Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிந்திய விபரங்கள்
#1
பிந்திய விபரங்கள்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 300 சடலங்கள்

வாழைச்சேனை வைத்தியசாலையில் 80 சடலங்கள்

திருமலையில் 150 சடலங்கள்

மூதூரில் 200 இற்கு மேற்பட்ட சடலங்கள

அம்பாறையில் 600 சடலங்கள்

அம்பாந்தோட்டையில் 600 சடலங்கள் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3000 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. நிந்தவூரில் அரபுக்கல்லூரி மாணவர்கள் 45 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அம்பாந்தோட்டையில் பஸ் வண்டியில் சென்றவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். சந்தையில் கூடியிருந்தவர்கள் 2000 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. பொத்துவிலுடனான தொடர்பு அருகம்பை பாலம் உடைந்ததால் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் காடுகளினூடாக பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உல்லாச பயணிகள் பலரும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரிய குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

முல்லைத்தீவிலும் பலத்த சேதங்களும் உயிரழிவும் ஏற்பட்டிருக்கிறது. விபரங்கள் தெரியவில்லை. யாழில் செம்பியன்பற்றுää தாளையடி ஆகிய பகுதிகளில் உயிரழிவுகள் ஏற்பட்டுள்ளன. மக்களின் உடைமைகள் வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. எங்கும் சோகமும்ää அவலமும் காணப்படுகிறது. ஜனாதிபதி தனது விஜயத்தை ரத்துச் செய்துவிட்டு நாடு திரும்புகிறார். தேசிய அனர்த்த செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் பெருமளவு பெண்களும்ää குழந்தைகளும்ää வயோதிபர்களும் உயிரிழந்துள்ளார்கள்.

முப்படையினரும் பொலிசாரும் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கீரிமலை பகுதியில் இறந்தவர்களுக்கு கிரியை செய்ய சென்றவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

26.12.2004

கல்முனையில் மையவாடியையும் வெள்ளம் மூடியுள்ளது

கல்முனையில் மையவாடியையும் வெள்ளம் மூடியுள்ளதால் சடலங்களை அடக்கம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

மட்டக்களப்பு நாவலடி

மட்டக்களப்பு நாவலடி கிராமத்தில் சுமார் 300 மீனவர் குடும்பங்கள் வாழ்ந்தன. அதில் பெரும்பாலான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு தொடர்ந்து சடலங்கள் வந்தவண்ணமுள்ளன.

மாத்தறை

மாத்தறையில் 200 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

26.12.2004

தொடரும் அனர்த்தங்கள்

சடலங்கள் ஆங்காங்கே வீதிகளில் சிதறிக்கிடப்பதாகவும்ää பல பிரதேசங்களில் இன்னும் மீட்புப்பணி ஆரம்பிக்க முடியாது இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரை போன்ற பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் சில இடங்களில் சடலங்களை தமது தோள்களில் காவிச்செல்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில்

பருத்தித்துறையில் 42 சடலங்கள் வலவெட்டித்துறையில் 06 சடலங்கள் சாவக்கச்சேரியில் 26 சடலங்கள; யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

கிண்ணியா

கிண்ணியா வைத்தியசாலையில் முற்றாக சேதமடைந்துள்ளது. ஊழியர்களும்ää நோயாளிகளும் இறந்துள்ளனர். 300 சடலங்கள் கிண்ணியா பாடசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள்

இலங்கைக்கு அவசர உதவிகளை செய்யுமாறு இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது

26.12.2004

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சடலங்கள்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 300க்கு மேற்பட்ட சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சடலங்கள் வந்த வண்ணமிருக்கின்றன. காயமடைந்தவர்கள் தொகை கணக்கற்றது. மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளில் சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 600க்கு மேற்பட்டோர் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில். நூற்றுக்கு மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காத்தான்குடியில் 45க்கு மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சடலங்களை அடக்கம் செய்வதற்காக மக்கள் பள்ளிவாசல்களில் கூடி நிற்கின்றனர்.

வவுனியா வைத்தியசாலையில் 10க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமலையில் 150க்கு மேற்பட்டவர்களின் சடலங்களும் மூதூரில் 150 சடலங்களும் காலி ஆஸ்பத்திரியில் 100 சடலங்களும் இதுவரை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அம்பாறை மாவட்ட சேதவிபரங்கள் தெரியவில்லை. கணக்கெடுப்பு நடத்த முடியாத நிலை மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்படுமென மக்கள் எச்சரிக்கைபடுத்தப்பட்டுள்ளனர். மக்களை உயரமான இடங்களுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியே இந்தியாவிலும்ää இலங்கையிலும் தென்னாசிய பிராந்தியத்தில் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தியதென கூறப்படுகிறது. 8.5 ரிஜ்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக புவி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரிசாää கேரளம் தமிழகத்திலும் பல நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர்.

இலங்கை அரசு அனர்த்தங்கள் தொடர்பான பணிக்கென விஷேட குழு ஒன்றை அமர்ததியுள்ளது. முப்படையினரும்ää பொலிசாரும் அவசர பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பிரதமருக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரமாண்டமான அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

மக்கள் சமைத்த உணவை பெறுவதும் கடினமாகியுள்ளது.

கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் 150 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கில் மின்சாரம் தொலை தொடர்புகள் முற்றாக சீர்குலைந்துள்ளன.

26.12.2004

தாங்கமுடியாத துயரம்

பெரும் கடல் பெருக்கினால் குறிப்பாக கிழக்கிலும் நாடுபூராவும் பதட்டம் நிலவுகிறது. பலர் தமது உற்றார் உறவினர்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மூதூரில் ஆறு கிராமங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன.

மட்டு அம்பாறை கரையோரக் கிராமங்கள் எல்லாமே ஏதோவொரு அளவில் ;பாதிக்கப்பட்டுள்ளன

பொத்துவிலிருந்து திருமலை வரை இப்பாதிப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.

பலநூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பல கிராமங்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.

மூதுர் வாகரை நாவலடி கல்லடி மருதமுனை அக்கரைபற்று கழுதாவளை கிண்ணியா பொத்துவில் புதூர் என பலபிரதேசங்கள் பேரனர்த்தத்தை சந்தித்துள்ளன. கிண்ணியாவில் ஆஸ்பத்திரி நீரில் மூழ்கியதால் அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் மரணித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிää ஒரிசாவிலும் பலநூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்h. கிழக்காசியாவில் இந்தோனேசியா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பூகம்பத்தினால் இலங்கை இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் ஆகியவற்றில் இந்த கடல் பெருக்கு ஏறப்பட்டுள்ளது மாலை தீவு மூன்றில் இரண்டுபகுதி கடலில் மூழ்கி உள்ளது

யாழ்நாகர்கோயில் பகுதிகளிலும் பலர் இடம்பெயாந்;துள்ளனர். வல்வெட்டித்துறை நாகர்கோவில் பகுதிகளிலும் உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. காயமடைந்தவர்கள் பலர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய இலங்கை மீனவர்கள் பலநூற்றுக்கணக்கானோரை காணவில்லை. சென்னையிலும் அதன் சுற்றுபுறங்களிலும் நில நடுக்கமும் உணரப்பட்டது. பல உயிர்களும் உடைமைகளும் கடலினால் காவு கொள்ளப்பட்டுவிட்டன

பிரதமர் தலைமையில் அவசரமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் நடைபெறுகிறது. அவசர நிலைதோற்றுவிக்கப்படலாம்

தங்காலை காலி அம்பாந்தோட்டை மாத்தறை போன்ற பகுதிகளும் நீரில் மூழ்கி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சடலங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்று தெரியவில்லை எங்கும் மரண ஓலம். எமது நகரங்களும் கிராமங்களும் பேய்க் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.

