12-11-2004, 03:08 PM
காலையில் முட்டை சாப்பிட்டால் ஊளைச் சதை குறையுமா? குறையும் என்கிறது ஒரு ஆராய்ச்சி. வழக்கமான காலை உணவுக்கு பதிலாக முட்டை சாப்பிட்டால் ஏற்படும் திருப்தி மதியம் வரை நீடிக்கிறது. அதனால் மதியம் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவு குறைகிறது. காலை உணவாக முட்டை எடுத்துக் கொண்டவர் களையும் மற்ற வகை உணவு எடுத்துக் கொண்டவர் களிடமும் ஆய்வு நடத்தியதில் வேறு வகை காலை உணவு உட் கொண்ட வர்கள் அதிக அளவில் மதிய உணவு எடுத்துக் கொண்டது தொpய வந்துள்ளது. ஆனால் இந்த ஆய்வில் உடலில் கொலஸ்டரால்; அளவு அதிகாpக்கிறதா என்பதை ஆய்வு செய்யவில்லை. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்த உள்ளதாக உடல் பருமன் ஆய்வுக்கான ரோசெஸ்டர் மைய செயல் இயக்குநர் நிகில் துரந்தர் தெருவித்துள்ளார்.

