Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எழுதுவதால் கொல்லப்படக் கூடிய நிலை
#1
எழுதுவதால் கொல்லப்படக் கூடிய நிலை

ஈழ விடுதலைப் போராட்டம் மற்றும் யுத்தம் காரணமாக, பல்வேறு வெளிநாடுகளில் சிதறி, புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களிடையே இருந்து தோன்றிய, புதிய தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஷோபாசக்தி. இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளியான இவரது முதல் நாவலான கொரில்லா, புலம்பெயர் இலக்கியம் என்கிற அடைமொழியையும் கடந்து பரவலாக ஷோபாசக்தி கவனிக்கப்பட காரணமாக இருந்தது. குறிப்பாக, தமிழக இலக்கிய விமர்சகர்களிடம் இருந்து, ஈழ விடுதலைப் போராட்டத்தைக் களனாகக் கொண்டிருந்த கொரில்லா, பெரும் வரவேற்பைப் பெற்றது. தேசத்துரோகி என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு, சமீபத்தில் வெளியாகியுள்ளது. கடந்த பத்து வருடங்களாக பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வரும் ஷோபாசக்தி, சென்ற மாதம் ஒரு சிகிச்சைக்காக சென்னை வந்திருந்தார். தீராநதிக்காக அவருடன் ஒரு நேர்காணல்...

தீராநதி: ஈழத்திலிருந்து ஓர் அகதியாக வெளியேறுவதற்கு முன்புவரைக்குமான உங்கள் வாழ்க்கை, அரசியல் ஈடுபாடுகள் குறித்து சொல்ல முடியுமா?

ஷோபாசக்தி: உங்களது இந்தக் கேள்விக்குத் தெளிவான ஒரு பதிலைச் சொல்ல முடியாத நிலையில் இப்போதைக்கு நான் இருக்கிறேன். உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு ஏற்றதான ஒரு சனநாயகச் சூழல் எங்களுக்கு இல்லை. ஈழத்தில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளிலும்கூட என் போன்றவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. சொல்வதனாலும் எழுதுவதனாலும் கொல்லப்படக்கூடிய ஒரு சூழலில் நாங்கள் வாழ்கிறோம்.

தீராநதி: ஒரு எழுத்தாளராக நீங்கள் உருவாக, உங்கள் இளமைப் பருவச் சூழலில் எது காரணமாக இருந்திருக்க முடியும் என்பது பற்றியாவது சொல்ல முடியுமா?

ஷோபாசக்தி: விசேடமாக எதுவும் இல்லை. ஒரு தீவுப் பகுதியின் வறிய கிராமத்தில் நான் பிறந்தேன். பத்தாவது வகுப்பு வரைக்கும் கல்வி கற்றேன். அப்புறம் இயக்கத்துக்குப் போய்விட்டேன். இந்த இடத்தில் என் கதையை நிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தில் நான் இருக்கிறேன். அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு வேறுவழி இல்லை. என்னுடைய இருபத்தோராவது வயதில் நான் ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறினேன். இப்போது எனக்கு 36 வயது. கடந்த பதினைந்து வருடங்களாக வெளிநாடுகளில் அலைந்து கொண்டிருக்கிறேன். கடைசி பத்து வருடங்களாக பிரான்ஸில் இருக்கிறேன். என் இளமைப் பருவத்தில் இலக்கியம் படிக்கவோ, அரசியல் நூல்களைப் பயில்வதற்கோ எனக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து என்னைச் சூழவர தட்டையான தமிழ் தேசிய பரப்புரைகளும் விடுதலைப் போருக்கான வீராவேச அழைப்புகளுமே முழங்கப்பட்டன. எல்லாவிதமான சமூக ஒடுக்கு முறைகளுக்குமான தீர்வு தமிழீழத்திலேயே சாத்தியம் என்று நம்ப வைக்கப்பட்டேன். எண்பதுகளிலே ஆயுதம் தாங்கிய இயக்கங்களால் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சாதி ஒழிப்பு இயக்கங்கள் என்று எல்லாவித மாற்று அமைப்புகளுமே மௌனமாக்கப்பட்டன.

