Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசூல்ராஜா MBBS க்குத் தடை...!
#1
<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album63/04a.jpg' border='0' alt='user posted image'>

வசூல்ராஜாவுக்கு நீதிமன்றம் தடை

கமல்ஹாசன் நடிக்கும் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தைத் திரையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்தியில் 'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தமிழில் கமல்ஹாசன், ஸ்னேகா, பிரபு நடிக்க வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் தயாராகி வருகிறது.

இதற்காக டூயட் பாட சுவிஸ் சென்று திரும்பியுள்ளார் கமல். வட கொரிய திரைப்பட விழாவில் கலந்து கொண்டுவிட்டு அப்படியே சுவிஸ் பறந்துவிட்டார் கமல். ஸ்னேகா உள்ளிட்ட படக் குழுவினர் சென்னையிலிருந்து போய்ச் சேர்ந்தனர். (கூடவே கமலுக்கு ஒத்தாசைக்கு கௌதமியும் போயிருந்தார்... ஹி.. ஹி...)

அனைவரும் ஊர் திரும்பி விட்ட நிலையில், படத்துக்கு நீதிமன்ற சிக்கல் கிளம்பியுள்ளது. இந்தப் படத்தின் தலைப்பு டாக்டர்களை இழிவுபடுத்துவது போல உள்ளது, எனவே படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது தொடர்பாக படத்தின் இயக்குனர் சரணுக்கும், டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

படத்தின் தலைப்பு கமலை மட்டுமே குறிப்பதாகவும், டாக்டர்களையோ, டாக்டர் தொழிலையோ இழிவுபடுத்துவதாக இல்லை என்றும் கமல்ஹாசன் தரப்பிலும், படத் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் விளக்கம் தரப்பட்டது.

ஆனாலும், தலைப்பை மாற்றாவிட்டால் வழக்கு தொடருவோம் என டாக்டர்கள் கூறினர். சொன்ன மாதிரியே தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சார்பாக அதன் தலைவர் பாலசுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' என்ற பெயரில் கமல்ஹாசன் நடித்து வரும் படம், டாக்டர்களின் மதிப்பை குலைக்கும் விதமாக உள்ளது. இந்தப் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி சென்சார் போர்டிடம் மனு கொடுத்தோம். பல நாட்களாகியும் அதற்கு பதில் வரவில்லை.

இந்தியில் 'முன்னாபாய்' என்ற பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அதன் தழுவல்தான் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்'. முன்னாபாய் என்றால் சின்னப் பையன் என்று அர்த்தம். ஆனால் வசூல்ராஜா என்பது மருத்துவ விதிமுறைகளை மீறக் கூடிய சொல்லாக உள்ளது.

எனவே வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதி பாலசுப்ரமணியம் விசாரித்தார். வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக மனுதாரர் பாலசுப்ரமணியமே நேரில் ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தைத் தொடர்ந்து 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தை வெளியிட மத்திய தனிக்கைக் குழுவினர் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இந்தத் தடை நீங்கினால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
கமலுக்கும் பெயருக்கும் ஏதோ இருக்குது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


ஒரு பெயர் கூட வைக்க உரிமை இல்லை ...தமிழ் நாட்டிலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#3
உண்மையை சொன்னால் டொக்டர்ஸ் க்கு கோபம் வரும் தானே? :mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
டொக்கருக்குக் கோபம் வருகுதோ இல்லையோ... சண்டியர் கணக்கில விருமாண்டிக்கு வந்த பப்பிளிச்சிட்டி போல இதுக்கும் வந்தாத்தான் திருட்டு விசிடியை மிஞ்சி பப்படம் ஓடி கமலுக்கு வசூல் வசதியா வரும் போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)