Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடியலைத்தேடும் வெண்புறாக்கள்
#1
[b]விடியலைத்தேடும்
வெண்புறாக்கள்

அழகிய அந்தி
மேற்குவானில்
சிவப்பு சாயம்
தயாரிக்கப்படுமிடம்...!

தினமும்...
அந்திநேரம்
வருகிறது
போகிறது
அந்தநேரம்
நாங்கள்
விளையாடிக்கொண்டிருப்போம்..!

ஓடிப்பிடித்து
கிந்தியடித்து
கிளித்தட்டு மறித்து
கிட்டிப்புள்ளு அடித்து
நாங்கள்
விளையாடுவதில்லை..!?

நமக்குப் பிடித்த
ஓரே ஒரு விளையாட்டு
இயக்கமும் ஆமியும்...!!

விளையாட்டில் வெற்றிதோல்லி
கானுமுன்னமே
என்
அன்னையளைக்கும் குரல்கேட்கும்

"அம்மா" இன்னும் சொஞ்சநேரம்...?
கெஞ்சினாலும் விடமாட்டாள்..!
பாடம் சொல்லித்தர வேண்டுமாம்..!!!

அவள் தினமும் அப்படித்தான்
நின்மதியாய்
விளையாட விடமாட்டாள்
எனக்கு
அம்மாவை அதிகம் பிடிக்கும்
ஆனால்...
அடிக்கடி படிக்கச்சொன்னால்தான்
ஆத்திரம் வரும்....!
விளையாட்டைவிட
அப்படியென்ன படிப்பு வேண்டியிருக்கென்று
அப்போதெல்லாம் நான்
அழுவதுண்டு...!

இரவு எட்டுமணிவரை
அல்லது
இடையில் யாரும் வரும்வரை
அன்னையின்
பள்ளிப்பாட
வாழ்க்கைப்பட
வகுப்புகள் இடம்பெறும்..!

எட்டு மணிக்குப்பின்பு
கிட்ட இருக்கும்...
ஆழக்கடல்...
இசைக்க இசைக்க
முற்றத்து மல்லி
மணக்க மணக்க
ஆனந்தம் அலைமோத
நிலாச்சோறு..!

அதில்...
எத்தனை சுகம்..!
அடடா..
அலைகள் இசைபாட
மேகம் பனி தூவ
நிலவு விளக்கேற்ற
மணலில் கால்புதைத்து
உண்டு...
உறங்கிய நாட்கள்
இவை...
மீண்டும் வரவேண்டும்
ஒரு தடவை
கனவிலாவது..!!!

வே.த. தமிழீழதாசன்
03.11.2004 (பாரீஸ்)
[size=18]<b> ...!
..!!!</b>
<b>-..</b>
Reply
#2
மலரும் நினைவுகள் சொன்ன கவி நன்று வாழ்த்துக்கள்.. இன்னும் உங்கள் கவி படிக்க ஆவலுடன்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
ரொம்ப நன்று. வாழ்த்துக்கள் தமிழீழதாசன் அண்ணா
----------
Reply
#4
உங்கள் நினைவலைகளை
நிஜ அலைகளாய் மறுபிரசுரம்
செய்த கவிக்கு வாழ்த்துக்கள்...!

உங்கள் வீட்டைப்போல
எங்கள் கூட்டிலும்
அதே அம்மா....
எங்கள் கூட்டின் பின் வளவுக்குள்
கிரிக்கெட் அடிக்க
கெஞ்சிக் கூத்தாடி
அவசர அவசரமாய் வீட்டுப் பாடம் பண்ணி
அனுமதி பெற்று
மகிழ்ச்சியா வளவுக்குள் இறங்க...
வெடிக்கும் துப்பாகிகள்
பெல்கள் கிணுகிணுக்கும்
புக்காராவும் அவ்ரோவும் கூட வரும்,
எடேய் குஞ்சுகளே
போங்கடா பங்கருக்க
அன்னையின் அலறல் கேக்கும்
வானத்தை விடுப்புப் பார்த்தபடி
எப் எம் ரோடியோவும் கையுமாய்
பங்கருக்குள் பதுங்கல்....
அப்பா சொல்லித்தந்த
சிங்களம் கொண்டு
அரைகுறையாய் விளங்கி
குண்டு இங்க போடப்போறாங்கள் என்று கத்த
பதறி அடிப்போர் பதட்டம் கண்டு
பயத்துடன் ஓர் ஆனந்தம்....
இப்படி நாமும் கனநாள்
கழித்ததுண்டு....!

கெலி அடித்த வெற்றுறவைகள் பொறுக்கி
கோர்வையாக்கி
கிட்டுமாமா வேஷம் போட்டது
இன்னும் நினைவில் இருக்கு....
பொன்னம்மான் பூங்காவில்
புலிக்குட்டி பார்க்க
பதுங்கிப்பதுங்கிப் போனது
ஒரு காலம்....
காலத்தால் அது பெரியோருக்கு
கனத்த நாட்கள்
நமக்கோ அவையே வாழ்வாகிப் போனதால்
இனித்ததும் உண்டு....!
மீண்டும் அவை திரும்பினும்
அன்றும் அவை இன்பமே
நாம் சின்னச் சிட்டுக்களாய் இருந்தால்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
தமிழீழதாசன் அண்ணா கவிதை அருமையாக இருகிறது வாழ்த்துக்கள் .... தொடர்ந்து எழுதுங்கள் நாம் படிக்க ஆவலாக உள்ளோம்..

குருவி அண்ணா உங்கள் கவிதையும் நன்று ...
[b][size=18]
Reply
#6
தமிழீழதாசன்,குருவிகள் இருவரின் கவிதையை பார்க்கும் போது, உண்மையிலே பொறாமையாக உள்ளது. என்னால் கவிதைகளை ரசிக்க தெரிந்த அளவுக்கு கவிதை எழுத ஆண்டவன் வரம் தரவில்லை. அருமையான கவிதைகள் தொடர வாழ்த்துக்கள் இருவருக்கும்.!
தமிழீழதாசன் இந்த கவிதையையும் தற்ஸ் தமிழுக்கு அனுப்புங்கள்,
Reply
#7
தமிழினி- வெண்ணிலா- குருவிகள்- கவிதன் - ஹரி அனைவருக்கும் நன்றிகள்
மலரும் நினைவுகள் மறுபடியும் தொடரும் உங்கள் விமர்சனங்களின் எதிர்பார்ப்போடு
[size=18]<b> ...!
..!!!</b>
<b>-..</b>
Reply
#8
Quote:என்னால் கவிதைகளை ரசிக்க தெரிந்த அளவுக்கு கவிதை எழுத ஆண்டவன் வரம் தரவில்லை

என்னண்ணா ..ஆண்டவனா...? அவர் எங்கை இருக்கார்..? எப்படி இருப்பார்..? எப்படி தருவார்...? ... ஆமா உங்கடை வீட்டுக்கு பக்கத்து வீட்டு ஆண்டவரை சொல்லுறியளோ..? :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#9
kavithan Wrote:
Quote:என்னால் கவிதைகளை ரசிக்க தெரிந்த அளவுக்கு கவிதை எழுத ஆண்டவன் வரம் தரவில்லை

என்னண்ணா ..ஆண்டவனா...? அவர் எங்கை இருக்கார்..? எப்படி இருப்பார்..? எப்படி தருவார்...? ... ஆமா உங்கடை வீட்டுக்கு பக்கத்து வீட்டு ஆண்டவரை சொல்லுறியளோ..? :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கவிதன் நான் சீறியஸ்ஸாக சொல்கிறேன். நீங்கள் இப்படி நக்கல் அடிக்கிறீங்கள் Cry
Reply
#10
Hari.. கவிதை ஒன்றும் ஆண்டவன் வரமல்ல... வார்த்தைகளை கோர்த்துப் போட்டுப்பாருங்கள்...உங்களாலும் முடியும் கவிதை எழுத...முயன்று பாருங்கள்...இங்கு களத்திலேயே முன்னொரு தடவை முயன்றதாகத் தெரிகிறது...விடாது முயன்றால் இறுதியில் இந்தக் கவிதைகளை எல்லாம் வென்று உங்கள் கவிதை விளங்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
நன்றி குருவிகளே நன்றி. என்ன சொன்னாலும் கவிதை எழுதுவது ஒரு கொடைதான்.
Reply
#12
குருவியாரே இந்த பகுதிக்கும் கொஞ்சம் வாருங்கள். பலர் குழம்பி போய்யுள்ளனர்.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=43115#43115
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)