07-07-2004, 05:48 PM
<b>கோல்ட் குவெஸ்ட் 'சும்மா இருக்க கோடிஸ்வரர் ஆகலாம்'- நிதி மோசடி </b>
".... இலங்கையைப் பொறுத்தமட்டில் இவ்வாறான பண மோசடிகள் நமக்கு புதியவை அல்ல. 'ஷப்ரா' [ Shabra - Jaffna ] போன்று யாழ்ப்பாணத்தில் தொழிற்பட்ட நிதிநிறுவனங்கள் மக்களின் பணத்தை திட்டமிட்டு ஏப்பம் விட்டு - அதில் கொஞ்சம் கொடுக்க வேண்டியவர்கட்டு கொடுத்து - சட்ட நீதி நடவடிக்கைகளை முடக்கி இன்றும் கனவான்களாக யாழ்ப்பாணம்,கொழும்பு,U.Kல் வாழ்கிறார்கள். பணம் வைப்பிலிட்டு இழந்தவர்கள் தான் இன்றும் வாழ்வையும் வளத்தையும் தொலைத்து கண்ணீருடன் நிற்கின்றார்கள்.கொழும்பில். பிரமுக வங்கி அண்மையில் வங்குரோத்தாகி இன்னமும் மீளமைக்க முடியாமல் தவிக்கின்றார்கள். இப்போது (Gold Quest) - சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது! சூடு காணப் போகின்றீர்கள் என்ற பின்னும் பரீட்சிக்க நீங்கள் தயார் என்றால் தடுக்க யாராலும் முடியாது...."
கோல்ட் குவெஸ்ட் (Gold Quest) - இது இன்று சும்மா இருந்து கொண்டு பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் வாயில் அடிபடும் பெயர். கொழும்பு, காலி, கண்டி, குருநாகல், அம்பாறை மலையகம் என தங்களின் நிதி மோசடி வலைப்பின்னலை விரித்தவர்கள் அண்மையில் யாழ்ப்பாணம் கூட சென்றிருக்கின்றார்கள்.
மாதச் சம்பளத்தில், விலையுயர்வுடன் போட்டி போட முடியாது தவிக்கும் மத்திய தர வர்க்கத்தின் பணத் தேவையை நன்கறிந்து 'நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்' என்ற வணிக மந்திரத்துடன் இந்த (Gold Quest) இலங்கையில் தனது நடவடிக்கைகளை தற்போது சற்று முனைப்பாக்கியுள்ளது. இந்த மோசடிக் கும்பல் இலங்கையில் கடந்த 4 வருடமாக இயங்கி வருவதாக அறிய முடிகிறது.
இவர்கள் தமது வியாபார விருத்தியில் நம்பியிருப்பது ஒருவரிடமிருந்து ஒருவருக்கான சங்கிலித் தொடர் வர்த்தகம் மற்றும் வாய்மொழி மூல நற்பெயர் சந்தைப்படுத்தல். இது எப்படி இயங்குகின்றது என அறிய இந்த (Gold Quest) தங்க வர்த்தகர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தி இதன் முகவரை சந்திக்கக் கூடியதாக இருந்தது. ஜந்து நட்சத்திர ஹோட்டலில் றூம் போட்டு கோட் சூட் மற்றும் நவீன செல்லிடத் தொலைபேசி, மடிக் கணினியுடன் கனவான் போன்று தன்னைச் சுற்றி தானே ஒரு மாயையை உருவாக்கி இருந்தார். தான் ஒரு பொறியிலாளர் என்றும் வெளிநாட்டில் புகழ்பெற்ற நிறுவனத்தில் செய்து வந்த வேலையை விட்டு விலகி (அவர்களே விலக்கினார்களோ என்பது கேள்விக்குறி ? ) இதில் பண வருமானம் அதிகம் என்பதால் தான் ஈடுபடுவதாக ஆரம்பித்தார். இது வியாபாரத் தந்திரோபாயத்தின் ஒரு அங்கமான "Making First Impression as a Good Impression" எனும் முதல் பார்வையில் விழவைக்கும் உளவியல் தந்திரோபாயம் என என் மனம் உணர்த்தியது. எனினும் என்னதான் கூறப்போகிறார் என்ற ஆவலில் 'நானும் எவ்வாறு கோடீஸ்வரன்' ஆகலாம் என வினாவ- அவர் கூறினார்.
இந்த பவுண் திட்டத்தில் இணைய நீங்கள் Rs 50,000 (டொலரில்) செலுத்தி அங்கத்தவர் ஆகவேண்டும். அதன் பின்பு உங்களின் கீழ் இடதுபுறம் ஜந்து வலதுபுறம் ஜந்து என 10 உறுப்பினர்கள் சேர்ந்தால் உங்களுக்கு ஒரு பவுண் (இதன் பெறுமதி Rs 90,000 எனக் கூறுகின்றார்) குற்றி கிடைக்கும் மேலும் 10 பேர் சேர்ந்தால் $400 பணம் கிடைக்கும். உங்களுக்கு மேலே எவ்வளவு பேர் உள்ளனர் என பார்க்கமுடியாது. இது பிரமிட் வடிவமுடையது. நினைத்துப் பாருங்கள் உங்களுக்கு கீழே 1000 பேர் சேர்ந்தால் (எப்போது என்பது கேள்விக்குறி) உங்களுக்கு $40,000 USD கிடைக்கும் நீங்கள் கோடீஸ்வரர் தானே என்றார்?
