Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எம் உறவுகளுக்காய் புதிதொரு விதி சமைப்போம்...!
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/worship-hands-1.jpg' border='0' alt='user posted image'>

ஆழிக்குள் அடங்கி ஆறாத்துயரில் ஆழ்த்தி அடங்கிவிட்ட அந்த உறவுகளுக்காயும் அன்புறவுகளை இழந்து ஆழிபோல் ஆறாத் துயரில் மிதக்கும் உறவுக்களுக்கு ஓர் ஆறுதலுக்காய்... அன்றி மெய்யாய் வேதனைகள் களைய அன்பால் அரவணைக்க வேண்டி...இவ்வரிகள் சமர்ப்பணம்...!

<b>கண்டங்கள் தாம் மோத
அலையலையாய்
அவள் கோபம் ஆர்ப்பரிக்க
அன்னமிட்டவள்
அண்டம் அடங்கா
ஆட்டம் போட்டாள்
ஆடினாள் ஊழியக் கூத்து
அடங்கிப் போனது
அன்புறவுகளின் ஆன்ம ஆட்டம்...!

உறவுகள் தாம் இழந்த
உள்ளங்கள் ஆர்ப்பரிக்க
கண்ணீரே கடலாக
அருண்ட அவள்
மருண்டு அடங்கினாளோ....??!
பாவம் அவள்
என் செய்வாள்..??!
இயற்கையவள் விதிக்குள்
சிக்கியவளாய்
பரிதாபத்துக்குரியவளாய்
செய்த குற்றம்
தான் அறியாதவளாய்
இன்றும்...
கரையோடு தாலாட்டுப் பாடுறாள்....!

பொறுமைக்கு இலக்கணமாம் அவள்
நடுங்கிவிட்டு அடங்கிவிட்டாள்
நாட்டியக்காரி
அவள் நாடகமே
நம் உறவுகள் நாடக மேடை
கலைத்தது அறிவீரோ....?!
ஆழியவள் ஆர்ப்பரிக்க
நாட்டியக்காரி இவள்
நர்த்தனமே காரணம்...!
நடந்ததற்கு நீதியெங்கே...???!
நீதிக்கு இங்கே
யார் தீர்ப்பளிக்க...???!
மானுட நீதியே அழிக்கப்பட்டதாய்
இயற்கையது நீதி சொல்கிறது...!

மானுடம் எங்கே
அதன் நீதியெங்கே....???!
இயற்கையது நீதிதான்
இறுதி வரைபு....!
இருந்தும்
மானுடம் சிறப்புற
இறப்பு எனும்
இறுதித் தீர்ப்பு எழுதும் வரை
நமக்கு நாமே
தீர்ப்பெழுதி திருப்திப்படுவோம்...!
தீராத சோகம் கண்டும்
தீராத வேதனைக்குள்ளும்
தீர்வு....
தேற்றுதல் இன்றி
வேறென்ன....????!
நம்முறவுகள் தம் வேதனை
நமதாக்கி தாங்கிடுவோம்
அவ்வுறவுகள் மீட்சி பெற....!
அதுவே மானுடத்தின்
புதிய தீர்ப்புமாகட்டும்....!

மாய உலகில்
மரிக்கும் பொம்மைகளாய் நாம்
இருப்பினும்...
நம்முடல் கொண்ட ஆன்மா
அடங்கும் வரை சுமக்கும்
இந்த வேதனைகள்....!
தோற்றுவாரும் நாமே
தேற்றுவாரும் நாமே
இயற்கையது விதிப்பும்
அதுதானே என்றிடாமல்....
விதி மீறி
மானுட உலகில் நாம்
புதிதொரு விதி சமைப்போம்...
மெய்யாய்
எம்முறவுகள் துயர்களைந்து
அரவணைத்து
அவர் தம்
பாரம் சுமப்போம்
இறுதிவரை
சுமை தாங்கிகளாய் என்றுமே...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
:!: Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)