Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆடுகள் நனைய ஓ..நாய்கள் வருகின்றன, வந்தன.........
#1
இலங்கையில் சுனாமி தாக்கிய பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து தமிழ் மக்கள் ஊரை காலி செய்து விட்டு வெளியேறினர்.

பூகம்பம், கடல் கொந்தளிப்பு, சுனாமி ராட்சத அலை வீச்சால் கடந்த 26-ந்தேதி இலங்கை பாதிக்கப்பட்டது. அதிலும் ஈழ தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாகாண பகுதி பெரும் பாதிப் புக்கு உள்ளானது.இலங்கையில் சுனாமிக்கு இதுவரை சுமார் 30 ஆயிரம் பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

சுனாமி பீதியில் இருந்து இலங்கை மக்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் புத்தாண்டு தினமான நேற்று அங்கு பலத்த மழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்கள் ஊரை காலி செய்து விட்டு பாதுகாப்பான பகுதிக்கு ஓடினர். தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 2000 பேர் வீடுகளை காலி செய்தனர். அவர் கள் சோகத்தில் உள்ளனர். புத்தாண்டு விழா எதுவும் நடக்க வில்லை. இந்த திடீர் வெள்ளத் தால் சுனாமி மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

சுனாமி நிவாரண பணிக்கு இலங்கைக்கு ரூ.100 கோடி அளிக்கப்படும் என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அறி வித்தார். மட்டக்களப்பு பகுதியில் 1000 இந்திய ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள் ளனர். நிவாரண பணிக்கு இந் திய கப்பல்கள் ஐ.என்.எஸ். சந்த்யாக், ஐ.என்.எஸ். சுகன்யா ஆகியவை இலங்கை திhpகோண மலை சென்றுள்ளன. ஐ.என்.எஸ். சர்தா, ஐ.என்.எஸ். சட்லஜ; ஆகி யவை காலே பகுதியில் நிற்கின் றன. இதுதவிர இந்திய விமான படையின் 6 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. அவை மளிகை பொருட்கள், மருந்து, குடிநீர்; போன்றவற்றை சப்ளை செய்கின் றன. 2 கடற்படை விமானமும் சென்றுள்ளது. அவைகள் பாதிக் கப்பட்ட மக்களை மீட்டு வரு கின்றன. இந்திய மருத்துவ குழுவினரும் இலங்கையில் முகா மிட்டு உள்ளனர். 140 மருத்துவ அதிகாரிகள் தங்கி இருந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மருந்து பொருட்கள், படுக்கைகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கைக்கு நிவாரண பணிக்குழு அனுப்பி வைக்கப் படும் என்று அமொpக்காவும் அறிவித்து உள்ளது. ஒரு கப்பல், 22 ஹெலிகாப்டர், 1500 கடற் படை வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். 200 வீரர்கள் கொண்ட முதல் குழு இன்று செல்கிறது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
Reply
#2
தம்பி உமை பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு உயிர்போகுதாம்.எங்களுடைய அவலத்தில் வல்லரசுகள் சதுரங்கவிளையாட்டை ஆரம்பித்துவிட்டன. இவையளுக்கு எங்களுடைய அழிவுகளுக்கு உதவிசெய்கிறதைவிட தங்களுடைய பிராந்திய நலன்கள்தான் முக்கியம். இந்தியாவுக்கு பிரச்சனை தனக்கு அருகாமையில் அமெரிக்கா வருகிறது என்பது. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள் இந்தியாவில் உடல்களை குப்பைகளைப்போல குழிகளில் தள்ளுகிறார்கள். தமமிழ்நாட்டில் சிலபகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட அதிகாரிகள் இல்லையாம் இதுபற்றி ஆளுநரிடம் மத்தியமந்திரி புகார் செய்கிறார். இதுகளை கவனிக்காமல் இங்கு வருகிறார்கள் . உதவிசெய்வது நல்லது ஆனால் தங்களடைய நலனுக்காக செய்வதுதான் கூடாது.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)