முல்லைதீவு யாழ்வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் பலத்த சேதமேற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் நிகழந்துள்ளன. சடலங்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன. தாளையடிப்பகுதியில் இன்னும் பல உடல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது

உயிரிழப்புக்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது

மட்டக்களப்பு திருமலை கிண்ணியா காலி மாத்தறை அம்பாந்தோட்டை தங்காலை வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது.
Reply
#2
கொழும்பு முகத்துவாரத்தில் 5000 பேர் இடம்பெயர்வு

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் ஜேசு சீவிக்கிறார் ஆலயத்தில் சுமார் 5000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

காலிää மாத்தறை போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கில் சடலங்களாலும் காயப்பட்டவர்களாலும் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. குழந்தைகளும் சிறுவர்களுமே பெருமளவுக்கு பாதிக்ப்பட்டுள்ளனர்.

முப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்கரையில் இருந்த மீனவர்கள் பலரை காணவில்லைää

கிண்ணியாவில் ஆஸ்பத்திரி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நோயாளிகள் நீரில் மூழ்கியுள்ளனர். ஈச்சிலம்பற்றையிலும் இதுபோன்ற ஒரு அவலம் நிகழந்ததாக கூறப்படுகிறது.

கொழும்பு காலிமுகத்திடலிலும் நீர் மட்டம் உயந்து வருகிறது. வெள்ளவத்தை இராமகிருஷணன் மிசன் வரை தண்ணீர் உயர்வதும் வடிவதுமாக இருக்கிறது. வாவிகள் ஆறுகள் பெருக்கெடுக்கின்றன.

காத்தான்குடியில்

காத்தான்குடியில் 35000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். பலரை காணவில்லை. மக்கள் பாடசாலைகளிலும்ää பள்ளிவாசல்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆரையம்பதிää தாளங்குடாää புதுக்குடியிருப்புää கிரான்குளம் போன்ற இடங்களிலும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இராமகிருஷ்ண மிஷனிலும் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த வெள்ளம் வருவதும் போவதுமாக இருந்து படிப்படியாக தணிந்து விடும் என்று பேராதனை பல்கலைகழக புவிச்சரிதவியல் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆதர்சி கிளார்க் நிலையமும் இது பற்றிய அவதானிப்புக்களை செய்து வருகிறது.
Reply
#3
20000 மக்கள் பொது இடங்களில்

மட்டக்களப்பில் 20000 பொது மக்கள் பாடசாலைகள் தேவாலயங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தம்பிலுவில்ää திருக்கோயில் பகுதிகளில் சடலங்களை தேடும் பணியில் அதிரடிப்படையினரும் தொண்டரடிப்படையில் இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனர். திருக்கோயில் வைத்தியசாலையில் 80 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பு நோக்கி மேட்டுநிலம் நோக்கி செல்கிறார்கள்.

கல்முனையில் 1500 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன கடல்நீரால் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள் கரை ஒதுங்குகின்றன.

மந்திகை ஆஸ்பத்திரியில் 62 சடலம் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு களப்பாடு ஆகிய பிரதேசங்களில் 300 பேர் இறந்திருக்கலாம் எனவும் 60 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை 10ம் நம்பர் படுக்கை நிலாவெளி அலஸ்தோட்டம் மூதூர் சம்பூர் போன்ற பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கை செஞ்சிலுவை சங்கம் அரச தனியார் துறையினரின் வாகனங்களில் சடலங்களும் காயமடைந்தவர்களையும் மட்டு வைத்தியசாலைக்கு கொண்டுவந்தவண்ணம் இருக்கின்றன
Reply
#4
யாழ் குடாவில் 2500 பேர் பலி

கடல் கொந்தளிப்பு காரணமாக யாழ் குடாநாட்டில் சுமார் 2500 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 500ற்கும் மேற்பட்டவர்கள் கானாமல் போயுள்ளதாகவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரையோரப் பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ள போதிலும் நாகர் கோவில்ää தாளையடி உட்பட வடமராட்சி கிழக்கு பிரதேசத்திலேயே இழப்புகள் அதிகம் எற்பட்டுள்ளது.

அப் பகுதியில் 2ää000 பேர் வரை உயிரிழந்தள்ளார்கள். இதனைத்தவிர பருத்தித்துறையில் 300 பேர் என இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டள்ளளன.

