Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீன் சாப்பிடுவதால் நோய் வர வாய்ப்பு இல்லை
#1
<img src='http://www.dailythanthi.com/images/news/20050106/Ph1.jpg' border='0' alt='user posted image'>

சுனாமி அலை தாக்குதலால் பலர் சாவு
``மீன் சாப்பிடுவதால் நோய் வர வாய்ப்பு இல்லை"
டாக்டர்கள் விளக்கம்


சென்னை, ஜன. 6-

``சுனாமி அலை தாக்குதலால் பலர் பலியாகி உள்ள நிலையில் மீன் சாப்பிடுவதால் நோய் எதுவும் பரவ வாய்ப்பு இல்லை" என்று டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

உயிரியல் துறை நிபுணர்கள் டேனியல் ராஜேஷ் பாலாஜி சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

வைரஸ் நோய்

சுனாமி அலையால் பலர் பலியானதால் மீன்களின் மூலம் சீலிகான் வைரஸ் பரவி உள்ளது என்று வதந்தி பரவி உள்ளது. சீலிகான் என்ற பெயர் கொண்ட ``வைரஸ்" உலகில் எந்த பகுதியிலும் கிடையாது. கடலின் அடியில் உள்ள தண்ணீர் பூகம்பம் காரணமாக மேலே வந்ததால் அங்கிருந்து இந்த வைரஸ் வந்து விட்டது என்று கூறப்படுகிறது.

கடலின் ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு விதமான உயிரினங்கள் வாழ்கின்றன. அது அந்த பகுதியை விட்டு மேலே வந்தால் அழிந்துவிடும். இதுதான் உயிரியல் உண்மை.

நோய் பரவாது

எந்த ஒரு இறந்த உடலும் கடலுக்குள் 24 மணி நேரத்திற்கு மேல் தங்காது. அவை அலை மூலம் கடற்கரைக்கு ஒதுக்கப்பட்டுவிடும். மேலும் இறந்த மனித உடலை கடல் மீன்கள் சாப்பிடாது. பிண வாடையை அறிந்ததும் மீன் ஓடிவிடும். மீன் குஞ்சுகள் தெரியாமல் பிணத்தை தின்றுவிடும். சுறா மீன்கள் மட்டும் பிணத்தை சாப்பிடும்.

கடல் மீன்களை சாப்பிடுவதால் எந்த நோயும் பரவ வாய்ப்பு இல்லை. எனவே பொதுமக்கள் தாராளமாக மீன் சாப்பிடலாம். பயப்பட தேவை இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறி னார்கள்.

அகில இந்திய மீனவர் சங்க பொதுச்செயலாளர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

வியாபாரம் பாதிப்பு

மீன் சாப்பிடுவதால் நோய் பரவுகிறது என்ற வதந்தியால் தமிழகத்தின் முக்கிய மீன் மார்க்கெட்டாகிய சென்னை, வேலூர், திருச்சி, விழுப்புரம், கும்பகோணம், திருவள்ளூர், திருப்பத்தூர், அரக்கோணம், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், களியக்காவிளை, நெல்லை மற்றும் சிறுமார்க்கெட் அனைத் தும் மீன் வியாபாரம் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஆங்காங்கே உரிய விழிப்புணர்வு பிரசாரத்தை செய்யவேண்டும். பொதுமக்கள் மத்தியில் உள்ள இந்த அச்சம் நீங்க வேண்டும். ஏற்கனவே சுனாமியினால் பாதிக் கப்பட்ட மீனவர்கள் மீன் வியா பாரிகள் ஆகியோருக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும்.

போராட்டம்

வதந்தியினால் மீன் வியாபாரி கள் சுமார் ரூ.150 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 2 ஆண்டு கள் ஆகும். ரூ.150 கோடி மதிப் புள்ள மீன்களை ஆங்காங்கே வியாபாரிகள் மண்ணில் குழி தோண்டி புதைத்துள்ளனர். தமிழக அரசு வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு ராஜா கூறினார்.

ருசித்து சாப்பிட்டனர்

மீன் சாப்பிடுவதால் நோய் பரவாது என்பதை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் மீனவர்கள் பொறித்த மீன்களை டாக்டர்கள் ருசித்து சாப்பிட்டார்கள்.
Reply
#2
<img src='http://www.dinakaran.com/daily/2005/Jan/07/others/arivu.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
எது எப்படி நடந்தாலும் நான் மீன் சாப்பிடப்போவதில்லை திரு/ திருமதி / செல்வி வானம் பாடி ஏனெனில் 1993 ம் ஆண்டு பூநகரியில் ஒப்பறேசன் தவளை நடவடிக்கையின் போது யாழ்க் குடாக் கடல்களில் மீன்கள் தின்ற இராணுவத்தினருடைய சடலங்களைப் பார்த்த பின் அன்றிலிருந்து நான் மீன் சாப்பிடுவதை நிறுத்தி ஏறக்குறைய 12 வருடங்கள் ஆகிவிட்டன. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)