நான் பிரான்சுக்குப் போன பின்பாக, ‘புரட்சி கம்யூனிஸ்ட் கழகம்’ என்ற சர்வதேச ட்ராஸ்கிய இயக்கத்தால் கவரப்பட்டு அவர்களோடு இணைந்தேன். நான்கு வருடங்களை நான் அந்தக் கட்சியில் செலவிட்டிருக்கிறேன். அந்த நான்கு வருடங்களில்தான் கட்சித் தோழர்களால் எனக்கு இலக்கியம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கட்சியின் மூலமே என்னிலிருந்த தேசியவாதப் பண்புகளை நான் விட்டொழித்தேன். சர்வதேச கலாச்சாரம், சர்வதேச ஒடுக்கப்பட்டவர்களின் இணைவு போன்ற கருத்தாக்கங்கள் என்னில் அப்போது தொற்றிக்கொண்டன. கட்சித் தோழர்களுடன் இலக்கியம், அரசியல் சார்ந்து உரையாட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்தச் சூழல்தான் என்னை எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.

தீராநதி: ‘புரட்சி கம்யூனிஸ்ட் கழகம்’ கட்சியில் சேருவதற்கான வாய்ப்புகள் எப்படி உருவானது அல்லது ஏன் கட்சியில் சேர்ந்தீர்கள் என்று சொல்லமுடியுமா?

ஷோபாசக்தி: நான் மட்டுமல்ல, விடுதலை இயக்கங்களிலிருந்து வெளியேறிய வேறு சில தோழர்களும் அக்கட்சியில் இணைந்தார்கள். கட்சியும் ஈழப் போராட்டத்தின்பால் கரிசனம் கொண்டிருந்தது. விடுதலை இயக்கங்களுக்கு மாற்றாக அக்கட்சி தன்னை நிறுவிக் கொள்ளும் என நாங்கள் நம்பினோம். ஆனால், 1997ல் எனக்கு தமிழகத்தில் தோழர் அ.மார்க்சின் அறிமுகம் கிடைத்ததன் பிற்பாடு அவரின் கருத்துக்களின்பால் நான் கவனம் செலுத்தலானேன். ஒவ்வொரு ‘நிறப்பிரிகை’ இதழ்களும் ‘தேசியம் ஒரு கற்பிதம்’ போன்ற நூல்களும் என்னை மிகவும் பாதித்தன. நம்முடைய சமூகம் ஒரு வர்க்கச் சமூகம் அல்ல; இதுவொரு சாதியச் சமூகமே. சாதிய விடுதலை சாத்தியமில்லாமல் என் சமூகத்தில் வேறெந்த விடுதலையும் சாத்தியமில்லை என்ற பார்வை எனக்குக் கிடைக்கிறது. எனது சமூகத்தில் தொழிலாளி வர்க்கம் சாதியால் பிளவுண்டு கிடக்கிறது. சாதிய ஒற்றுமையைத் தவிர வேறெந்த சமூக ஒற்றுமையுமே சாத்தியப்படாத சூழல். ஆக, இந்த அடிப்படைக் கேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ் _ சிங்கள _ சர்வதேச பாட்டாளி வர்க்க ஐக்கியத்தையே நான் சார்ந்திருந்த கட்சி பேசியபோது, ‘என்னயிது சின்னப்புள்ளதனமாய் இருக்கிறதே’ என எனக்குத் தோன்றியது. கட்சியோடு தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு தனியனாக எழுதுவதில் எனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன்.

தீராநதி: ஒரு அகதியாக வாழ நேர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஷோபாசக்தி: ஊரில் இருந்தபோது பட்டினி கிடந்தேன். இப்போது, ‘தேடி சோறு நிதம் தின்ன’ அய்ரோப்பாவில் வாய்ப்பு கிடைக்கிறது. இன ஒடுக்கு முறைகள் உள்ளனதான். எனினும் அவை ஈழத்து சாதிய ஒடுக்குமுறையிலும் விட மோசமானவை என்று நான் சொல்லமாட்டேன். யாழ்ப்பாணத்தில் இன்றுவரை, இந்த முப்பது வருட யுத்த அனர்த்தங்களுக்குப் பின்பும் 150 இந்துக் கோயில்கள், தலித்துக்களுக்கு மூடப்பட்டேயிருக்கின்றன. இந்த நேரடியான சாதிய ஒடுக்குமுறை, அகதிச் சூழலில் கிடையாது. நான் அவதானித்த வரையில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தலித்துகள் புலப்பெயர்வை கொடிய சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப்பதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே கருதுகிறார்கள். இவை அகதி வாழ்வின் சாதக அம்சங்கள். அகதி வாழ்வில் பாதகமான அம்சங்களும் நிறைய உள்ளன. அவற்றைப் பற்றி, அவற்றை பற்றி மட்டுமே ஏராளமான வெள்ளாள இலக்கியவாதிகள் எழுதித் தள்ளிவிட்டார்கள். நான் புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை.

