Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாவின் சகோதரன் புலிகளின் நடவடிக்கையில் பலி...!
#1
தமிழ் தேசிய தேசத் துரோகி கருணா மட்டக்களப்பில் இருந்து வெளியேறிய பின் அவருடைய பணிகளையும் தேசத் துரோக வேலைகளையும் சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல்களுடன் இணைந்து செய்து வந்த கருணாவின் சகோதரன் ரெஜி மாதுறு ஓயாப் பகுதியில் புலிகள் நடாத்திய இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவருடன் இன்னும் சில முக்கிய கருணா குழு உறுப்பினர்களும் பலியானதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன....!

<b>Karuna's brother killed in LTTE operation</b>

[TamilNet, September 23, 2004 05:34 GMT]

The deputy of renegade Liberation Tigers commander Karuna was killed in an ambush by LTTE forces in the Maduru Oya sector on the Batticaloa-Polannaruwa district border in the early hours of Thursday, according to well informed sources in the eastern district. An LTTE official said there was an operation by their special forces in the interior jungles northwest of Batticaloa against some elements of renegade commander Karuna's paramilitary, which the Tigers say is working with the Sri Lanka army. 'Reggie', the deputy leader of the paramilitary, is the elder brother of Karuna.

Two senior associates of the renegade LTTE commander, Elilan and Thumilan, were also killed in the operation, LTTE sources in the east said.

LTTE sources in Batticaloa said the paramilitary had been operating out of a Sri Lanka armed forces camp in the Maduru Oya sector near the Batticaloa border.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நீதிநிலைக்கும் அநியாயம் அற்றுப்போகும் என்பது காலோட்டத்தில் இடம்பெறுவது தவிர்க்கமுடியாது.
இதுதான் நியதி
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவின் சகோதரன் ரெஜி எனப்படும் விநாயகமூர்த்தி சிவனேசதுரை உட்பட 3 பேர் நேற்றிரவு விடுதலைப் புலிகளின் அதிரடி நடவடிக்கையொன்றின் போது கொல்லப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்ட எல்லையில் உள்ள மாதுரு ஓயாவை அண்மித்த காட்டுப் பிரதேசத்தில் இவர்கள் மீது விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின் போதே இவர்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட ஏனைய இருவர் துமிலன் மற்றும் எழிலன் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இப்படியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினரால் ஊடகங்களுக்கு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ரெஜி எனப்படும் விநாயகமூர்த்தி சிவனேசதுரை கருணாவின் மூத்த சகோதரன், இவர் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த தனது சகோதரன் கருணா நீக்கப்பட்டதையடுத்து அவருடன் இணைந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவின் பிரதித் தளபதிகளில் ஒருவராக செயல்பட்ட இவர், தமிழ் தேசியப் படை என்ற பெயரில் இராணுவ துனைப்படையாக செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் மீது அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல் சம்பவங்கள் இவரது வழிநடத்தலிலே இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி புதினம்
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
தகவலுக்கு நன்றிகள் இருவருக்கும்....நடக்க வேண்டியது நடந்தே தீரும்.. இப்படி முடிஞ்சுதே கதை...!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவின் சகோதரன் ரெஜி எனப்படும் விநாயகமூர்த்தி சிவனேசதுரை உட்பட 3 பேர் நேற்றிரவு விடுதலைப் புலிகளின் அதி விசேட கொமாண்டோ படை நடவடிக்கையொன்றின் போது கொல்லப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்ட எல்லையில் உள்ள மாதுரு ஓயாவை அண்மித்த காட்டுப் பிரதேசத்தில் இவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட் தாக்குதலின் போதே இவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டுவர்களில் ரெஜி புளட் அமைப்பில் இருந்து தப்பி வந்து விடுதலைப் புலிகளின் அமைப்பில் இனைந்தவர் கருணா அமைப்பில் இருந்து நீக்கப்பட்டபோது அனியினரின் பிரதி தளபதியாகவும் இலங்கை அரச புலநாய்வுப்பிரின் உதவியாளராகவும் செயற்பட்டவர். இவர் யாழ் சுண்னாகம் பகுதியை சேர்ந்த பெண்னை திருமணம் செய்த 3 குழந்தைகளுக்கு தகப்பனார். இவரை மனைவியார் நாசகார வேலைகளை விடுத்து மீன்டும் அமைப்பில் இனையுமாறு மன்றாடியதாக தெரிய வருவதுடன் குழந்தைகளும் தேசவிரோத செயலில் இருந்து தகப்பனாரை ஒதுங்குமாறு பலமுறை மன்றாடி உள்ளனர்.

