Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதால் கேட்க முடிந்த அதிகபட்ச ஒலி எவ்வளவு?
#1
ஒலியை டெசிபல் என்ற யூனிட்டால் தான் அளக்கிறேhம். ஆரோக்கியமான ஒருவரின் காதால் கேட்க முடிந்த மிகக் குறைந்த ஒலியை 0 டெசிபல் என்று குறிப்பார்கள். அதை விட 10 மடங்கு அதிக சத்தம் 10 டெசிபல் என்றும், நூறு மடங்கு அதிக சத்தம் 20 டெசிபல் என்றும், ஆயிரம் மடங்கு அதிக சத்தம் 30 டெசிபல் என்றும் குறிக்கப்படுகிறது. சாதாரண முணுமுணுப்புகள் 20 டெசிபல், அலுவலகச் சத்தம் 30 டெசிபல், ரயில் சத்தம் 80 டெசிபல், இடிச்சத்தம் 120 டெசிபல், ஜெட் என்ஜினின் இயக்கம் 140 டெசிபல் என்று ஒவ்வொரு ஒலிக்கும் அளவு கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒலி உருவாகும் இடத்துக்கு எவ்வளவு தூரத்தில் நாம் இருக்கிறோம் என்பதையும், எவ்வளவு நேரம் நாம் அதைக் கேட்கிறோம் என்பதையும் பொறுத்துத் தான் நம் காதுக்கான பாதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.
பொதுவாக 80 டெசிபல் சத்தம் வரை கேட்பது ஆபத்தில்லை என்கிறார்கள். அதற்கும் மேலாக சத்தம் என்றால், அதை நாம் கேட்கும் நேரம் குறைவாக இருந்தால் தப்பிக்கலாம். 90 டெசிபல் சத்தத்தை எட்டு மணி நேரத்துக்குக் கேட்கிறேhம் என்றால், அது காதைக் கட்டாயம் பாதிக்கலாம். அதுவே 140 டெசிபல் என்றால் சில விநாடிகள் கேட்டாலே போதும்.. பாதிப்பு நிச்சயம் உண்டு...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)