Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் ஒருவேளை கருத்தரித்து விட்டாலும் தொடர்ந்து பால் கொடுக்கலாம். ஆனால் சிலர் இக்காலங்களில் பால் கொடுப்பது குழந்தைக்கு தீங்கு ஏற்படுத்தும் என்று நினைத்து நிறுத்தி விடுகின்றனர். இது மிகவும் தவறானது. குறைந்தது 10 மாதங்களாவது பால் கொடுத்து வந்தால் தான் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு சரியான அஸ்திவாரம் கிடைக்கும்.
சிறிய மார்பகங்களை கொண்ட பெண்களுக்கு போதுமான அளவுக்கு பால் சுரக்காது என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் இதில் உண்மை எதுவும் இல்லை. மார்பகத்தின் பெரும்பாகம் கொழுப்பால் நிரப்பப்பட்டு இருக்கும். ஒரு சிறிய பாகத்தில் மட்டும்தான் பால் சுரப்பிகள் உள்ளன. கருத்தரித்த பிறகு தான் பால் உற்பத்தி செய்யக்கூடிய சுரப்பிகள் பெருகுகின்றன. குழந்தை பிறந்து சில நாட்கள் ஆன பிறகு மார்பகங்களில் அதிக அளவில் பால் உற்பத்தியாகும். அப்போது மார்பகங்கள் மேலும் சற்று அதிகமாய் பெருக்கும்.
ஆகையால் கர்ப்பத்திற்கு முன் சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள் கூட குழந்தை பிறந்த பின்னர் அதிக அளவுக்கு பாலை உற்பத்தி செய்ய முடியும்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் ஊமையைப் பேசுறீங்க அவர் மருத்துவக் குறிப்புகளை தானே வெட்டி ஒட்டுறார்... எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் தான்...ஊமை நீங்க தொடருங்க...!
சின்னப்பு சுவராசியமாப் படிக்கிறார்...ஆனா என்ன வெளியில நடிக்கிறார்....! நண்பன் ஒருத்தான் சொன்னான் தான் மனித உடற்பியல் மற்றும் தொழிபாடு பற்றிப் படிக்கும் போது ஆய்வுகூடத்தில் கருத்தரிப்பு தடுப்பு முறைகள் பற்றி விளக்கம் தரப்பட்ட போது ஆண் மாணவர்கள் ஏனோ தானோ என்று நிற்க...பெண் மாணவிகள் அதை மிகமிக ஆர்வமா கேள்வி கேட்டுக் கேட்டுப் படிச்சார்களாம்.... அந்த நிலையிலதான் இப்ப சின்னப்பு நிக்கிறார்....! டோண்ட் வொறி ஊமை...! :wink:
ஆனா ஒரு டவுட்டு ஊமை... பால் கொடுக்கும் போது கருத்தரிப்பு நிகழ வாய்ப்பு மிகக் குறைவே...அதாவது பால் கொடுக்கும் பெண்ணில் முதிர் முட்டை உருவாகத் தேவையான ஓமோனின் அளவு குருதியில் குறைவாக இருக்குமே....எப்படி கருத்தரிப்பார்கள்...கருத்தரிப்பு தடுப்பு முறைகளில் பாலூட்டுதலும் இயற்கை முறையாகிறதே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ன்னப்பு சுவராசியமாப் படிக்கிறார்...ஆனா என்ன வெளியில நடிக்கிறார்....! நண்பன் ஒருத்தான் சொன்னான் தான் மனித உடற்பியல் மற்றும் தொழிபாடு பற்றிப் படிக்கும் போது ஆய்வுகூடத்தில் கருத்தரிப்பு தடுப்பு முறைகள் பற்றி விளக்கம் தரப்பட்ட போது ஆண் மாணவர்கள் ஏனோ தானோ என்று நிற்க...பெண் மாணவிகள் அதை மிகமிக ஆர்வமா கேள்வி கேட்டுக் கேட்டுப் படிச்சார்களாம்.... அந்த நிலையிலதான் இப்ப சின்னப்பு நிக்கிறார்....! டோண்ட் வொறி ஊமை...!
பொண்ணுகல படிக்கவும் விடமாட்டியளா..?? மாத்தி மாத்தி போடுவயள்.. என்ன.. ? :twisted: :twisted: :evil: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஊமை இதில் சின்னவன் பெரியவன் என்ற நிலை அவசியம் இல்லை....உண்மையில் இந்த உடற்தொழிற்பாடு அதன் கட்டுப்படுத்தல்கள் பற்றி இலங்கையில் வகுப்பு- 11 (ஆண்டு- 11) - வயது 16 இல் படித்திருக்க வேண்டுமே....??! :?: :wink:
பால் கொடுக்கும் தாயின் குருதியில் புரஜெஸ்ரரோன் ஓமோனின் அளவு அதிகமாக இருக்கும்...இதன் இருப்பே பால் சுரப்புக்கான ஓமோனைச் சுரக்கும் சுரப்பியின் தொழிற்பாட்டைத் தூண்டும்...குருதியில் புரஜெஸ்ரரோன் குறைவடைந்தால் மீண்டும் முதிர் முட்டையாக்க வட்டம் ஆரம்பமாகி விடும்...பால் சுரப்பு குறையும் இல்ல தடைப்பட்டு விடும்....மீண்டும் ஈஸ்ரோஜன் தனது நிலையை குருதியில் உயர்த்தி மீண்டும் முதிர் முட்டையாக்க செயன்முறை ஆரம்பமாக வித்திடும்...! இதன் அடிப்படையில் தான் கேட்டோம்...??!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
பயன்மிக்க நல்ல மருத்துவக்குறிப்புகள்.
இதை ஒரே தலைப்பின் கீழ் எழுதினால் நன்றாக இருக்கும்.
நல்லது செய்பவர்களைப்பாராட்டா விட்டாலும் பறுவாய் இல்லை தொந்தரவு கொடுக்காமல் இருக்கலாம் அல்லவா?.