தீராநதி : ‘கொரில்லா’ நாவல், ‘தேசத்துரோகி’ சிறுகதைத் தொகுப்பு மற்றும் சில நாடகங்கள் மட்டும்தான் உங்களது படைப்புகள். தொடர்ந்து எழுதாமல் எப்போதாவது வருடத்துக்கு இரண்டு கதைகள் மட்டும் எழுதுபவராகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்?

ஷோபாசக்தி: புகலிடத்தில் ஒரு கட்டத்தில் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தவர்கள்கூட இப்போது தீவிரத்தன்மையை இழந்திருக்கிறார்கள். நான் உட்பட பல புகலிட எழுத்தாளர்கள் மிகக் குறைவாகவே எழுதுகிறோம். நாங்கள் எல்லோருமே துப்பாக்கிகளுக்கும் அதிகாரத்துக்கும் அறிவு வன்முறைக்கும் ஏக பிரதிநிதித்துவத்துக்கும் முன்னால் தோற்றுப் போய்க் கொண்டேயிருக்கிறோம். ஈழத்து புகலிட தமிழ் அரசியல் சூழலில் நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மௌனத்தை சாதிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் வாழ்நாட்கள் அதிகரிப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.

தீராநதி: எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் உங்கள் கவனங்கள் என்னவாக இருந்தன?

ஷோபாசக்தி: நான் எழுதத் தொடங்கியதிலிருந்து இன்றுவரைக்குமான என் எல்லா எழுத்துக்களும் ஈழத்து அரசியலையும் புகலிட வாழ்வையும் குறித்து நேரடியாகப் பேசுபவையாகவே இருக்கின்றன.

தீராநதி: ‘கொரில்லா’ நாவல் உங்கள் சொந்தக் கதையா?

ஷோபாசக்தி: கொரில்லா என்னுடைய சொந்தக் கதை மட்டுமல்ல. நான் சந்தித்த பிரச்னைகள், பார்த்து, கேட்ட பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே அலைவரிசையில் ‘கொரில்லா’வில் நிரல் படுத்தியுள்ளேன். அல்லைப்பிட்டி என்றவொரு சின்ன மணல் கிராமம் எங்கள் கிராமம். அங்கு என் ‘செட்’டில் முப்பது பொடியன்கள் இருந்தார்கள். எல்லோரும் மாமன் மச்சான்தான். ஒன்றாகவே பள்ளிக்குப் போனோம். ஒன்றாகவே மாலை வேளைகளில் கிளித்தட்டு விளையாடினோம். 1990 ஆகஸ்ட் மாதம் யாழ் கோட்டையை மீட்பதற்காக சிறிலங்கா இராணுவத்தினர் எங்கள் கிராமத்தில் தரையிறங்கியபோது, அந்த முப்பது பொடியன்களில் இருபத்துமூன்று பொடியன்கள் இராணுவத்தினரால் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டார்கள். இன்று அந்த கிராமமே அழிந்து கிடக்கிறது. அரச கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. என் கிராமம் அதிஉயர் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என் ‘செட்’டில் நாங்கள் ஐந்தாறு பேர்தான் இன்று உயிரோடு இருக்கிறோம். அதுவும் நாங்கள் வெளிநாடுகளில் இருந்ததால் தப்பித்தோம். அனுபவித்தவை, அறிந்தவை, பட்டவை, பார்த்தவை என்று ஆயிரக்கணக்கான கதைகள் இதுபோல் என் வாழ்வில் உண்டு. அவை எல்லாவற்றையும் சொல்ல வேண்டுமென்றும் விரும்புகிறேன். ஆனால், அதற்கான ஒரு சனநாயகச் சூழல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஒரு வேளை நான் விரும்புவதுபோல் சுய தணிக்கை இன்றி எழுதுவதற்கான ஒரு சனநாயகச் சூழல் இருந்திருந்தால் என்னுடைய பிரதிகள் வேறுமாதிரி எழுதப்பட்டிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

