Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
த.வி.புலிகளின் தொலைபேசி செய்தி தொகுப்பிலிருந்து......
#1
கடல்கொந்தளிப்பு காரணமாக தாயக மக்களுக்கு ஏற்பட்ட பாரிய உயிர் இழப்புக்கள் குறித்து விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளார் என அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
சகல வளங்களையும் பயன்படுத்தி மக்களை மீட்டு பாதுகாக்குமாறு தலைவர் சகல துறைசார்ந்த தளபதிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் போராளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனவும் தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான உதவிகளை உடனுக்குடன் செய்ய தாயகத்தில் உள்ள எமது உறவுகளும் புலம் பெயர்ந்து நாடுகளில் வாழும் உறவுகளும் வழங்கிவரும் ஒத்தாசைகள் பெரும் உதவியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமது உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஊடாக வழங்குமாறு அரசியல்துறைப் பொறுப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கடல் பூகம்பத்தில் தமிழர் தாயகத்தில் இதுவரை 9852 பேர் பலியாகியுள்ளனர். 9771 காணாமல் போயுள்ளனர்.

சம்பவம் நடந்து 60 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் காணாமல் போனோர் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு அறவேயற்ற நிலையே மேற்படி மாவட்டங்களில் இன்றும் நேற்றும் காணப்பட்டது.

எனவே காணாமல் போனோரும் மரணமடைந்ததாகவே கருதப்பட வேண்டிய நிலையே தற்போதுள்ளது. அதன் பிரகாரம் தமிழீழப் பிரதேசத்தில் இவ் இயற்கை அனர்த்தத்தால் பலியானவர்கள் தொகை 19623 ஆகும். இறுதிக் கணக்கெடுப்பு முடிவடையும் போது இத் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழீழ நேரப்படி இரவு 8 மணிக்கு கிடைக்கப்பெற்ற நிலவரப்படி இறந்தவர்கள் விபரம் வருமாறு: அம்பாறை 5ää350. மட்டக்களப்பு 1504. முல்லைத்தீவு 983. திருகோணமலை 844. யாழ்ப்பாணம் (வடமராட்சி கிழக்கு) 1171. கிளிநொச்சி 844. மேற்படி மாவட்டங்கள் அனைத்திலும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது..

காணமல் போயுள்ளவர்களின் விபரம் வருமாறு: அம்பாறை 6350. முல்லைத்தீவு 2750. மட்டக்களப்பு 612. யாழ்ப்பாணம் 59. திருகோணமலை கிளிநொச்சி வவுனியா மாவட்டப் புள்ளவிபரம் இன்னமும் கிடைக்கவில்லை.

காயமடைந்தவர்கள் விபரம் வருமாறு: முல்லைத்தீவு 1386யாழ்ப்பாணம் 489 கிளிநொச்சி 95 வவுனியா 104. மட்டக்களப்பு அம்பாறை திருக்கோணமலை மாவட்டங்களின் விபரம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

இடம்பெயர்ந்தவர்களின் விபரம்: மட்டக்களப்பு மாவட்டம் 53649 பேர்கள் முல்லைத்தீவு 25255; பேர்கள் திருகோணமலை 18910 பேர்கள் யாழ்ப்பாணம. 22383; பேர்கள் அம்பாறையின் புள்ளிவிபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

நலன்புரி நிலையங்கள்: மட்டக்களப்பு 94 திருக்கோணமலை 66 முல்லைத்தீவு 14 யாழ்ப்பாணம் 47 அம்பாறை மாவட்ட விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை..

தமிழர் தாயகத்தில் இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ் ஈழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப தமிழ்ச்செல்வன் சிறப்புச் செயலணிக் குழு ஒன்றை அமைத்திருக்கிறார்.

இந்தச் செயலணிக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று தமிழ் ஈழ அரசியல் துறையின் துணைப் பொறுப்பாளர் தங்கன் தலைமையில் நடைபெற்றது.
வடமராட்சி கிழக்குää தாளையடியில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் மன்னார் கிளிநொச்சி யாழ்ப்பாண அரசாங்கம் அதிபர்களின் பிரதிநிதிகளும் யுனிசெவ் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகராலயம்ää அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் விடுதலைப் புலிகளின் மகளிர் அணித் தலைவர் தமிழினி கடற்புலிகளின் சிறப்புத் தளபதி மங்களேஷ் தமிழ் ஈழ பொருண்மியத் துறைப் பொறுப்பாளர் ஜெய் மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் கிடைக்கப் பெறும் உதவிகளை உரியவர்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துவதே இந்தக் குழுவின் முக்கிய பணி என்று கூட்டத்தில் உரையாற்றிய தங்கன் தெரிவித்தார். இதேவேளை பேரழிவில் சிக்கிய எமது தாயகத்தை மீளக்கட்டி எழுப்புவதற்காக புலம்பெயாந்த மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் ரெஜி அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்ää வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கு பார ஊர்தி மூலமாக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை சிங்களப் பேரினவாதிகள் குழு ஒன்று சிங்களப் பகுதிக்கு அனுப்பி வைப்பதற்கு முயற்சித்த சம்பவம் ஒன்று ஹபரணையில் இடம்பெற்றிருக்கிறது.

ஹபரணைச் சந்தியில் நேற்று திங்கட்கிழமை பேரினவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியைத் தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம்ää தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஊடாக காவல் துறை உயர் அதிகாரியுடன் தொடர்பு கொண்டதை அடுத்து குறிப்பிட்ட நிவாரணப் பொருட்கள் பாதுகாப்பாக திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஹபரணைச் சந்தியில் காத்திருந்த குழுவினர் காவல் துறையினரின் உதவியுடனேயேஇந்த முயற்சியில் ஈடுபட்டார்கள் என்று நிவாரணப் பொருட்களுடன் சென்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இயற்கையின் பேரனத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள் தொடர்பான விபரங்களை அறிவதற்கான தொலைபேசி இலக்கங்கள் கிடைத்திருக்கின்றன.
0094212285056 - 4212285714என்ற இலக்கங்களில் காலை 8 மணி தொடக்கம் மலை 6.00 மணி வரையும் 0094212285725 இந்த இலக்கத்தில் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். மற்ற மாவட்டங்களுக்கான தொடர்பு இலக்கங்கள் கிடைத்ததும் அறிவிக்கப்படும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)