01-16-2005, 04:43 AM
ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மொரிஸ் கிளிநொச்சி பயணம்
ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மொரிஸ் அவர்கள் கிளிநொச்சிக்குச் செல்வதற்கு இலங்கை அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும், அந்த ஒப்புதலைப் பெநறுவதற்காக அரசுடன் பேச்சுகள், சமரசங்கள் செய்ய வேண்டியதாக இருந்தது என்றும் உலக உணவுத் திட்ட அமைப்பின் அதிகாரி ஜோர்டன் டே தெரிவித்துள்ளார்.
நாளை காலை தமது தலைவர் கிளிநொச்சிக்கு செல்வதாகவும், நேர நெருக்கடி காரணமாக பிற வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு போக முடியாதுள்ளது என்றும், எனினும் அனைத்துப் பகுதிகளிலும் தமது பணியாளர்கள் சேவை புரிந்து கொண்டுள்ளனர் என்றும் கூறினார்.
உலக உணவுத் திட்டத்தின் செயலியக்குநர் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்வதை உலக உணவுத் திட்டம் தடுப்பதாக எழுந்த ஊடகச் செய்திகள் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை ஜனாதிபதி சார்பாக பேசவல்ல அதிகாரியான ஹரிம் பீரிஸ், ஜேம்ஸ் மோரிஸ் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்வதை அரசு தடுக்கவில்லை; மாறாக ஊக்குவிக்கிறது என்றார்.
ஜேம்ஸ் மோரிசின் பயனத்துக்கு உதவியாக இலங்கை அரசு விமானப் படை ஹெலிகாப்டரை தந்து உதவுகிறது. புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் நடைமுறைப் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் அங்கு தரையிறங்க இயலாது என்பதாக விமானப் படை தெரிவித்திருந்தது என்று ஹரிம் பீரிஸ் தெரிவித்தார். வவுனியாவரை ஹெலிகாப்டரில் சென்று அங்கிருந்து தரைவழியாக கிளிநொச்சி செல்வதை தாங்கள் ஊக்குவிப்பதாக அவர் கூறினார்.
Source : BBC
--------------------------------------------------------------------------------