தீராநதி: ‘கொரில்லா’வுக்கு தமிழ்நாட்டிலிருந்து சாதகமாகவும் பாதகமாகவும் மிகப் பெரிய அளவில் எதிர்வினைகள் வந்தன. அது எங்களுக்குத் தெரியும். இலங்கை எழுத்தாளர்களிடமிருந்து என்ன மாதிரியான விமர்சனங்கள் வந்தன என்று சொல்ல முடியுமா?

ஷோபாசக்தி: இலங்கையைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் ஆஸ்தான பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் மட்டுமே கருத்து தெரிவிக்கலாம் என்ற சூழல்தான் இருக்கிறது. எனவே இலங்கையிலிருந்து ‘கொரில்லா’ குறித்த திறந்த மனது விமர்சனங்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சில சிறு குறிப்புகள் மட்டுமே வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் நிச்சயம் அது பற்றி யாரும் அச்சமின்றி வாயைத் திறந்திருக்க முடியாது. நானும் சுகனும் இணைந்து தொகுத்த விளிம்புநிலைக் குரல்களின் தொகுப்புகளுக்கும் இதே கதிதான். நாங்கள் தொகுத்து வெளியிட்ட ‘கறுப்பு’ என்ற நூலின் விற்பனை பிரான்சில் தடை செய்யப்பட்டது.

தீராநதி: உங்கள் நண்பரான எழுத்தாளர் கற்சுறா ‘கொரில்லா’வை இன்னொரு ‘ஹே ராம்’ என்றும் விடுதலைப்புலிகள் சார்பு நாவல் என்றும் குறிப்பிட்டுள்ளார். உங்கள் மற்றொரு நண்பரான சாரு நிவேதிதா சென்னையில் நடந்த விமரிசனக் கூட்டத்தில் ‘அது இலக்கியமே அல்ல’ என்றார். இந்த விமர்சனங்கள் பற்றி?

ஷோபாசக்தி: கற்சுறாவினது வாசிப்புக்கும் சாத்தியமுள்ளது. நம்முடன் இணைந்து பல வருடங்களாக சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தோழர் அவர். அது அவருடைய பார்வை. சென்னையில் நடந்த கூட்டத்தில் சாருநிவேதிதா, ‘‘இந்நாவலின் அரசியலுடன் நான் உடன்படுகிறேன். ஆனால் இது இலக்கியமல்ல. வெறும் செய்திப் பதிவாக இருக்கிறது’’ என்றார். அது அவரது பார்வை, வாசிப்பு. அதற்கும் சாத்தியமுள்ளது. எல்லோரும் நம்முடைய பார்வையையும் அறிதல் முறையையும்தான் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவருக்கும் தன்னிலைச் சார்ந்த பார்வைகள் சாத்தியம்தானே. ஆனால் இலக்கியம் என்றால் இதுதான், இலக்கியத்திற்கான முறைமைகள் இதுதான் என்ற அளவுகோல்களைத் தீர்மானித்துவிடும் அதிகாரம் படைத்த தனி ஒருவரை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு தனி நபருக்கும் தனித் தனியான அளவுகோல்கள் இருக்கலாம். ஒருவரிடமே பல்வேறு அளவுகோல்கள் இருப்பதும் சாத்தியமே. இந்தப் புலத்தில் என்னுடைய அளவுகோல்தான் சரியானது என்று எவரும் சொல்லவும் முடியாது. மற்றதின் அளவுகோல்களை காலி செய்யவும் முடியாது. எனக்கு சொற்ப காலங்களாக, துல்லியமாகச் சொல்லப் போனால் ஏழு வருடங்களாகத்தான் இலக்கியப் பரப்பில் நெருங்கிய பரிச்சயமுண்டு. ஷோபாசக்தி என்ற பெயரில் எனது முதலாவது சிறுகதை 1997ல்தான் வெளியானது. எனக்கு ஆங்கிலமோ பிரெஞ்சோ படிக்கத் தெரியாது. ஆயினும் என்னிடமும் உங்களுக்குச் சொல்வதற்கு நிரம்பக் கதைகள் உண்டு. அந்தக் கதைகளை நான் உங்களுக்கு அச்சில் தருகிறேன். என் கதையையும் நான்கு பேர் படிக்கிறார்கள். சாருவின் கதைகளையும் நான்கு பேர் படிக்கிறார்கள்; அவ்வளவுதான்.

