Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'சும்மா தொந்தரவு பண்ணாதீங்க!
#1
பொதுவாக கமல் சர்ச்சைகளை தவிர்க்க விரும்புபவர்தான். சந்தேகமில்லை. ஆனால் வீணாக வம்பு வந்தால் என்ன செய்ய முடியும்? அதற்காக இதை தானே வந்த வம்பு வகையில் சேர்க்க முடியுமா தெரியவில்லை. வெளிநாடு சென்று அங்கு மேடை ஒன்றில், ''எல்லாருமாக சேர்ந்து தமிழை சாகடித்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழில் பேசுவதைக் கேவலமாக நினைக்கிறார்கள். அவர்களை என்ன செய்ய?'' என்றெல்லாம் பேசியதும் இவரும் அந்த கோஷ்டியில் சேர்ந்துவிட்டாரா என்று வியந்தவர்கள் உண்டு. டாக்டர் ஜயாவும், திருமாவளவனும், சேதுராமனும் இணைந்தது அரசியல் பிழைப்புக்காகத்தான் என்று கமெண்ட் அடித்தவர்கள் கமலின் இந்த பேட்டியைப் பார்த்துவிட்டு புருவம் உயர்த்தினார்கள் என்பது உண்மை. ஆனால் அந்த செய்தியின் ஈரம் காய்வதற்கு முன்பே இப்படியொரு அறிவிப்பு கமல் தந்த அதிர்ச்சிதான். என் அடுத்தப் படத்திற்கு பாதி தமிழ் பாதி இங்கிலிஷ் பெயர் வைப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு வக்காலத்தாக 'விமானம் - ப்ளேன்', 'தொலைப்பேசி - ஃபோன்' போன்றவற்றைக் காட்டி இதெல்லாம் தமிழா ஆங்கிலமா என்ற ரேஞ்சில் பேசியிருக்கிறார். ஆக கமல் இப்போது சொல்ல வருவது என்ன என்று கேட்டால், 'சும்மா தொந்தரவு பண்ணாதீங்க! ஏற்கெனவே ரொம்ப குழம்பிப் போயிருக்கேன்' என்பது போல இருக்கிறது.

அம்பலத்தில் இருந்து எடுத்தது
[i][b]
!
Reply
#2
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#3
கமல் தான் புத்திசாலி என்று காட்டுவதற்காக மற்றவர்களை குழப்புவதில் எப்போதும் கெட்டிக்காரர்
Reply


Forum Jump:


Users browsing this thread: