10-13-2004, 09:26 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/sneha400.jpg' border='0' alt='user posted image'>
பெண்கள் பலவீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட காலமெல்லாம் மலையேறி விட்டது. இன்றைய பெண்கள் நன்றாகவே மாறிப்போயிருக்கின்றார்கள். ஒரு நாட்டையே ஆளும் வரைக்கும் முன்னேறி இருக்கும் இன்றைய பெண்களிடம், ஆண்கள் வாலாட்ட முடியாது என்று சொல்லும் அளவிற்கு, பெண்கள் பலவழிகளிலும் பலம் வாய்ந்தவர்களாகி வருகின்றார்கள். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க மாற்றமாக இதை எடுத்துக் கொள்ளலாம். எந்தத் துறையையும் விட்டுவைக்காது, இவர்கள் அகலக் கால் பதிக்கும் போக்கு, ஆணுக்கு சரிநிகரான பெண்கள் என்ற நிலையையே கொண்டுவந்து சேர்த்திருக்கின்றது.ஆனால் பெண் என்பவள் பெரிதாக முன்னேறி இருந்தாலும், இவர்கள் பெறும் ஊதியத்தை நோக்கும்போது, இன்றும் இவர்கள் பலவீனமானவர்க்ள என்று பிரிக்கப்பட்டு வருவதையே நம்மால் காணமுடிகின்றது. உலக நாடுகளெங்கும் இதே நிலைதான் தெரிகின்றது. உலகின் மிகப் பிரபல்யமான காலணி உற்பத்தி நிறுவனங்கள், ஆசிய நாடான தாய்லாந்தின் தொழிற்சாலைகளில்தான் தமது உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றன. குறைந்த செலவில் பெரிதாகச் சம்பாதிக்கும் பேராசையில்தான், இவர்கள், இப்படியான உற்பத்திகளை, இந்த நாடுகளின் தொழிற்சாலைகளில் நடாத்தி வருகின்றார்கள்.
4 டாலருக்கும் குறைவான நாளாந்த வேதனந்தான் இந்தப் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதே போல மெக்ஸிக்கோ போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், தொழிற்சாலைகளை நிறுவி, அங்கு பெண்களை வேலைக்கு அமர்;த்தி, மிகக் குறைவான சம்பளத்தையே பெரிய நிறுவனங்கள் கொடுத்து வருகின்றன.
ஐ.நா. சபையின் அபிவிருத்திப் பிரிவின் ஓர் அறிக்கையின்படி, உலகின் எல்லா நாடுகளிலும், பெண்கள், ஆண்களை விடக் குறைவாகவே சம்பளம் பெற்று வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பளம் குறைவாக இருக்கும் nது நேரத்தில், இவர்கள் தொழிலாற்றும் நேரம் கூடுதலாக இருப்பதையும் இவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
இன்னொரு புள்ளி விபரத்தின்படி, உலக நாடுகளில் வாழும் பெண்களில் 70வீதமானவர்கள் வறியவர்களாகவே இருக்கின்றார்கள். இதில் 45 வீதமானவர்கள், தொழில் செய்வோர், பட்டியலில் இணைகிறார்கள்.
<b>தொழில் செய்யும் ஆணை விடப் பெண்ணுக்கு எப்பொழுதுமே, பல சிக்கல்களைச் சந்திக்கும் நிலை வந்து சேர்வதுண்டு.</b> பாலியல் ரீதியான தாக்கங்களில் இருந்து இவள் தப்ப வேண்டி இருக்கின்றது. வேலைக்கு வந்து வீடு போய்ச் சேர்வதற்குள், பல பிரச்சினைகளுக்கு இவள் முகம் கொடுக்க வேண்டி இருக்கின்றது. கடந்த 10 வருடங்களில், தொழிலுக்குப் போய்வந்து கொண்டிருந்த மெக்ஸிக்கோ பெண்களில் 350 பேர், இதுவரையில் இறந்திருக்கிறார்களாம்.