நான் என்னுடைய புத்தகங்களின் விமர்சனக் கூட்டங்களில் ஏற்புரையோ, பதிலுரையோ நிகழ்த்துவது கிடையாது. மேடையில்கூட அமரமாட்டேன். கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன். இதுவரை என் புனைவுகள் குறித்து பத்திரிகைகளில் வந்த எந்த விமர்சனத்துக்கும் நான் பதில் சொன்னது கிடையாது. என் புத்தகம் குறித்து, என் புத்தகம் சொல்லாத எதையும் நான் சொல்லிவிட முடியாது என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கையுண்டு. மேலும் ஒரு நாவல் அல்லது சிறுகதை எழுதுவதையும் நான் அவ்வளவு முக்கியமான நிகழ்வாகக் கருதுவது கிடையாது. எனக்குச் சில கதைகள் தெரியும். அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி வேறெந்த கோட்பாடுகளோ, திட்டங்களோ என்னிடம் இல்லை. எனவே, விமரிசனங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை நான் அவ்வளவு முக்கியமானதாகக் கருதுவதில்லை. ஏனெனில், நான் உங்களுக்கு மற்றொரு கதையைச் சொல்வதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

தீராநதி: உங்கள் சிறுகதைகளுக்கு என்ன விதமான விமர்சனங்கள் வந்தன?

ஷோபாசக்தி: என்னுடைய சிறுகதைகள் அனைத்துமே புகலிடத்தில் பரவலாகப் படிக்கப்பட்டன. உற்சாகமூட்டுதலும் விமரிசனங்களும் ஒருபுறம் இருக்க, புகலிடத்தில் நான் சொன்ன கதைகளைக் கேட்பதற்கு ஆர்வமாய் இருந்தார்கள். அது, தொடர்ந்து கதைகளைச் சொல்வதற்கு எனக்கு களங்களை அமைத்துக் கொடுத்தது. அந்த வகையில் நான் பாக்கியவான். இதற்காக, நன்மையோ தீமையோ என் கதைகள் குறித்து தொடர்ச்சியாக அபிப்பிராயம் தெரிவித்து வந்த தமிழரசன், அ. ரவி, றயாகரன், யமுனா ராஜேந்திரன், கற்சுறா போன்றவர்களுக்கு நான் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகிறேன்.

தீராநதி: ஒட்டுமொத்த தமிழ் இலக்கியப் படைப்புகளில் உங்களை கவர்ந்த எழுத்தாளர்கள் யார் யார்?

ஷோபாசக்தி: பூமணி, எஸ். பொன்னுத்துரை, பிரேம்: ரமேஷ், கு.அழகிரிசாமி, சாரு நிவேதிதா, மதிவண்ணன், சுகன்... இப்போது உடனடியாக என் ஞாபகத்தில் வரும் பெயர்கள் இவைதான். பூமணியின் ‘வெக்கை’ என்னை மிகவும் கவர்ந்த பிரதி. என் பார்வையில் தமிழில் வெளியான நாவல்களில் அதிமுக்கியமானது என்று ‘வெக்கை’யை நான் சொல்வேன்.

தீராநதி: கலை இலக்கிய ஆர்வமுடையவர்களுக்கு பிரான்ஸ் ஒரு கனவுப் பிரதேசம். நீங்கள் பத்து வருடங்களாக அங்கு இருந்து வருகிறீர்கள். அந்த வகையில் பிரான்ஸ் உங்கள் மீது செலுத்திய பாதிப்புகள், நீங்கள் அவதானித்த பிரான்ஸ் பற்றிச் சொல்ல முடியுமா?

