஒரு பகுதி பாலர் வகுப்புகளும் மறுபகுதியில் திருமண வைபமும் நடந்தேறுகின்றன. திருமணம் என்னும்போது இந்து முறைப்படி யாகம் வளர்க்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் மிகமிக பாரதுரமானவை.

ஒரு சிறு பொறி போதும் பெருங்காடே நீறாகிவிடும்.

உரியவர்கள் கவனத்தில் எடுத்தல் நல்லது

இது ஒரு எடுத்துக்காட்டே ஆகுமு;. இதைப்போல பல பாடசாலைகள் ஈழத்தில் இருக்கின்றன.
[b] ?
Reply
#2
ஐயோ என்னும் ஒரு பெரிய பலி கொடுக்க முடியாது.. உரியவர்கள் தகுந்த முடிவை எடுத்து.. எந்த அனர்த்தமும் நடைபெறாமல் செய்ய ஆவண செய்யுங்கள்......!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
ஈழத்தில் தென்னம் கீற்றுக்களால் வேய்ந்த பாடசாலைகள் தான் அதிகம்... அதனை மாற்றுவது இப்போதைய நிலமையில் கடினம் என நான் நினைக்கிறேன்..... ஆனாலும் அங்கு கும்பகோணத்தில் நடந்தமாதிரி நடப்பதற்கு சாத்தியம் இல்லை..ஏன் என்றால் இவை எல்லாம் இடவசதி உள்ள இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளது அத்துடன் இவை எல்லாம் அடுக்கு மாடிகளும் அல்ல , மூடி அடைக்கப்பட்டவையும் அல்ல எனவே அங்கு இப்படிப்பட்ட சாத்தியக்கூறுகள் குறைவு.....இலங்கை இராணுவம் எங்கள் ஈழச் சிறுவர்கள் மீது கை வைக்காத வரை அவர்களுக்கு எந்த கும்பகோண நிலையும் வராது என்பது உறுதி.
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)