இவருடைய மனைவியாரின் சகோதரியார் விடுதலைப் புலிகளின் அமைப்பில் அதி விசேட சிறப்புப் படைப்பிரிவுத் தளபதிகளில் ஒருவரான ஆண்டாள் தற்போது தொழில்பட்டுக்கொன்டு இருக்கின்றார். விடுதலைப் புலிகள் மீது அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல் சம்பவங்கள் ரெஜியின் வழிநடத்தலிலே இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய இருவரில் துமிலன் என்பவர் கருணாவின் மெய்பாதுகாப்பு படைப்பிரிவின் சிறப்பத்தளபதியாக இருந்ததுடன் கருணாவின் மிகவும் நெருக்கிய நண்பன். மற்றும் எழிலன் அமைப்பின் முக்கிய உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கருணாவுடன் வரதறாயப் பெருமாள் தொடர்பு கொன்டு தனது இரங்கலை தெரிவித்ததாக தெரியவருகிறது. இருவரும் ஒரே பிரதேசத்தில் தற்போது தங்கி நிப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது.
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#6
கருணா என்ற முரளீதரன் நாட்டை விட்டுத் தப்பியோடியயபின், இலங்கை புலனாய்வுத் துறையினரால் ஆரப்பிக்கப்பட்ட "கிழக்குப் புலிகள்" ஒரு சிறு தமிழ் தேசவிரோத குழுவிற்கு தலைமை தாங்கியவந்தான் இந்த "ரெஜி" என்பது பழைய செய்தி.

ஆனால் இக்கும்பலுக்கு வேண்டிய உதவிகள், அரச தொடர்பு எல்லாவற்றையும் கவனித்தது நம்ம செக்கு "டக்கிலசு" தானாம். ரெஜியின் நடமாட்டம் குறித்த செய்தி புலிகளுக்கு கிடைத்தது ஒரு அனாமதேச தொலைபேசி அழைப்புத்தானாம். சில சமயம் இதுவும் ஈபிடிபியில் உள்ளவர்களீல் ஒருவரின் கைங்கறியமாயிருக்கும்.
" "
Reply
#7
இது தொடர்பாகவும் இன்று நிகழ்ந்த வேறு சம்பவங்கள் தொடர்பாகவும் பிபிசி சொல்லும் செய்தி இதோ....

<b>இலங்கை மட்டக்களப்பில் நடந்த தாக்குதலில் , கருணாவின் சகோதரர் கொலை என்று செய்திகள் கூறுகின்றன

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு-பொலன்னறுவை மாவட்ட எல்லைப்புறக் காட்டுப்பகுதியைல் நடந்தாகக் கூறப்படும் சம்பவத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றா கருணாவின் சகோதரர் ரெஜி எனப்படும் விநாயகமூர்த்தி சிவசேனதுரை உள்ளிட்ட கருணா அணியைச் சார்ந்த மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவம் பற்றி பக்கச்சார்பற்ற முறையில் இதுவரை உறுதிப்படுத்தக்கூடிய தகவல் வெளியாகவில்லை. </b>

bbctamil
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
நன்றிகள் தகவலுக்கு இருவருக்கும்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
இப்படி எல்லாம் போகுது.....
[b][size=18]
Reply
#10
இக்களத்துடன் தொடர்புடைய செய்தி எனபதால், "புதினத்திலிருந்து" இங்கு இங்கு தர விரும்புகிறேன்.