ஷோபாசக்தி: நீங்கள் குறிப்பிடுவது மாதிரி பிரான்ஸ் கலைக் கூடங்களும் நாடக அரங்குகளும் பெரும் ஓவியக்காட்சி சாலைகளும் அரும்பொருட்காட்சியகங்களும் கலை இலக்கிய கூட்டங்களும் நிறைந்த பூமிதான். ஆனால், இந்த நிலையங்களின் நிலவறைகளில் புதைந்து கிடக்கும் சமையலறைகளைக் குறித்துத்தான் என்னால் உங்களுக்குக் கூறமுடியும். வதிவிட (விசா) அனுமதிக்காக அலைவதிலும் அகதி வழக்குகளை தயாரிப்பதிலும் ரெஸ்டாரண்டுகளில் அடிமாடாக வேலை செய்வதிலும் வாழ்வின் பெரும் பகுதி தொலைகிறது. பிரெஞ்சு இலக்கியமும் பிரெஞ்சு திரைப்படங்களிலும் காண்பிக்கும் பிரான்ஸிலிருந்து நான் வாழும் பிரான்ஸ் மிகவும் மாறுபட்டது. எந்தப் பிரெஞ்சுப் படத்தைப் பார்த்தாலும் ஓர் அழகிய ரெஸ்டாரண்டை காட்டுகிறார்கள். அங்கே மனிதர்கள் குடிக்கிறார்கள். கொஞ்சம் காமெராவை ‘ஜிவீறீt ஞிஷீஷ்ஸீ’ பண்ணினால் அங்கே பத்துக் கருப்பன்கள் வேலை செய்வது தெரியும். ஆனால் காமெரா வணங்க மறுக்கிறது.

தீராநதி: ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரைக்கும் இப்போது உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது. கருத்தே பிரச்னைக்குரியது என்று கருதுகிறீர்களா அல்லது அதை நடைமுறைப்படுத்துவதில்தான் பிரச்னைகள் உள்ளதென கருதுகிறீர்களா?

ஷோபாசக்தி: ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரைக்கும் விடுதலைப்புலிகளின் கருத்துத்தான் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் கருத்து என்று சொல்வதோ ஏக பிரதிநிதித்துவம் ஒற்றைத் தலைமை என்று கூக்குரலிடுவதோ நியாயமற்றது. இந்த ஏகபிரதிநிதிகளுக்கு மாற்றாக ஒலித்துக் கொண்டிருக்கும் விளிம்பு நிலைக் குரல்களையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசுகளால், அரச பயங்கரவாதிகளால் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களது இன ஒடுக்குதல்தான் இன்று வரையான விடுதலைப்புலிகளின் இருப்புக்குக் காரணம் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

இலக்கு உன்னதமாய் இருந்தால் போதாது. அதை அடையும் வழிமுறைகளும் உன்னதமாய் இருக்கட்டும். நாளை புலிகளின் நிர்வாகத்தில் தனி ஈழமோ, ஓர் அதிகார நிர்வாக அலகோ அமைந்தால் அப்போது தலித்துகளின், ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்நிலை என்ன என்பதுதான் எனது கேள்வி! இப்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள நிலங்களைப் பறித்து நிலமற்றவர்களுக்கு வழங்க அவர்கள் தயாரா? தலித்துகளுக்கான இட ஒதுக்கீடுகள் குறித்தும் தனி வாக்காளர் தொகுதிகள் குறித்தும் பேசுவதற்கு, நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் ஏன் இடம் வழங்கப்படவில்லை? சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டில், ‘எமது பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கைதான்’ என விடுதலைப் புலிகளின் தலைவர் உறுதிபட அறிவித்தாரே அது குறித்து நாம் பேச வேண்டாமா? இன்று வரை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புலிகள் மரணதண்டனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்களே, சிறைகளில் மாற்றுக் கருத்தாளர்கள் கொல்லப்படுகிறார்களே இவை குறித்தெல்லாம் நாம் எமது எதிர்ப்புக் குரல்களை எழுப்ப வேண்டாமா? வீரமும் துரோகமும் தியாகமும் கொலையும் இரத்தமும் குற்றமும் தண்டனையும் நாம் அச்செழுத்துகளில் படிப்பதுபோல் அப்படியே இருப்பதில்லை. எந்தவிதத் தருக்கங்களுக்கும் அடக்க முடியாத ஒரு ‘பைத்தியக்கார’ வாழ்வைத்தான் கடந்த இருபது வருடங்களாக நாங்கள் வாழ்கிறோம்.

தீராநதி: எக்ஸில் பத்திரிகையிலிருந்து உயிர்நிழல் ஏன் பிரிந்து சென்றது?