இதனைத் தவிர கீரிமலையில் பிதுர் கடன் கடமைக்குச் சென்ற 17 பேரும் காரை நகரில் தீர்த்தமாடச் சென்ற 4 பேரும் உயிரிழந்துள்ளார்கள்.

மீட்கப்பட்ட சடலங்களைப் பொறுத்த வரை யாழ் வைத்தியசாலையில் 15 சடலங்கள்ää மந்திகை வைத்தியசாலையில் 65ää கிளிநொச்சி வைத்தியசாலையில் 113 என ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் நூற்றிற்கும் மேற்பட்ட வாகனங்களும்ää மீன்பிடி உபகரணங்களும் கடலில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நன்றி: புதினம்
Reply
#5
கிழக்கில் 3400 பேர் பலி

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக உயிரிழந்தவர்களல் மீட்கப்பட்ட சடலங்களில் அடையாளம் காணப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எமது மட்டக்களப்பு செய்தியாளரின் தகவலின் படி இம் மாவட்டத்தில் 1500 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்ற போதிலும் மட்டக்களப்பு - 305 வாழைச்சேனை - 123 ஏறாவ10ர் - 03 ஆரையம்பதி - 05 காத்தான்குடி - 63 பொலன்னறுவை - 13 என 552 சடலங்கள் இது வரை வைத்தியசாலைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள சடலங்களில் 210 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நாவலடியிலுள்ள காயத்திரி பீடத்திற்குச் சென்ற பக்தர்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள். அப் பகுதியிலுள்ள ஸ்ரீ தேவி ஆச்சிரமத்திலுள்ள 25 சிறுவர்களும் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள்

இதுவரை வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவலின் படி அம்பாறை மாவட்டத்திலேயே உயிரிழப்புகள் அதிகமாகும்.

அக்கரைபற்று - 41 திருக்கோவில் -110 பொத்துவில் -20 நிந்தவ_ர்-147 கல்முனை - 500 எழுவட்டுவான் - 07 கல்முனை தெற்கு - 1000 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 1825 சடலங்கள் வைத்தியசாலைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது வைத்தியசாலையின் வைத்தியர் உட்பட ஊழியர்களுடன் முழு வைத்தியசாலையுமே கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 97 ஆயிரம் பேர் வரை இடம்பெயர்ந்து 158 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளார்கள்

திருகோணமலை பிரதேசத்தில் மூதூர் - 211 கின்னியா - 229 திருமலை - 45 என சடலங்கள் மீடு;கப்பட்டுள்ளன. ஊயிரிழந்தோர் எண்ணிக்கை 750 ற்கும் மேல் இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 18 ஆயிரம்பேர் வரை இடம்பெயர்ந்துள்ளார்கள்.

இதனைத் தவிர வெருகல் பிரதேசத்திலும் 50 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள்.

எமது கிழக்குமாகாண செய்தியாளர்களின் தகவல்களின் படி சம்பவத்தின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1500 ற்கும்மேல் என அறியக் கூடியதாக இருக்கின்றது. இவர்களில் சுமார் 1000 பேர் வரை தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நன்றி: புதினம்
Reply
#6
மட்-கோட்டை கல்லாரு கரையொர பிரதெச நிலமை எவ்வாரு உல்லது? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#7
¸¢ÆìÌ Àø¸¨Ä ±ôÀÊ :?: :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
<!--QuoteBegin-mrnbatti+-->QUOTE(mrnbatti)<!--QuoteEBegin-->மட்-கோட்டை கல்லாரு கரையொர பிரதெச நிலமை எவ்வாரு உல்லது? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அன்பரே,
உங்களின் கோட்டை கல்லாரு கரையோர பிரதேச நிலமை பற்றி இதுவரை news எதுவும் இணையத்தளங்களில் வெளிவரவில்லை. கவலை வேண்டாம்/ கவலை கொள்ளவேண்ட்டாம். அப்படி ஏதும் தெரிந்தால் இந்த Yarl.com website மூலம் உடனடியாக தெரிவிக்கிறேன்.
Reply
#9
Deaths Tolls Rise After Asia Quakes, Waves

24 minutes ago World - AP Asia


By The Associated Press

More than 8,000 people were reported dead across southern Asia and Africa after massive tsunami waves smashed coastlines following a magnitude 8.9 earthquake off the Indonesian coast Sunday morning.



