Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வவுணதீவில் ஒட்டுப்படை ஊடுருவித் தாக்குதல்: போராளி வீரச்சாவு
#1
வவுணதீவில் ஒட்டுப்படை ஊடுருவித் தாக்குதல்: போராளி வீரச்சாவு

Written by Paandiyan - Saturday, 04 March 2006 05:01

இன்று அதிகாலை 12.30 மணியளவில் வவுணதீவு யுத்த சூனியப் பிரதேசம் ஊடக விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவலரண் பகுதிக்குள் ஊடுருவி ஒட்டுப்படை மேற்கொண்ட தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.
ஒட்டுப்படைகளால் தாக்குதல் ஆரம்பித்ததும் காவலரணில் இருந்த போராளிகளில் மேற்கொண்ட பதில் தாக்குதலையடுத்து ஒட்டுப்படையினர் வவுணதீவு படைமுகாமை நோக்கி தப்பியோடியுள்ளனர்.

ஒட்டுப்படைகளின் இத்தாக்குதலை முறியடித்து போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் அறியப்படவில்லை

http://sankathi.org/index.php?option=com_c...=1986&Itemid=26
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
வவுணதீவில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல்: ஒரு போராளி மரணம்
[சனிக்கிழமை, 4 மார்ச் 2006, 03:26 ஈழம்] [ம.சேரமான்]
மட்டக்களப்பின் வவுணத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்குள் உள்நுழைந்த ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் ஒரு போராளி மரணமடைந்ததாக தமிழ்நெட் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


இது தொடர்பில் தமிழ்நெட் வெளியிட்டுள்ள செய்தி:

வவுணதீவில் சூனியப் பிரதேசத்தை கடந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்குள் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு அத்துமீறி உள்நுழைந்த ஆயுதக் குழுவினர் புலிகளின் காவலரண் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் நடந்த போது 10 விடுதலைப் புலி போராளிகள் காவலரணில் கடமையில் இருந்துள்ளனர். இதில் ஒரு போராளி உயிரிழந்தார்.

இருதரப்பினரிடையே 10 நிமிட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் அதன் பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் வவுணதீவு சிறிலங்கா இராணுவ முகாம் நோக்கி தப்பியோடியதாகவும் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரிலிருந்து தென்மேற்கில் 5.2 கிலோ மீற்றர் தொலைவில் வவுணதீவு உள்ளது.

http://www.eelampage.com/?cn=24542
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)