உட்கட்சி மோதல் குறித்த பி.பி.சி.யின் கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறிய டக்ளஸ்.
ஜ லண்டனிலிருந்து பொன். கதிரவன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2004, 0:19 ஈழம் ஸ
இன்று பி.பி.சி.யின் தமிழோசைக்கு ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பேட்டியில் உங்கள் கட்சியில் இடம்பெற்ற கொலைகளில் ஒருசில உட்புூசல் காரணமாக இடம்பெற்றனவா என்ற கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறியதுடன், நேரடியாக அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவுமில்லை.

ஈ.பி.டி.பி. அமைப்பினரிடையே இடம்பெற்ற ~சில கொலைகள்| ஈ.பி.டி.பியின் உள்ளக முரன்பாட்டால் இடம்பெற்றிருக்கலாம் என்ற கருத்தைப் பரவலாக பல ஊடகங்களும் தகுந்த ஐயங்களுடன் வெளியிட்டிருந்தன.

குறிப்பாக இம் மாதம் 11ம் திகதி அருள்தாஸ் என்பவர் ஊர்காவற்துறையில் கொல்லப்பட்டப்போது, அவர் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் என்றும், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபைத் தலைவர் என்றுமே ஈ.பி.டி.பி.யால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட நிதிப்பொறுப்பாளர் என்ற உண்மை மறைக்கப்பட்டது.

அதேபோன்று இம் மாதம் 18ம் திகதி புத்தளத்தில் சிவகுமார் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவர் முன்னாள் யாழ் மாவட்ட ஈபிடிபியின் பிரதி அமைப்பாளரும், தற்போதைய புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் என்றே ஈ.பி.டி.பி.யால் அறிவிக்கப்பட்டது. ஆனால் டக்ளஸ் தேவானந்தா பி.பி.சிக்கு 22ம் திகதி வழங்கிய பேட்டியில் சிவகுமாரே தற்போதைய யாழ் மாவட்ட அமைப்பாளர் என்ற உண்மையைத் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக ஈ.பி.டி.பி. அமைப்பின் யாழ் மாவட்டத்தின் நிதிப்பொறுப்பாளர் மற்றும் இணைப்பாளர் ஆகிய இருவரும் அடுத்தடுத்துக் ஏழு நாட்களிற்குள் கொல்லப்பட்டுள்ள போதும் அவர்களது பதவிகள் முன்னுக்குப் பின் முரன்படும் வகையில் ஈ.பி.டி.பி.யால் மறைக்கபட்டுள்ளன. இது நிதிவிவகாரம் சம்பந்தமாகவா இக் கொலைகள் இடம்பெற்றன என்ற சந்தேகத்தையும் இக்கொலைகள் இரண்டும் தொடர்புடையனவா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

இதேபோன்றே சின்னபாலா விவகாரத்திலும் பல ~நியாயமான சந்தேகங்கள்| எழுப்பட்டதோடு, தினமுரசின் ஆசிரியராக இருந்த அற்புதன் என்ற ரமேஸ் போலவே அவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. அற்புதனின் கொலையையும் புலிகள் மீது சுமத்திய ஈ.பி.டி.பி. அவருக்கு எந்தவித மரியாதையும் அவர்கள் செய்யவில்லை.

இந்நிலையிலேயே இன்று பி.பி.சிக்கு வழங்கியுள்ள பேட்டியில் டக்ளஸ், ஈ.பி.டி.பி ஒரு இராணுவத் துணைப்படை என்ற உண்மையையும், தாங்கள் இராணுவத்துடன் இணைந்து செயற்படுகிறோம் என்ற உண்மையையும் மறைத்து தங்களை அப்பாவிகள் போலக் காட்ட முனைந்திருந்தார்.

~தங்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட்டதே இவ்வாறான கொலைகளிற்கு காரணம்| எனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, உங்களது உறுப்பினர்களிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ~அவர்களிற்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது, ஆனால் இப்படிச் தினமும் தேடிச் சென்று கொல்ல முனைபவர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பது| என்று ஒன்றுக்கு ஒன்று முரன்பட்ட வகையில் பதிலளித்ததோடு, செய்தியாசிரியர் மேற்கொண்டு கேட்ட கேள்வியை இடைமறித்து தனது சொந்தக் கருத்துக்களையே அதில் தெரிவித்திருந்தார்.

அதேபோன்றே, இக் கொலைகளிற் சில, உட்கட்சி மோதலால் இடம்பெற்றிருக்கலாம் என்று புலியாதரவு இணையத்தளங்கள் செய்திகளை, கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனவே என செய்தியாசிரியர் கேட்டதற்கு உடனடியாகப் பதிலளிக்கத் தடுமாறிய டக்ளஸ், ~புலி ஆதரவு இணையத்தளங்கள் என்று சொல்லிவிட்டீர்கள் தானே! அதிலேயே அந்தப் பதில் அடங்கியிருக்கிறது தானே! ஏனச் சமாளித்ததோடு இதுவிடயத்தை நேரடியாக மறுக்கவோ அதுபற்றிக் கருத்துக் கூறவோவில்லை.
"
"
Reply
#11
தயவுசெய்து மன்னிக்க வேண்டுகிறேன்.

புதினத்தில் வெளிவந்த செய்தியை - களத்தில் வேறொரு பக்கத்தில் இணைக்க வேண்டிஐதஇ இங்கு தவறுதலாக இணைத்து விட்டேன்.

மீண்டும் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்.
"
"
Reply
#12
இவ்வாறு எவ்வளவு காலத்திற்க்கு
மனிதபடுகொலைகளை செய்துவிட்டு மற்றவர்கள்மீது குற்றம் சுமத்துவீர்கள்
.........
Reply
#13
நக்குறவர்கள் உள்ளவரையாக இருக்கலாம்!
.
Reply
#14
இன்று வீரகேசரியில் வெளிவந்த கட்டுரையிலிருந்து..

சளைக்காது மேற்கொள்ளப்பட்டு வரும் களையெடுப்பு நடவடிக்கை..


தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளை ஆணிவேருடன் பிடுங்கி அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் புலிகள் தீவிரமாக ஈடுபட்டிருப்பது அண்மைக்கால சம்பவங்களிலிருந்து பரிபூணமாகத் தெரிகிறது.

அந்த வகையில், விடுதலைப் புலிகள் அமைப்பினால் நீக்கப்பட்ட கருணாவின் சகோதரரான றெஜியின் மரணம் அவர் சார்ந்த சக்திகளுக்குப் பேரிடியாக விழுந்துள்ளது.

கருணா, புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட முன் புலிகளின் ஆண்டான்குள கோட்ட இராணுவப் பொறுப்பாளராக இருந்த ரெஜி, பின்னர் கருணாவுடன் இணைந்து புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டார். புலிகள் அமைப்பில் நீக்கப்பட்ட பின் கருணா, ரெஜியை பெரும் இராணுவ தளபதியாகக் காட்ட முனைந்ததுடன் கிழக்கில் இருந்த விசாலகன் படையணி, விநோதன் படையணி, அன்பரசி படையணி, மதனா படையணி, ஜோன்சன் ஆட்லறி பிரிவு, ஆகியவற்றைக் காட்டி அவையாவும் தன்னுடைய கட்டுப்பாட்டிலிருப்பதைப் போன்ற தோற்றப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைந்தார். கிழக்கில் தமது மேலாண்மையை முற்றாக நிலை நிறுத்தும் நோக்குடன் அப்போது திருகோணமலை ஊடாக விஷேட நடவடிக்கையை மட்டக்களப்பில் மேற்கொள்ள புலிகள் திட்டமிட்டு, கேணல் சொர்ணம் தலைமையில் தமது படையணிகளை மட்டக்களப்பு திருகோணமலை எல்லையான வெருகலில் குவித்தபோது, கருணா தனது சகோதரர் ரெஜியை வெருகல் பகுதிக்கு அனுப்பி அங்கு தமது அணிகளின் முற்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது வெருகல் பகுதியில் பெருமெடுப்பில் தமது ஆட்களை கொண்டுபோய் நிறுத்திய ரெஜி மற்றும் ஜிம் கெலி தாத்தா, ரொபேர்ட் ஆகியோர், புலிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர் தமது ஆட்களையும் கைவிட்டு விட்டு ஒரேயடியாக வாகரைப் பக்கமாகப் பின் வாங்கினர். விநோதன் படையணியின் பாரதிதாஸன் படுகாய மடைந்ததுடன் அன்பரசி படையணியின் சாவித்திரி என்பவரும் காயமடைந்து போராளிகள் அனைவரும் புலிகளிடம் சரணடைந்ததால் ரெஜி தலைமையிலானவர்களின் கதி அந்தோ கதியானது. பின்னர் மட்டக்களப்பு புலிகளின் பூரண ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட பின் ,ரெஜி கொழும்புக்குத் தப்பி வந்தார் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கருணாவின் நிதிப் பொறுப்பாளராகவிருந்த குகநேசன் உட்பட எண்மர் கொட்டாவ பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், தென்னிலங்கையில் தமது இருப்பு அபாயகரமானது என்பதைப் புரிந்து கொண்ட ரெஜி மீண்டும் மட்டக்களப்பினுள் ஊடுருவ முயன்றார். அங்கு எல்லைக் காட்டுப் பகுதிகளினுள் ஊடாகச் சென்று ஆயுதக் குழுக்களின் ஒத்துழைப்புடன் புலிகளுக்கு எதிராகஆங்காங்கே தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