ஷோபாசக்தி: சின்னச் சின்ன கருத்து முரண்பாடுகள்தான். ஆனால் முட்டாள் தனமாக பெரிய பெரிய சண்டைகளைப் போட்டுவிட்டோம். சில வருடங்கள் கழித்து இப்போது பார்க்க வெட்கமாக இருக்கிறது.

தீராநதி: இப்போது வெளிவரவிருக்கும் உங்கள் புதிய நாவல் குறித்து ஏதாவது சொல்ல முடியுமா?

ஷோபாசக்தி: ஈழப் போராட்டத்தைப் பற்றிய இன்னொரு கேள்வியை இந்தக் கதைப்புத்தகத்தில் நான் முன் வைக்கிறேன். தியாகம், வீரம், இலட்சியம் இவை எல்லாம் உண்மையில் நமக்குக் கற்பிக்கப்பட்ட அதே அர்த்தங்களில்தான் உள்ளனவா; இல்லையென்றால் தியாகம், வீரம், இலட்சியம் எல்லாமே வெறும் தற்செயல்களா என்ற என்னுடைய தீராத சந்தேகம்தான் இந்த நாவல்.

நன்றி - தீராநதி

உங்கள் கருத்துக்களுக்காக .......
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
ஷோபா சக்தி அருமையான எழுத்தாளர். அவருடைய புத்தகங்களை இலண்டனில் வாங்க முடியுமா? தெரிந்தால் தகவல் தாருங்கள்.
<b> . .</b>
Reply
#3
ஒட்டுறதுதான் ஒட்டுறிங்க கொஞ்சம் ஒழுங்கா ஒட்டலாமே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
வணக்கம் கிருபன்...

ஷோபா சக்தியின் புத்தகம் ஒன்றையும் நான் படிக்குவில்லை. அதனால் அவர் நல்ல எழுத்தாளரா என்று சொல்லமுடியாது. அடிப்படைகள் வேறாக இருக்கலாம், கொள்கைகள் வேறாக இருக்கலாம். ஒரு படைப்பு என்ற முறையில் அதை வாசித்து அதில் உள்ள நல்லவற்றைப் பகுத்தாய்ந்து பெற்றுக்கொள்வது நல்லது.

ஷோபா சக்தியின் "விலங்குப் பண்ணை" என்கின்ற ஒரு ஆக்கம் அப்பால் தமிழ் இணையத்தளத்தில் உள்ளது. முடிந்தால் சென்று வாசியுங்கள்.


Reply
#5
<img src='http://www.yarl.com/forum/files/1st.jpeg' border='0' alt='user posted image'>

"விலங்குப் பண்ணை"

<span style='font-size:21pt;line-height:100%'>ஒரு மனிதனின் சிறு பக்கம்.........................
என்னை நிலை குலைய வைக்கிறது.

ஒரு இதயம் வேகாமல் வேகிறது.

தான் அழாமல் மற்றவனை அழ வைக்கிறது.

எழுத்தாளனே நான் உன்னை வாழ்த்தப் போவதில்லை.
காரணம்
நீ என்னுள் வாழத் தொடங்கி விட்டாய்.

உன்னை நான் பார்த்ததில்லை.
உன் எழுத்துகளில்
எத்தனையோ ஜீவன்களை
தரிசிக்கிறேன்..............

என்னோடு வாழ்ந்தவர்கள்
என்னிடம் சொன்னவை
என் நினைவுப் பறவையாக வந்து மோதி
என் இதயத்தை
கொஞ்சம் நிறுத்துகிறது.......................

-அஜீவன்</span>

Thanks: இளைஞன்
Reply
#6
சில நிமிடங்கள்
சில கணங்கள்
சிந்தனைச்சுழற்சி
எங்கெங்கோ சிதறி
இளமைக்காலத்தின் சிற்சில சம்பவங்களை
செவ்வனே கோடிட்டு காட்டியுள்ளது இந்த சிறுகதை

நன்றி நன்றி

அஜீவன் அண்ணா சொல்வது போல் ஏழுத்தளார் எனக்குள்ளும் குடியமர்ந்துவிட்டார் மதம் சாதி கடந்த ஒரு வாழ்க்கை முறை விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கையுடன்
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)