Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேர்களைத் தேடி...
#1
<b>வேர்களைத் தேடி... </b>

சமீபத்தில் நான் பார்த்த அழகான படம், ஆரெம்கேவியின் "வேர்களைத் தேடி..." குறும்படம். திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபலப் பட்டு வர்த்தக நிறுவனமான ஆரெம்கேவி, தமது கடையின் முன்னேற்றத்தை 31 நிமிட குறும்படமாகத் தயாரித்து இருக்கிறது. மிக மிக சுவாரசியமான படம்.

மூன்று தலைமுறையாக ஆரெம்கேவி எப்படி வளர்ந்தது என்பதை ஒரு சரடாக வைத்துக்கொண்டு, மற்றொரு சரடில், ஆரெம்கேவியில் பட்டுப் புடவை வாங்கியவர்களின் அனுபவம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பதிவு செய்திருக்கிறார்கள். தி.க.சி., ர.சு. நல்லபெருமாள், சுஜாதா, தோப்பில் முகமது மீரான் போன்ற எழுத்தாளர்களோடு, எட்டயபுரம் அரண்மனையைச் சேர்ந்தவர், திருவனந்தபுரம் அரண்மனையைச் சேர்ந்தவர் என்று பலர் ஆரெம்கேவிக்கு சான்று கூறுகிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல், சாதாரணர்கள் எப்படித் தம் குடும்ப விழாக்களை ஆரெம்கேவியோடு கொண்டாடினோம் என்று விவரித்ததும் சுவாரசியமாக இருந்தது.

மூன்றாம் தலைமுறையினர் - இப்போது இருக்கும் விஸ்வநாதன் மற்றும் சிவகுமார் - எப்படி புதுப்புது டிசைன்களை பட்டுப் புடவைக்குள் கொண்டு வந்தனர் என்பதுதான் என்னை மிகவும் கவர்ந்த பகுதி. ராஜா ரவிவர்மா ஓவியம், திருவனந்தபுரம் அரண்மனையின் மேற்கூரை என்று பல்வேறு தமிழின் தொன்மையான அடையாளங்களைப் பட்டில் வடிக்க முடியும் என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்தப் பங்களிப்பிற்காகவே, இவர்களுக்கு தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.

தமிழர்களோடு வளர்ந்த ஒரு நிறுவனம் தமிழின் அடையாளங்களிலும் கவனம் செலுத்தியிருப்பது மெச்சக்தக்கது. கள ஆய்வு செய்து, கோர்வையுடன் ஆரெம்கேவியின் பங்களிப்பை திரையில் கொண்டுவந்த ஆர். ஆர். சீனிவாசன் பாராட்டுக்குரியவர்.

Thanks: http://www.tamiloviam.com/nesamudan/page.a...?ID=48&fldrID=1
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)