Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏட்டிக்கு போட்டி? அடுத்தது என்ன?
#1
அடுத்தது என்ன?

இலங்கை அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்குபவர்களுக்கு அண்மையில் அரசாங்கமும் புலிகளும் ஏட்டிக்குப் போட்டியாக செய்துவரும் காரியங்கள் வியப்பைத் தரலாம்.
கருணா என பூதமொன்று கிளம்பியது அதனைச் சாக்காக வைத்து இரண்டு பகுதியினரும் பிடிக்காதவர்களை களையெடுத்ததும் ஒரு புறத்தில் நடந்தது என்றால் இன்னொரு புறத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் தூதுவர்களுடன் சந்திப்பு,வெளிநாட்டுக்குத் தங்கள் தூதுவரை அனுப்பி அங்குள்ள பெருந்தலைகளை சந்திப்பு என்று இருபெரும் நாடுகளின் இராஜ தந்திர நடவடிக்கைகளில் இரு பகுதியும் ஈடுபட்டிருந்தன.



சமாதனப் பேச்சுவார்த்தைக்கான இரு பகுதியினரதும் முன்னெடுப்புகள் தான் கூர்ந்து நோக்கப்படவேண்டியவையாகின்றன.

ஒரு புறத்தில் அரசானது தந்திரோபாயக் காய்நகர்த்தல்களில் ஒரு படியாக ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை வளைத்துப் போட்டது.

வெளியிலிருந்து ஆதரவு உள்ளிருந்து ஆதரவு என்று பலவிதமாகவும் பேசிக்கொண்டிருந்த ஆறுமுகம் இப்போது அமைச்சர் பதவிகளீயும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.இந்நிகழ்வுடன் தொங்குபறியில் ஊசலாடிக்கொண்டிருந்த அரசாங்கம் பெரும்பான்மை பலத்தைப் பெறாவிட்டாலும் ஓரளவுக்கு ஊசலாட்டத்தைக் குறைத்துக் கொண்டது.

அத்தோடு தொங்குபறியில் அரசாங்கம் நிற்பதால் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு தொடரமுடியவில்லை என்ற் அரசின் பிரச்சாரமும் அடியுண்டு போயிற்று.

எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ அரசாங்கத்தை குறை சொல்வதோடு மாத்திரம் நின்றுவிடாமல் இடைக்கால நிர்வாக சபையின் அடிப்படையில்-நியாயமான தீர்வு யோசனையின் அடிப்படையில் நடக்கும் எவ்விதமான முன்னெடுப்புக்கும் தாங்கள் சம்மதம் என்று வெளியிட்ட அறிக்கையுடன் பந்தை சந்திரிக்காவின் பக்கம் தூக்கிப் போட்டுவிட்டு பந்து எப்போதோ வந்துவிட்டது இன்னும் நீங்கள் தான் உதைக்க ஆரம்பிக்கவில்லை என குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆளும் கட்சியும் தன் பங்குக்கு தீர்வுப்பொதி,தீர்வுத்திட்டம் அது இது என்று பூசி மெழுகி இப்போது புதிதாக தேசிய ஆலோசனைச் சபை என்பதில் வந்து நிற்கிறது.இதுவரை பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிய அனுபவத்தில் குரங்கென்று நினைத்தே பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்

இதே காலப்பகுதியில் புலிகள் சமாதானத்துக்கான தங்களின் விருப்பை பலவேறு வழிகளிலும் வெளியிட்டதோடு சமாதனப்பேச்சுவார்த்தைகளுக்கு தாங்கள் எப்பவோ தயார் அரசாங்கம் தான் பின்னடிக்கிறது என்று வெளியுலகிற்கு நிரூபிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன் ஒரு வெளிப்பாடு தான் அண்மையில் புலிகளின் அதி உயர் அரசியல் ஆலோசனைக் குழுவின் ஐரோப்பியச் சுற்றுப்பயணம்.

புலிகளின் முக்கிய பிரமுகர்களுடன் வள ஆலோசகர்களாக பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்த சட்டவல்லுனர்கள் அடங்கிய குழு பாலசிங்கம் அவர்களையும் இணைத்துக்கொண்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான இடைக்கால நிர்வாக சபை என்ற தமது திட்டத்தைச் சீர் செய்வதில் முனைந்தார்கள்.

வழமை போலவே சட்டவல்லுனர்களையும் பாலசிங்கத்தையும் வன்னிக்கு அழைத்து தீர்வுத்திட்டம் தயாரித்து பின்னர் செய்தியாளர் மாநாட்டில் அதனை வெளிப்படுத்தியுமிருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யாமல் உலகறிய பல்வேறு முக்கியமான நாடுகளிலும் வதியும் தமது சட்டவல்லுனர்களை அழைத்து தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரித்ததன் மூலம்.இது ஒன்றும் மேம்போக்கான திட்டம் அல்ல இலங்கையின் அரசியலமைப்பு இறையாண்மை இனஙக்ளுக்கிடையிலான வேற்றுமை ஒற்றுமைகளை கருத்தில் கொண்டு உலக வழக்கிலுள்ள அரசியல் அமைப்புகளுக்கு இணையாகத் தயாரிக்கப்பட்ட திட்ட வரைபு என்பதை உலகறியச் செய்வதெ இந்த ஐரோப்பியச் சந்திப்பின் முக்கிய நோக்கம்.

தொடர்ந்தும் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் பல்வேறு தலைவர்களையும் சந்தித்து உரையாடி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் அறிக்கையளவில் மட்டுமன்றி செயலளவிலும் த்யார் என்பதை விளக்கியிருக்கிறார்கள்.

இப்போது புலிகள் வசம் எழுந்தமானமாக இன்றி சட்ட வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டம்.

அரசாங்கத்தின் வசம் ஆக்கபூர்வமான திட்டம் எதுவுமில்லை.ஆனால் தம்மிடம் இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு உண்டு என இரு பெரும் தேசியக் கட்சிகளும் அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.புலிகள் செய்ததுபோல் சரியானதொரு தீர்வுத்திட்டத்தை தயாரித்து அதனை உலகறியச் செய்வதே முறை

பந்து இப்போது அரசாங்கத்தின் பக்கம்

அடுத்தது என்ன?

நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
Quote:இலங்கை அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்குபவர்களுக்கு அண்மையில் அரசாங்கமும் புலிகளும் ஏட்டிக்குப் போட்டியாக செய்துவரும் காரியங்கள் வியப்பைத் தரலாம்.
<b>கருணா என பூதமொன்று கிளம்பியது அதனைச் சாக்காக வைத்து இரண்டு பகுதியினரும் பிடிக்காதவர்களை களையெடுத்ததும் ஒரு புறத்தில் நடந்தது</b> என்றால் இன்னொரு புறத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் தூதுவர்களுடன் சந்திப்பு


ஈழநாதன் இந்த கருத்து குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

பூதமோ??????? புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!!!!!!!!!!!!!!

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)