அந்த வகையில் காயங் கேணியில் புலிகளின் மட்டு. அம்பாறை மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் பாவா மற்றும் புனர்வாழ்வுத் துறை உறுப்பினர் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவம்; புல்லுமலையில் அண்மையில் பெருமெடுப்பில் புலிகளின் காவல் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை ஆயுதக் குழுக்களின் உதவியுடன் இவர் மேற்கொண்டிருந்தார் எனத் தகவல்கள் தெரிவித்தன.கடைசிகாலகட்டங்களில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் தமது ஊடுருவல் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையில், இவ்வாறான குழப்பம் விளைவிக்கும் சம்பவங்களை மேற்கொள்வதில் ஆயுதக் குழுக்கள் தீவிரம் காட்டி வந்தன.

புலிகளின் முக்கியஸ்தர்களையும் அரசியல் போராளிகளையும் இலக்கு வைத்து இந்த ஆயுதக் குழுக்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தன.

இதேவேளை, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வவுணதீவில் புலிகளின் அரசியல் பிரிவினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் சந்திப்பு இடம் பெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவரும் புலிகளின் பிரதிநிதிகளை, அரசுடன் இணைந்து செயற்படும் இந்த ஆயுதக் குழுக்கள் இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளக் கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்து தமது கண்காணிப்பைப் பலப்படுத்தியிருந்தனர். இதன் பின்னணியில் புலிகளின் பார்வையில் ரெஜி குழுவினரின் நடமாட்டம் தெரியவே பின் தொடர்ந்து சென்று முற்றுகையிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பின் எல்லைக் காட்டுப் பகுதியினுள் மாதுறு ஓயாவுக்கு அண்மையில் கூடாரம் அமைத்து இருந்த ரெஜி தலைமையிலான குழுவினரை கடந்த திங்களன்று இரவு புலிகளின் ஜெயந்தன் சிறப்புப் படையணியினர் முற்றுகையிட்டனர். தாம் முற்றுகையிடப்பட்டதை உணர்ந்து சுதாகரித்துக் கொண்டு தப்பியோட முயன்றபோது ரெஜி மற்றும் கருணாவின் மெய்ப்பாதுகாவல் பிரிவுப் பொறுப்பாளர் துமிலன், எழிலன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுடனிருந்த ஏனையோர் காயங்களுடன் தப்பி ஓடிவிட்டனர். இவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கித் தப்பி ஓடினர் என்று புலிகள் அறிவித்துள்ளனர். அப்படியானால், இவர்களுக்கு அங்கு அண்மையில் பாதுகாப்புக்குரிய இடங்கள் இருந்துள்ளன என்பது இங்கு கண்கூடு.

(மாதுறு ஓயாவுக்கு அண்மையில் இராணுவத்தின் பாரிய முகாம் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.)

