Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிட ராணுவ ஹெலிகாப்டர்
#1
சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிட
விடுதலைப்புலி தலைவருக்கு ராணுவ ஹெலிகாப்டர்
இலங்கை அரசு வழங்கியது


கொழும்பு, ஜன. 13-

சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிட விடுதலைப் புலி தலைவருக்கு ராணுவ ஹெலிகாப்டரை இலங்கை அரசு வழங்கியது.

சுனாமி சேதம்

இலங்கையில் சுனாமி பேரலை களால் பலத்த உயிர்ச்சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டு உள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள திரிகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகள் கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில், இலங்கை அரசு நிவாரண பணி களை விரைவாக செய்யவில்லை என்று விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். விடு தலைப்புலிகளின் பகுதிகளில் சேத விவரத்தை பார்வையிட, ஐ.நா.சபை செயலாளர் கோபிஅனனை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இதற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பு கண்டனம் தெரிவித்தது.

ஹெலிகாப்டர் அனுமதி

எனவே விடுதலைப்புலிகளுக் கும், இலங்கை அரசுக்கும் இடையே இடைவெளி அதி கரித்து வருவதாக கருதப்பட் டது.

இந்த நிலையில் சுனாமி சேத பகுதிகளை, விடுதலைப்புலி இயக்க அரசியல் பிரிவு தலைவர் எஸ்.பி.தமிழ்செல்வன் பார்வை யிட, ராணுவ ஹெலிகாப்டர் வழங்க வேண்டும் என்று அதிபர் சந்திரிகாவுக்கு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை அதிபர் சந்திரிகா பரிசீலித்து, ராணுவ ஹெலிகாப்டர் ஒதுக்க உத்தர விட்டார். இந்த ஹெலிகாப்டரை தமிழ்செல்வன் சிலநாட்கள் பயன்படுத்தி, சுனாமியால் பாதிக் கப்பட்ட பகுதிகளை பார்ப்பார்.

வெளிநாடுகள் உதவி

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் இணையதளத்தில் வெளியான ஒரு அறிக்கையில், ``சுனாமியால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதிக்கு உதவி செய்யும் வெளிநாடுகளின் கொள்கை என்ன? அவர்கள் எப்படிப்பட்ட வர்கள்? என்பதை நாங்கள் ஆராயவில்லை. உதவிகளை மட்டும் ஏற்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Reply
#2
§ƒ¡ù ¬¾¢ÂôÀ ±ýÉ ¯Ð?? Ţξ¨ÄÒÄ¢¸Ç¢ý ¾¨ÄÅÕìÌ ¦¸Ä¢¸ôÃ÷ ÌÎ츢Ȧ¾ñÎ §À¡ðÎ À¢ÈÌ ¾Á¢ú¦ºøÅñ¼ ¦À¨à §À¡ðÊÕ츢ȣ÷?? ±ó¾ ÒÐŢšò¨¾¦¾¡¼íÌÓý ÅÊÅ¡ ÓýÛìÌ À¢ý ÅÊÅ¡ Å¡º¢òÐÅ¢ðÎ «¨¾ þí§¸ À¢ÃÍâÔõ.. ÁüÈÅ÷¸Ç¢ý §¸¡ÅòÐìÌõ ÁÉ ¯¨ÆîºÖìÌõ ¬Ç¸¡¾£÷.. :evil: :evil:
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
Reply
#3
அந்த கெலிய பார்த்து தான் ஏறனும்...ஏதாவது சூனியம் பண்ணிட்டு தர போறானுங்க...
[size=16][b].
Reply
#4
இந்தியாவில் எப்படி செய்திகள் வருகிறது என்பதற்கு நான்போட்ட செய்தி ஒரு உதாரணம். இதைப்படித்து என் மேல் கோபப்படவேண்டாம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)