சற்று ஆழமாக சிந்திக்காவிட்டால் நாமும் இந்த மோசடி வலையில் சிக்கலாம். இதன் விளைவு தனியே ஒரு தனி மனிதனின் பண இழப்பு அல்ல - ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தை கையாலாதவர்கள் ஆக்குவது. இது ஏன் ஒரு மோசடி என்பதற்கு பின்வரும் ஆய்வு முடிவுகள் சான்று பகர்கின்றன.
1. பொருளாதாரம் அல்லது பண முறைமையின் அடிப்படை பெறுமதி சேர்ப்பு எனப்படும் Value Addition ஒரு கிலோ உருளைக்கிழக்கு ரூ.100.00 என்றால் அது அந்த உருளைக்கிழக்கு விதை உருவாக்கத்தில் இருந்து, விவசாயின் உழைப்பு, சந்தைக்கான போக்குவரத்து என பெறுமதி சேர்க்கப்பட்டு விழைந்த இறுதிப்பெறுமதி. இந்த (Gold Quest) என்ற முறையில் பொய் கூறுவதைத்தவிர பெறுமதி ஏதும் சேர்க்கப்படவில்லை.
2. இந்த (Gold Quest) முறைமையை ஒரு மூடிய தொகுதியாக எடுத்துக் கொண்டால் பலர் பணம் போடுகிறார்கள் பலர் பணம் எடுக்கிறார்கள். எவ்வாறு அனைவரும் போட்டதையும் விட கூட எடுக்க முடியும்?
3. இந்த (Gold Quest) முறையை சாதாரணமாக பிரமிட் மோசடி என்று கூறுவார்கள். பிரமிட் என்றவுடன் எமக்கு ஞாபகத்திற்கு வருவது அடிப்பகுதியில் பரந்த பரப்பளவுடையதும் மேற்பகுதி நோக்கி கூராக செல்லும் ஒரு முக்கோணம். இந்த (Gold Quest)ம் அப்படித்தான் அவர்கள் கூறும் போது வெளித் தோற்றத்திற்கு அடியில் பலமுடைய பிரமிட் போல காட்சியளிக்கும் - உண்மையில் இது தலைகீழான ஒரு பிரமிட் ஒரு கட்டத்தில் மேலே உள்ள சுமை தாங்கமுடியாமல் சுக்கு நூறாகும். இதனால் தான் அவர்கள் இந்த முறையில் உங்களுக்கு மேலே எத்தனை பேர் உள்ளனர் என பார்க்க முடியாது என கூறுகின்றார்கள்.
4. இது பல நாடுகளில் (நேபாளம்) சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்ட நடவடிக்கை. தற்போது இலங்கை மத்திய வங்கி இதை சட்டபூர்வமாக தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. சுங்கத் திணைக்களம் இவர்களின் தங்க பொதிகளை தடுக்கின்றது.
5. இங்கு இவர்கள் சேகரிப்பதெல்லாம் பண ஆசை உடையவர்களின் தனிப்பட்ட விபரங்கள். இவை எல்லாம் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்களிற்கு தமது உளவு வலைப்பின்னலை வளர்க்க நல்ல தீனி போடும் தகவல்கள்.
6. இந்த திட்டத்திற்கு உரிய பணம் டொலர்களில் நாட்டை விட்டு வெளியே செல்வது நமது தேசத்திற்கு அந்நியச் செலாவணி ரீதியில் பாரிய இழப்பை ஏற்படுத்துகின்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் இவ்வாறான பண மோசடிகள் நமக்கு புதியவை அல்ல. 'ஷப்ரா' [ Shabra - Jaffna ] போன்று யாழ்ப்பாணத்தில் தொழிற்பட்ட நிதிநிறுவனங்கள் மக்களின் பணத்தை திட்டமிட்டு ஏப்பம் விட்டு - அதில் கொஞ்சம் கொடுக்க வேண்டியவர்கட்டு கொடுத்து - சட்ட நீதி நடவடிக்கைகளை முடக்கி இன்றும் கனவான்களாக யாழ்ப்பாணம்,கொழும்பு,U.Kல் வாழ்கிறார்கள். பணம் வைப்பிலிட்டு இழந்தவர்கள் தான் இன்றும் வாழ்வையும் வளத்தையும் தொலைத்து கண்ணீருடன் நிற்கின்றார்கள்.
கொழும்பில். பிரமுக வங்கி அண்மையில் வங்குரோத்தாகி இன்னமும் மீளமைக்க முடியாமல் தவிக்கின்றார்கள். இப்போது (Gold Quest) - சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது! சூடு காணப் போகின்றீர்கள் என்ற பின்னும் பரீட்சிக்க நீங்கள் தயார் என்றால் தடுக்க யாராலும் முடியாது.
நன்றி சூரியன் இணையம்