சம்பவம் இடம் பெற்ற இடத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் புலிகள் தீவிர தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர்.

ரெஜி குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலிருந்து செய்மதித் தொலைபேசி மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள், ஏ.கே47 இரண்டு, பிஸ்டல்கள்3, ஆர்.பி.ஜி1 (இவற்றின் தொடரிலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளன.) கடவுச் சீட்டு, தேசிய அடையாள அட்டை ஆகியவற்றைப் புலிகள் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கடவுச்சீட்டின் மூலம், கருணா புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ரெஜி கொழும்பில் நடமாடியுள்ளார் என்பதைப் புலிகள் உறுதி செய்துள்ளனர்.அங்கிருந்த ஏனைய ஆவணங்கள் சிலவற்றின் மூலம் ஆயுதக்குழுக்களின் தொடர்புகள் குறித்த பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன.

புலிகளின் குட்டிசிறி மோட்டார் படையணிப் பொறுப்பாளரான கேணல் பானு, அண்மையில் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி பொறுப்பை ஏற்றிருந்தார். அவர் பொறுப்பேற்ற கையோடு இடம் பெற்றுள்ள இந்த அதிரடி நடவடிக்கை ஆயுதக்குழுக்களுக்கு நெத்தியடியாக உள்ளதுடன் கருணாவின் கிளர்ச்சிக்குப் பின்னர் கிழக்கில் புலிகள் பலமிழந்து விட்டனர். ஆகவே அவர்கள் இப்போதைக்குப் போருக்குப் போக மாட்டார்கள் என்ற நினைப்பிலிருந்த இராணுவம் மற்றும் அரசுக்கும் கூட இடியாக விழுந்துள்ளது. இராணுவ ரீதியாலானதும் புலனாய்வுத்துறை சார்ந்ததுமான புலிகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மெருகேறி வருவதைக் கண்டு பேரின வாதிகள் வாய்பிழந்து நிற்கின்றனர்.

கிழக்கில் தேசியத்தையும் தாயகக் கோட்பாட்டையும் எவ்வித சேதாரமுமின்றிப் பாதுகாக்கும் நடவடிக்கையில் புலிகள் முழு வீச்சுடன் செயற்பட்டு வருகின்றனர்.

அண்மையில் வன்னிக்குச் சென்று தேசியத் தலைவரின் நெறிப்படுத்தல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்ட மட்டுஅம்பாறை மாவட்ட தளபதி ராம், ஜெயந்தன், படைப்பிரிவுத் தளபதி ஜெயார்த்தன், தளபதி ஜனார்த்தனன் துணைத் தளபதிகள் மற்றும் பிராந்திய பொறுப்பாளர்களுடன் இணைந்து கேணல் பானுவின் வழிநடத்தலின் கீழ் கள நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். காடுகளின் ஊடகத் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் ஆயுதக்குழுக்கள் ஊடுருவல்களை மேற்கொள்ள விடாமல் ஜெயந்தன் சிறப்புப் படையணியினர் காடுகளினுள் சல்லடைபோட்டுத் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இதேவேளை பொலனறுவ மன்னம்பிட்டி பகுதியில் கடந்த வியாழனன்று இரவு இராணுவத்துக்குத் தகவல் வழங்கிவந்த முக்கிய புள்ளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இராஜதுரை என்ற 24 வயதுடைய இந்நபர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டார்.

பின்னர் பல முக்கிய தகவல்களுடன் புலிகள் அமைப்பிலிருந்து தப்பிவந்து வவுனியாவில் குட்டி என்ற பெயருடன் இராணுவ ஒற்றராகச் செயற்பட்டுவந்தார் என்று கூறப்படுகிறது. 19992000 ஆண்டு காலப் பகுதியில் வவுனியாவில் இடம் பெற்ற புலி உறுப்பினர்களின் கொலைக்கு இவரே காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் இவர் பொலனறுவைப் பகுதிக்குச் சென்றுவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தெய்வீகன்
" "
Reply
#15
தகவலுக்கு நனறிகள்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)