05-24-2005, 09:13 AM
சமாதானச் சூரியன்
எழுந்திரு மகனே
தூங்கியது போதுமடா
கண்களைத் துடைத்துக் கொண்டு
விடிதிசைநோக்கிப் எட்டிப்பார்
சமாதானச் சூரியன் - எங்கள்
சந்தியில் வந்து நிக்கிறான்
உலக நாடுகள் கையசைக்க - எம்
தலைவரின் கட்டளைக்காய்
விடிதிசை நோக்கிப் போக
வீரமுடன் வந்து நிக்கிறான்
நடுநிசிச் சூரியன் உதிக்கும் - அந்த
நோர்வே நாட்டின் தலைநகர் இருந்து
சூரியனின் பெயரைத் தன்னோடு
சூடிக் கொண்ட ஒருவர் (ளுழடாநiஅ) இன்று
சமாதானச் சூரியனை இழுத்துவந்து - எங்கள்
சந்தியிலே நிறுத்தியிருக்கிறார்
உலகம் எம்மை அறிந்து கொண்டது -எங்கள்
தலைவர்தனைப் புரிந்து கொண்டது
தமிழர்மீது பரிவு கொண்டது
சமாதானத்தைக் கையில் கொண்டது
உலகம் எங்கும் எங்களின் பேச்சு
சுதந்திரம் ஒன்றே தமிழரின் மூச்சு
அடங்கியே போச்சு சந்திரிக்கா பேச்சு
நியாயம் இப்போ எங்கள் பக்கம் ஆச்சு
உயிரைக் காற்றாக்கி
உடலை வித்தாக்கி
சமாதானச் சூரியனை - எங்கள்
சந்திக்கு வரவழைத்து
கல்லறையில் இருந்துகொண்டு-சூரியனோடு
கைகுலுக்கி நிக்கின்றார்
எங்கள் மாவீரரின்று.
"சமாதானச் சூரியனே -மீண்டும்
சலித்துப் போகும் காலம்வந்தால்
நீறுபூத்த நெருப்பாய் நாங்கள்
சாம்பலுக்குள் அடங்கியிருக்கிறோம்
தலைவர் ஆணையிட்டால் மீண்டும்
கல்லறையில் இருந்து முளைப்போம்
எங்கள் தேச விடிவிற்காய் - வேறு
வழியில்லை என்பதால்;"
என்று உரைக்கும் மாவீரை
எழுந்து நீ பாரடா...
அடம்பன் கொடிகூட என்றும்
திரண்டால் மிடுக்கு என்பார்
வாசல்தேடி வந்து நிற்கும்
சூரியனை நாம் வரவேற்போம்
எழுந்துவாடா ஒன்றாய் நாம்போவோம்
அழுது அழுது எங்கள்
கண்ணீரும் வற்றிப்போச்சு
அகதியாய் அலைந்து எங்கள்
காலிரண்டும் களைத்துப் போச்சு
எங்களை வாழவைத்த - தங்கக்
காணிகள் வீடுகள் எல்லாம்
சுடுகாடாய் மாறிப்போச்சு
எங்களுக்கு விடிவு வேண்டும்-எங்கள்
சந்ததிகள் வாழவேண்டும்
சந்தியிலே வந்து நிற்கும்
சமாதானச் சூரியனை நாங்கள்
கெட்டியாக பிடித்துக் கொள்வோம்
எழுந்துவாடா என் மகனே...
நம்பிக்கை நட்சத்திரம் எங்கள்
ஈழத்து வான்வெயில்
எட்டி எட்டிப் பார்க்கிறது
சுதந்திரக் காற்றை நாங்கள்
சுவாசிக்கும் நாள் வரட்டும்
யாருக்கும் நாம் அடிமை இல்லை
நல்வழியில் அழைத்துச் செல்ல-எமக்கு
நல்லதொரு தலைமையுண்டு
தெளிவாக நாம் இருப்போம் -விடியும்
திசைநோக்கிப் பார்த்திருப்போம்
உலகநாடுகளிடம் நாமும்
நம்பிக்கை வைத்திருப்போம்
நம்பி நாங்கள் ஏமாந்துவிட்ட
அனுபவங்கள் வரலாற்றிலுண்டு
இருப்பினும்...
நம்ப நாங்கள் நடந்துகொள்வோம் - எவரையும்
நம்பி நாங்கள் நடாவாதிருப்போம்.
தூங்கியது போதுமடா நீ
எழுந்திரு மகனே..
nஐ.டானியல் யாழ்ப்பாணம்.
கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை.
www.tamiloosai.com
எழுந்திரு மகனே
தூங்கியது போதுமடா
கண்களைத் துடைத்துக் கொண்டு
விடிதிசைநோக்கிப் எட்டிப்பார்
சமாதானச் சூரியன் - எங்கள்
சந்தியில் வந்து நிக்கிறான்
உலக நாடுகள் கையசைக்க - எம்
தலைவரின் கட்டளைக்காய்
விடிதிசை நோக்கிப் போக
வீரமுடன் வந்து நிக்கிறான்
நடுநிசிச் சூரியன் உதிக்கும் - அந்த
நோர்வே நாட்டின் தலைநகர் இருந்து
சூரியனின் பெயரைத் தன்னோடு
சூடிக் கொண்ட ஒருவர் (ளுழடாநiஅ) இன்று
சமாதானச் சூரியனை இழுத்துவந்து - எங்கள்
சந்தியிலே நிறுத்தியிருக்கிறார்
உலகம் எம்மை அறிந்து கொண்டது -எங்கள்
தலைவர்தனைப் புரிந்து கொண்டது
தமிழர்மீது பரிவு கொண்டது
சமாதானத்தைக் கையில் கொண்டது
உலகம் எங்கும் எங்களின் பேச்சு
சுதந்திரம் ஒன்றே தமிழரின் மூச்சு
அடங்கியே போச்சு சந்திரிக்கா பேச்சு
நியாயம் இப்போ எங்கள் பக்கம் ஆச்சு
உயிரைக் காற்றாக்கி
உடலை வித்தாக்கி
சமாதானச் சூரியனை - எங்கள்
சந்திக்கு வரவழைத்து
கல்லறையில் இருந்துகொண்டு-சூரியனோடு
கைகுலுக்கி நிக்கின்றார்
எங்கள் மாவீரரின்று.
"சமாதானச் சூரியனே -மீண்டும்
சலித்துப் போகும் காலம்வந்தால்
நீறுபூத்த நெருப்பாய் நாங்கள்
சாம்பலுக்குள் அடங்கியிருக்கிறோம்
தலைவர் ஆணையிட்டால் மீண்டும்
கல்லறையில் இருந்து முளைப்போம்
எங்கள் தேச விடிவிற்காய் - வேறு
வழியில்லை என்பதால்;"
என்று உரைக்கும் மாவீரை
எழுந்து நீ பாரடா...
அடம்பன் கொடிகூட என்றும்
திரண்டால் மிடுக்கு என்பார்
வாசல்தேடி வந்து நிற்கும்
சூரியனை நாம் வரவேற்போம்
எழுந்துவாடா ஒன்றாய் நாம்போவோம்
அழுது அழுது எங்கள்
கண்ணீரும் வற்றிப்போச்சு
அகதியாய் அலைந்து எங்கள்
காலிரண்டும் களைத்துப் போச்சு
எங்களை வாழவைத்த - தங்கக்
காணிகள் வீடுகள் எல்லாம்
சுடுகாடாய் மாறிப்போச்சு
எங்களுக்கு விடிவு வேண்டும்-எங்கள்
சந்ததிகள் வாழவேண்டும்
சந்தியிலே வந்து நிற்கும்
சமாதானச் சூரியனை நாங்கள்
கெட்டியாக பிடித்துக் கொள்வோம்
எழுந்துவாடா என் மகனே...
நம்பிக்கை நட்சத்திரம் எங்கள்
ஈழத்து வான்வெயில்
எட்டி எட்டிப் பார்க்கிறது
சுதந்திரக் காற்றை நாங்கள்
சுவாசிக்கும் நாள் வரட்டும்
யாருக்கும் நாம் அடிமை இல்லை
நல்வழியில் அழைத்துச் செல்ல-எமக்கு
நல்லதொரு தலைமையுண்டு
தெளிவாக நாம் இருப்போம் -விடியும்
திசைநோக்கிப் பார்த்திருப்போம்
உலகநாடுகளிடம் நாமும்
நம்பிக்கை வைத்திருப்போம்
நம்பி நாங்கள் ஏமாந்துவிட்ட
அனுபவங்கள் வரலாற்றிலுண்டு
இருப்பினும்...
நம்ப நாங்கள் நடந்துகொள்வோம் - எவரையும்
நம்பி நாங்கள் நடாவாதிருப்போம்.
தூங்கியது போதுமடா நீ
எழுந்திரு மகனே..
nஐ.டானியல் யாழ்ப்பாணம்.
கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை.
www.tamiloosai.com
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->