A breakdown of the toll so far:


_ Sri Lanka: More than 3,000 people were killed, the country's top police official said; that number, however, does not include the 1,500 deaths reported by rebels who control part of the country. Massive tidal waves smash coastal villages.


_ India: Nearly 2,300 people died, officials said. The worst affected area was Tamil Nadu state, with 1,705 deaths. Huge waves left southern beaches strewn with bodies and flipped-over fishing boats and cars.


_ Indonesia: Almost 2,500 are reported dead, officials said. Towns were leveled and bodies wedged in trees by walls of water. Aceh province on Sumatra island — torn by separatist violence for years — was near the Indonesian quake's epicenter and was the hardest-hit part of the vast archipelago.


_ Thailand: Officials said 289 people died, 3,675 were injured and thousands were missing, mostly in idyllic southern islands packed with holiday revelers from around the world at the height of the tourist season. Swimmers were battered on coral reefs and sunbathers were swept out to sea.


_ Malaysia: At least 42 people, including an unknown number of foreign tourists, were dead, according to official reports. Tens of thousands were temporarily evacuated from hotels and apartments after the Indonesian quake was felt throughout peninsular Malaysia. No major damage was reported.


_ Bangladesh: After the Indonesian quake, a magnitude 7.36 temblor struck the southern port city of Chittagong. Tidal surges killed at least two children as a boat with about 15 tourists capsized. Reports said the quake was felt in the central, southern and western parts of the country, including the capital Dhaka.


_ Somalia: In this African country nearly 3,000 miles from the quake's epicenter, at least nine people were killed when a tidal wave destroyed homes, capsized boats and washed people out to sea, witnesses said.
Reply
#10
<!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin--><!--QuoteBegin-mrnbatti+--><div class='quotetop'>QUOTE(mrnbatti)<!--QuoteEBegin-->மட்-கோட்டை கல்லாரு கரையொர பிரதெச நிலமை எவ்வாரு உல்லது? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அன்பரே,
உங்களின் கோட்டை கல்லாரு கரையோர பிரதேச நிலமை பற்றி இதுவரை news எதுவும் இணையத்தளங்களில் வெளிவரவில்லை. கவலை வேண்டாம்/ கவலை கொள்ளவேண்ட்டாம். அப்படி ஏதும் தெரிந்தால் இந்த Yarl.com website மூலம் உடனடியாக தெரிவிக்கிறேன்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->



நன்றீ.மேலதிக தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
Reply
#11
<!--QuoteBegin-mrnbatti+-->QUOTE(mrnbatti)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Vaanampaadi+--><div class='quotetop'>QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin--><!--QuoteBegin-mrnbatti+--><div class='quotetop'>QUOTE(mrnbatti)<!--QuoteEBegin-->மட்-கோட்டை கல்லாரு கரையொர பிரதெச நிலமை எவ்வாரு உல்லது? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அன்பரே,
உங்களின் கோட்டை கல்லாரு கரையோர பிரதேச நிலமை பற்றி இதுவரை news எதுவும் இணையத்தளங்களில் வெளிவரவில்லை. கவலை வேண்டாம்/ கவலை கொள்ளவேண்ட்டாம். அப்படி ஏதும் தெரிந்தால் இந்த Yarl.com website மூலம் உடனடியாக தெரிவிக்கிறேன்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->



நன்றீ.மேலதிக தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அன்புடையீர்,
நான் ஒரு தனிமனிதன், நான் ஒரு செய்தியாளர் இல்லை.ஆகவே என்னை எதிர்பார்த்து காத்திருக்காமல் உங்கள் ஊரைப்பற்றி வேறு வளிகளில் அறிய முற்படுங்கள். நான் இது பற்றி அறிந்தால் கட்டாயம்
தெரிவிப்பேன்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)