Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய செய்தியரங்கத்தில்
#1
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050101191642aid203.jpg' border='0' alt='user posted image'>
<b>உதவிகோரி தமிழக முதல்வர் இந்தியப் பிரதமருக்குக் கடிதம்</b>

கடற்கொந்தளிப்பினால் பெரும் சேதங்களைச் சந்தித்துள்ள தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு நிவாரணமாக 4,500 கோடி ரூபாய் நிதியும் 54 ஆயிரம் டன் உணவு தானியமும் மத்திய அரசு தந்துதவ வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதம்ர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பொதுவான பேரழிவு நிதி வழங்குவதில் பின்பற்றப்படும் விதிகளைத் தாண்டி விசேஷத் திட்டங்களை இந்த சுனாமி பேரழிவு தொடர்பாக மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

நிவாரணத் தேவைகளை மதிப்பிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்தியக் குழு இன்று சென்னை வந்து அங்கு பாதிக்கப்பட்ட பிரதேசத்தைப் பார்வையிட்டுள்ளது.

இக்குழு நான்கு பிரிவுகளாகப் பிரிந்து நாகை மாவட்டம்,கடலூர் மாவட்டம், , பாண்டிச்சேரி மற்றும் குமரி மாவட்டம் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கு சேதங்கள் மற்றும் தேவைகளின் அளவை மதிப்பிட இருக்கிறது.

இதனிடையே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று முதல்வரைச் சந்தித்து நிவாரணப் பணிகளை நிர்வகிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

சென்னையில் இன்று பிற்பகல் நந்தனம் போன்ற இடங்களில் லேசான நில அதிர்வு மெலிதாக உணரப்பட்டது, இது 15 விநாடிகள் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/12/20041229091231tsunami_ind2.jpg' border='0' alt='user posted image'>
<b>தமிழகத்தில் நிவாரணப் பணிகளில் அரசியலை நுழைக்க முயற்சி -
மருத்துவ உதவிகளை செய்துவரும் டாக்டர் குற்றச்சாட்டு</b>


அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான மருத்துவர் தன்னார்வக் குழுவைச் சேர்ந்த 20 மருத்துவர்கள், தமிழகத்தில் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் உயிர்தப்பியவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிவருகின்றனர். அக்குழுவைச் சேர்ந்த டாக்டர்.ரவீந்திரநாத் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.

நிறைய அளவிலான மருந்துப் பொருட்களுடன் தங்கள் குழு நாகை மாவட்டத்தில் உதவச் சென்றபோது தாங்கள் அரசு அதிகாரிகளால் அழைக்கழிக்கப்பட்டு முதல்நாள் தம்மால் ஒரு உதவியும் செய்யமுடியாமல் போனதென்று அவர் குறிப்பிடுகிறார்.

நாகை வேளாங்கண்ணி வேதாரண்யம் போன்ற நகரப் பகுதிகளுக்கு அரசின் மருத்துவ உதவிகள் கிடைக்கின்றன என்றாலும் ஒதுக்குப்புறமான கிராமப் பகுதிகளுக்கு அவை இன்னும் கிட்டவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நிவாரண உதவிகளில்கூட அரசியலை நுழைக்கும் தன்மை இருப்பது பணிகளில் தடங்கல்களை ஏற்படுத்திவருகிறது என்று அவர் தெரிவித்தார்.

நாகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் வாந்திபேதி, காலரா போன்ற நோய்கள் பரவ வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Thanks: BBC
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)