Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையிலான விடுதலைப் புலிகளின் குழ
#1
அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையிலான விடுதலைப் புலிகளின் குழு ஜெனீவா பயணம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் ஜெனீவாவில் தமது அரசியல் விவகாரக் குழுவின் மாநாட்டில் பங்குகொள்வதற்காகவும், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்வதற்கானதுமான பயணத்தினை மேற்கொண்டு இன்று நண்பகல் 1 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து உலங்குவானு}ர்தி மூலமாகப் புறப்பட்டுச் சென்றனர்.

இக்குழுவில் காவல்துறைப்பொறுப்பாளர் பா. நடேசன், நீதி நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பரா, மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் உட்பட பலரும் அங்கம் வகிக்கின்றனர்.

இக்குழுவினர் முதலில் ஜெனீவாவில் நடைபெறும் விடுதலைப்புலிகளின் அரசியல் விவகாரக் குழுவினரின் மாநாட்டில் பங்குகொள்வர். இதில் சமாதான முன்னெடுப்புகளின் தற்போதைய நிலைஇ மற்றும் இடைக்hல தன்னாட்சி அதிகார சபைப் பிரேரணை தொடர்பாகவும் மற்றும் பல விடயங்களும் கலந்துரையாடப்படுமெனத் தெரிகிறது.
--
--
Reply
#2
தகவலுக்கு நன்றி
Reply
#3
<b>வாகரைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் செல் விழுந்து வெடித்தது </b>
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று நண்பகல் மோட்டார் செல் விழுந்து வெடித்த சம்பவத்தில் 40 வயது குடும்பப் பெண்னொருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொரு பெண் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோட்டார் செல் பனிச்சங்கேணியிலுள்ள விடுதலைப் புலிகளின் காவலரணிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள வீடொன்றில் விழுந்து வெடித்துள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரணை இலக்கு வைத்து, இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இராணுவம் இந்த மோட்டார் செல் தாக்குதல்; மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.

கொல்லப்பட்டவர், பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ்.காளிப்பிள்ளை (வயது 40), காயமடைந்தவர் கே.உதயச்செல்வி (வயது 37) எனவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி நிதர்சனம்
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
தகவலுக்கு நன்றிகள் ஆவி....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
நன்றிக்கு நன்றி தமிழினிஅக்கா
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#6
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
நன்றி
[b][size=18]
Reply
#8
<b>பனிச்சங்கேணி தாக்குதல் இராணுவத்தினுடைய செயல் </b>

மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேனியிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்கு காவலரன் மீது இன்று மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது சிறீ லங்கா இராணுவத்திற்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி குற்றம் சுமத்தியுள்ளார். கிடைத்த தகவலின் படி கிரிமிச்சை இராணுவ முகாம் திசையிலிருந்து இந்த எறிகனைகள் ஏவப்பட்டிருப்பது போல் தெரிகின்றது. இந்த தாக்குதலுக்கும் இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக மக்கள் கருதுகின்றார்கள்.

இது சமாதானத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. அமைதிச் சூழ்நிலையை குழப்புவதை நோக்கமாகக் கொன்ட இத்தகைய தாக்குதல்கள் மீன்டும் கடுமையான யுத்தத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை இந்த சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சென்று பார்வையிட்டார்.


நன்றி நிதர்சனம்
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
பனிச்சங்கேணியில் இடம்பெற்றது எறிகணைத் தாக்குதல் அல்ல என விடுதலைப் புலிகளின் மட்டு-அம்பாறை அரசியற்துறையினர் தெரிவித்துள்ளனர். பனிச்சங்கேணியில் உள்ள விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்க நிலை மீது தேசவிரோதிகள் உந்துகணை(ஆர்.பி.ஜி) மூலம் தாக்குதல் நடாத்தினர்; இதன்போது விடுதலைப் புலிகளின் காப்பரண்களிற்கு எதுவித பாதிப்பும் எற்படவில்லை. இருந்த போதும் காப்பரண்களிற்கு மேலால் சென்ற உந்துகணை மக்கள் குடியிருப்பின் மீது வீழ்ந்து வெடித்ததில் இரு பெண்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவர் மருத்துவமனையில் கிகிச்சை பெற்றுவரும் வேளையில் மரணமடைந்தார்.
<b>
?
- . - .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)