<b>பிரித்தானியாவில் , சென்ற வருடம் எடுத்த ஆய்வொன்றின்படி, தொழில் செய்கின்ற பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில், சம்பள வித்தியாசம் இருப்பதன் காரணம்,பாலியல் ரீதியாக இயற்கையாக உள்ள வேறுபாடுதானே ஒழிய, பெண் என்று குறைத்து மதிப்பிடுவதால் அல்ல என்று கூறியிருக்கின்றார்கள். உதாரணமாக நிர்வாகப் பணிகளில், பெண்கள் ஈடுபட இடையூறாக இருப்பது, அவர்கள் தாய்மை அடைவதுதான்.
பிள்ளைகளைப் பராமரிக்க இவர்களுக்கு நேரம் ஒதுக்குவதாலோ அல்லது , பகுதி நேர வேலை செய்ய அனுமதிப்பதாலோ, நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்படலாம் என்று அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது.</b>
உலகெங்கும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட வண்ணமாகவே இருக்கின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில் 6 மில்லியன் பெண்கள்- அதாவது தொழில் செய்யும் வயதை எட்டிப் பிடித்தவர்களில் 20 வீதமான தொகையினர், வெளிநாடுகளில் ஏழு நாட்களும் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். இவர்கள் பலவழிகளிலும் துன்புறுத்தப்பட்டு வருகின்றார்கள். இந்தியாவின் 90 வீதமான பெண்கள் தெரு வியாபாரிகளாகவும், குடிசைக் கைத்தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், தொழில் செய்கிறார்கள். இவர்கள் சட்டரீதியாக எந்தப் பாதுகாப்பும் பெறாதவர்கள். கொலம்பியாவில், தங்கள் உரிமைகளுக்காக, தொழிற் சங்கங்களில் இணைந்து குரல் கொடுக்கும் பெண்கள் கொல்லப்பட்டு வருகின்றார்கள். இன்று உலகில், இந்த நாட்டில்தான், பெண்கள் அதிகமாகக் கொல்லப்படுகின்றார்கள்.
வடக்கு மெக்ஸிக்கோவில், சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் பெண்கள் நிலை மோசமாக இருக்கின்றது. இவர்கள் கர்ப்பிணிகளுக்கான மருத்துவப் பரிசோதனைக்கு உடபடுத்தப்படுகின்றார்கள். அது மட்டுமா? கருத்தடுப்பு மாத்திரைகளும் இவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. ஆபிரிக்காவிலோ, வேலை செய்கின்ற வயதில் இருக்கும் பெண்களில் பெருந் தொகையினர், எயிட்ஸின் தாக்கத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். அமெரிக்காவிலோ கர்ப்பிணிகளுக்கான மருத்துவ லீவு, மறுக்கப்பட்டு வருகின்றது. சீனாவில் விளையாட்டுப் பொம்மைகள், உடு;ப்புகள், தயாரிக்கும் தொழிற்சாலைகள் அடிக்கடி தீப்பற்றிக் கொள்வதால், உயிரிழக்கும் பெண்கள் ஏராளம்.
வருடாவருடம் 50,000 பெண்கள் வரை, எல்லை வழியாக விபசாரத் தொழிலுக்காக வேற்று நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வருகின்றார்கள்.
இப்படியாகப் பெண் என்பவள் சமூகத்தில் நசுக்கப்படுவது நன்றாகவே தெரிகின்றது. பலவீனமானவள் என்று சொல்லிக் கொண்டு பெண் எனபவள் பல கொடுமைகளை அனுபவிப்பது தொடர்கின்றது. பெண் என்பவள் பெரிய பெரிய பதவிகளில் இருந்து கொண்டு,ஆண் வர்க்கத்தை கட்டியாள்கின்ற தகுதிக்கு வந்து விட்டாள் என்று நாம் திருப்திப்படுவதற்கில்லை. அவள் பலரின் காலடியில் மிதிபட்டபடிதான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
இவளுக்கு விடியல் எப்பொழுது வரப்போகின்றது?
Thanks : sooriyan.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: