Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலை-அநுராதபுரம் வீதி உறங்கிக்கிடக்கும் உண்மைகள்
#1
[size=18]திருமலை-அநுராதபுரம் வீதி உறங்கிக்கிடக்கும் உண்மைகள்

<b>பா.சிவரஞ்சன்</b>

திருகோணமலை - அநுராதபுரம் வீதி ராஜீவ்காந்தி நல்லெண்ண நெடுஞ்சாலை என நாமம் இடப்படும் என இலங்கை - இந்திய இரு நாட்டுக் கூட்டறிக்கையில் தீhமானிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வீதியைப் புனரமைக்கவும் இவ்வீதியில் அமைந்துள்ள கிராமப்புறங்களின் அடிப்படைக்கட்டமைப்புக்களை சீர்செய்யவும் சிறிலங்கா அரசிற்கு இந்திய அரசு நிதிஉதவி வழங்கத் தீர்மானித்துள்ளது. இச்செய்தி கடந்தவாரம் ஊடகங்களில் வெளிவந்த செய்தி. இந்தியாவிற்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்த சந்திரிகா நகர்த்தும் திட்டமிட்ட காய்நகர்த்தல்களே இவை. ஒரு கல்லில் இரு மாங்காய் என பொதுவாகக் கூறுவார்கள். ஆனால், சந்திரிகாவோ ஒரு கல்லில் பல மாங்காய்களை பறிக்க முனைகிறார். பாரதம் ஈழத் தமிழர் விடயத்தில் கொஞ்சம் கூடுதலாகவே தனது கையைச் சுட்டுள்ளது. மீண்டும் ஒரு முறை தனது பிராந்திய நலன் கருதி சிறிலங்காவுடன் ஒப்பந்தங்களை கைச்சாத்திடத் தயாராகவுள்ளது. ஈழத் தமிழ் மக்களது முப்பது வருடகால அகிம்சைப்போரும் இரண்டு தசாப்தங்களுக்கு மேற்பட்ட ஆயுதப்போரும் பாரததேசத்தின் சொந்த நலன்களுக்காக வீண் போகக்கூடாது என்பதே ஈழத்தமிழ் இனத்தின் விருப்பமாகும்.

தமிழர்களை தனித்தேசிய இனமாக ஒப்பக்கொள்ளல்.

தமிழர்களின் தாயகத்தை அங்கீகரித்தல் (வடக்கு கிழக்கு இணைந்த
பிரதேசம்)

தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளல்.

இவையே அன்று தொட்டு இன்றுவரை ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளாகும். 1984 இல் திம்புவில் தமிழர் தரப்புக்கும் ஜே.ஆர் தலைமையிலான சிறிலங்கா அரசிற்கும் இடையே நடைபெற்ற பேச்சவார்த்தையில் கூட இவையே முக்கிய அம்சங்களாக விளங்கின. இவற்றில் இரண்டாவதாகக் கூறப்பட்ட வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர்களின் தாயகத்தை அங்கீகரித்தல் என்ற விடயம் எப்போதுமே சிங்களப் பேரிவாதிகளுக்கு கசப்பான விடயமே. தமிழர்கள் தனித் தேசிய இனமாகவோ, பாரம்பரிய தாயக நிலப்பரப்பைக் கொண்டவர்களாகவோ இருக்கக்கூடாது என்பதற்காக வடக்கு கிழக்கைத் துண்டாட சிங்களம் பல வழிகளிலும் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து (வந்துள்ளது) வருகின்றது. சிங்கள எல்லைகள் தமிழர் நிலங்களை நோக்கி நீட்ட வேண்டும் எனவும் ஆனமடுவிலிருந்து ஆனையிறவுவரை சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டும் எனவும் வீரத்துடனும் விவேகத்துடனும் நடவடிக்கைகளை தீட்டி நடைமுறைப்படுத்தியவர் காலஞ்சென்ற சிறிலங்கா சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா. இதற்கு அப்பால் எல்லா மாவட்டங்களுக்கும் கடல் தொடர்பு இருக்கவேண்டுமெனவும் ஆதாலால் சிறிலங்கா மத்திய மாகாணத்திலிருந்து இருபத்தி ஐந்து (25) சம கூறுகளாக (25-மாவட்டங்கள்) பிரிக்கப்படவேண்டும் என்ற ஒரு கருத்தையும் கொண்டுள்ளது. இதிலிருந்து விளங்குவது என்னவெனின் சகல மாவட்டங்களிலும் தமிழ் மக்களை சிறுபான்மையினராக்கி சிங்கள மக்கள் ஆளும் இனமாகவும் தமிழ் மக்கள் ஆளப்படும் இனமாகவும் இருக்கவேண்டும்; என்ற உள்நோக்கமே. அவ்வகையில் வடக்கு கிழக்கைப் பிரிக்க காலத்திற்கு காலம் மாறிமாறி ஆண்ட இரண்டு அரசாங்கங்களுமே போட்டி போட்டு பல சிங்களக்குடியேற்றங்களை திறம்பட நடாத்தியுள்ளது.

1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் வடகிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து ஒரு மாகாணசபை ஒரு முதலமைச்சின் கீழ் அமைக்கப்படும் எனக் கூறியதுடன் 31.12.1988 இற்கிடையில் கிழக்கு மாகாண மக்களிடமிருந்து எடுக்கப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலம் வடமாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து போய் இரண்டு மாகாணசபைகள் ஆவதா எனத் தீர்மானம் எடுக்கப்படும் என்ற வரையறையும் உடன்படிக்கையில் காணப்படுகின்றது. தமிழர் தாயகத்தின் நிலையான, நிரந்தரமான இணைப்பிற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வைத்த தந்திரமான நரித்தனமான ஆப்பே இந்த வரையறை என்பது வெளிச்சம். அந்த வரையறையை இந்திய அரசு கூட அந்த நேரத்தில் தனது சுயநல, பிராந்திய நலன்கருதி ஆமோதித்தது. இது விடயத்தில் தமிழர்தரப்பு நியாயம், நிலைப்பாடு என்ன என்பதை இந்தியா கவனத்தில் எடுக்கத்தவறியது கவலைக்குரிய செய்தியாகும். அத்துடன் மன்னிக்க முடியாததாகும்.

அவ்வகையிலேயே தற்போது திருகோணமலை - அநுராதபுரம் வீதிக்கு ராஜீவ்காந்தி நெடுஞ்சாலை எனப்பெயரிட்டு சிங்களம் தனது வடக்கு கிழக்கு பிரிப்புசதிகார வேலைகளை ஒரு புறமும் ஈழத்தமிழர்களையும் இந்தியாவையும் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை மறுபுறமும் என கனகச்சிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கருத்துத்தெரிவிக்கையில்: 'இது தமிழர் தாயகத்தை கூறுபோடும் விடயமாகவே பார்க்கிறோம், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவை ஊடறுத்து பல சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு அப்பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்டு இன்றும் அகதிகாளாக நலன்புரி நிலையங்களில் காலம் கழிக்கின்றனர். ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர். பலாத்காரமாக தமிழ்மக்கள் வெளியேற்றப்பட்டு அரச ஆதரவுடன் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்ற பகுதிகளை ஊடறுத்து நெடுஞ்சாலை அமைப்பது சமாதான முயற்சிகளுக்கு பாதிப்பாகவே அமையும்' என்பது புலிகளின் நிலைப்பாடு எனத்திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறாக தமிழர் தரப்பு நியாயம் இருக்கும் போது இந்தியா சிறிலங்கா அரசுடன் இது தொடர்பான ஒப்பந்தங்களை செய்வது எரியும் வீட்டிற்கு எண்ணை ஊற்றுவதற்கு ஒப்பானதாகும். மாறாக இந்தியா தமிழர் தாயகம் தொடர்பாக தமிழர் தரப்புடனேயே பேசவேண்டும். தமிழர் தாயகக் கடலில் அத்தமீறி பிரவேசித்து தமிழர் சதந்திரமாக தொழில் செய்யமுடியாது உள்ள சூழ்நிலையில் இந்திய மீனவர்கள் தமிழர் வளங்களை அள்ளிச் செல்கின்றனர். யுத்த காலத்தில் பட்ட துன்பங்களை தமிழ் மீனவர்கள் இன்றும் அனுபவித்துக்கொண்டே உள்ளனர். இது தொடர்பில் இந்திய அரசு ஆக்கபுூர்வமான நடவடிக்கை எதனையுமே இதுவரை எடுக்கவில்லை. ஆகவே ஈழத் தமிழர்களை நேசசக்தியாகவோ அல்லது அந்நிய சக்தியாகவோ அணுகும் முழுப்பொறுப்பும் பாரதநாட்டின் கையிலே உள்ளது என்பது மட்டும் உண்மை.


<b>நன்றி:</b> (ஈழநாதத்தின்) வெள்ளிநாதம் (19-25-11-2004)
<b>கணனித் தட்டச்சு:</b> திரு (ரஷ்யா)
Reply
#2
தகவலுக்கு நன்றிகள்
Reply
#3
அப்பிடியே ஐனாதிபதி மாவத்தைக்கும் ஐயலலிதா வீதி எண்டு வைக்கட்டும் நீர் கொழும்பு றோட்டுக்கு சோனியா முடிஞ்சா கண்டி றோட்டுக்கு சுப்பிரமணியசுவாமி வீதி எண்டு வைக்கட்டும்
அத்தியடி வீதியை குத்தியடி வீதி எண்டு வைக்கட்டும்

எல்லாம் செய்யட்டும்
எதுக்கும் தலைவரின்டை மாவீரர் உரையையும் திருப்பி ஒருக்கா கேக்கட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#4
சின்னப்பு சோவையும் இந்து ராமையும் மறந்திட்டியளே
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)