Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கீரிமலைக்குச் சென்ற 20 பேரைக்காணவில்லை
#1
கீரிமலைக்கு பிதிர்க்கடன் செலுத்துவதற்காகச் சென்ற 20 பேரைக் காணவில்லையெனவும் இவர்களில் 6 பேரின் உடல்கள் பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.நேற்றுக்காலை 10.15 மணியளவில் பாரிய கடற் கொந்தளிப்பு ஏற்பட்டவேளை சேந்தாங்குளம் சந்தி வரை சுமார் இரண்டு பனை அளவு உயரத்திற்கு நீர் அள்ளி வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மல்லாகம் பகுதியைச் சேர்ந்தவர்களே பிதிர்க்கடன் செலுத்து வதற்காக சென்றதாகவும் இவர்களில் பிரதீபன் ஜெயநாதன் ரவீந்திரன் பிரதீப் ராமச்சந்திரன் பரமநாதன் ராம்குமார் மனோகரன் பிரதீபன் தயாபரன் காங்கேயன் யசிதரன் தர்சன் நிசாந்தன் சிந்துஜன் பிரகலாதன் அற்புததேவன் (மாயவன்) மற்றும் அவருடைய சகோதரனும் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இவர்களை மீட்பதற்காக கடற் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)