Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழிவுற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இன, மத, மொழி ..........
#1
அழிவுற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இன, மத, மொழி பேதமின்றி ஒன்றுபடுவோம்
ஜனாதிபதி, பிரதமர் பொங்கல் செய்தி

இந்த நாட்டில் நாம் பிளவுபட்டு வாழ்வதால் எதுவிதப் பயனும் கிட்டப் போவதில்லை என்பதை இயற்கை எமக்கு நன்கு உணர்த்தியிருப்பதாக தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு இன, மத, மொழி, அரசியல் பேதமின்றி, சகல சமூகத்தவர்களும் கைகோர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-

2,500 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுப் பெருமைக்குரிய எமது நாடு, வரலாற்றில் என்றுமில்லாதவாறு பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இம்முறை நாம் தைப்பொங்கல் தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்து பக்தர்கள் அறுவடையின் ஆரம்ப நாளாகத் தைப்பொங்கலை உற்சவபூர்வமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். தைப்பொங்கல் புதிய எதிர்பார்ப்புகளுடன் கூடிய சுபிட்சத்தையும் மகிழ்ச்சியையும் குறித்து நிற்கின்றது.

2005 புத்தாண்டு இலங்கை வாழ் மக்கள் நினைத்திராத, எதிர்பார்த்திராத அனர்த்தங்களுடனேயே மலர்ந்துள்ளது. சாதி, மத, குல, எல்லை பேதமின்றி இயற்கையின் கொடூர விளைவுகளுக்கு நாம் முகங்கொடுத்தோம். பொதுவாக, தென் பகுதி மக்களைப் போன்று, வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் இதனால் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. நாம் இந்நாட்டில் பிளவுபட்டு வாழ்வதில் எவ்வித முக்கியத்துவமும் இல்லை என்பதையே இயற்கை எமக்கு நன்கு உணர்த்தியுள்ளது.

ஆதலால், சமாதானத்தையும் சுபிட்சத்தையும் அடிப்படையாகக் கொண்ட தைப்பொங்கல் தினத்தில் இந்த உன்னத குறிக்கோள்களை அடையுமுகமாக கொடூர அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள நாம் என்றுமில்லாதவாறு ஐக்கியமாகவும் சமத்துவமாகவும் இணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது. இன ரீதியான யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டை மீளக்கட்டியெழுப்பும் பாரதூரமான கைங்கரியத்துக்குத் தோள்கொடுத்து உதவ நாமனைவரும் இன்றைய தினம் திடசங்கற்பம் பூணுவோமாக.

அதேபோன்று, அனைத்தின மக்களினதும் கலாசாரங்களைப் பேணி, ஒவ்வொருவர் மீதுள்ள ஐயம், குரோதவுணர்வுகள், வக்கிர எண்ணங்களிலிருந்து விடுபட்டு அனைவரும் கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப நாமனைவரும் அணிதிரள்வோமாக.

இலங்கை வாழ் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் சுபிட்சமும் மகிழ்ச்சியும் கிட்டவேண்டுமென நான் உளமாரப் பிரார்த்திக்கின்றேன்.

பிரதமரின் பொங்கல் வாழ்த்து

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது;

இயற்கை அனர்த்தம் இன, மத, மொழி பாராமல் சீற்றத்தைக் காட்டிவிட்டுப் போயிருக்கின்றது. இன, மத, மொழி மட்டுமன்றி, கட்சி பேதங்களிலிருந்து அழிவுற்ற நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இப்பொங்கல் திருநாளில் நாம் திடசங்கற்பம் பூணுவோம்.

சுனாமி நமக்குள்ளிருக்கும் பிளவுகளை மறந்து இந்நாட்டில் சமாதானமும் சௌஜன்யமும் நிலவ ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எமக்கு உணர்த்தியுள்ளது.

எமது நாட்டில் வாழும் இந்துக்கள் இம்முறை பொங்கல் திருநாளைக் கொண்டாட மாட்டார்கள். வடக்கு, கிழக்கு மக்கள் இராட்சதப் பேரலைகளில் உடன் பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களை இழந்து தவிக்கின்றனர். இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களுக்காக அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் இந்துக்களும் பொங்கல் தினத்தை பிரார்த்தனைத் தினமாக அனுஷ்டிப்பர் என்றே கருதுகின்றேன்.
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)