Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போரழிவையும் இயற்கைப் பேரழிவையும் ஒன்றாக..................
#1
போரழிவையும் இயற்கைப் பேரழிவையும் ஒன்றாக
கவனத்தில் எடுக்கக் கோருகிறார் தலைவர் பிரபா
நோர்வேத் தரப்பிடம் இதனையே அவர் வலியுறுத்தினார் என்று பாலசிங்கம் தகவல்
மூன்று தசாப்த கால யுத்தத்தினாலும் ஆழிப்பேரலை அனர்த் தத்தினாலும் தமிழ்மக் களுக்கு ஏற்பட்டிருக்கும் அழிவுகளை சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாகக் கவனத்தில் எடுக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இது என்று நோர்வே அமைச்சர்களிடம் வலியுறுத்தியிருக் கின்றார் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபா கரன்.
நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்ஸன், அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் ஹில்டி எவ்.ஜோன்ஸன் அம்மையார் ஆகியோர் அடங்கிய நோர்வே உயர் மட்டக் குழுவினர் நேற்று தலைவர் பிரபாகரனை வன்னியில் அரசியல்துறை நடுவப் பணிமனை யில் சந்தித்து விரிவாகப் பேச்சு நடத்தினார்.
சுனாமி இயற்கை அனர்த்தம் தமிழர் பிர தேசத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் அவற்றுக்கான நிவாரணப் பணிகள் ஆகிய விடயங்கள் குறித்து தேசியத் தலைவருடன் நோர்வே அமைச்சர்கள் விரிவாகப் பேசினர்.
நோர்வே அமைச்சர்கள் தேசியத் தலைவ ருடன் நடத்திய பேச்சுக்களின் விவரங்களை மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்டார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வெளி நாட்டு, உள்நாட்டு ஊடகவியலாளர்கள், படப் பிடிப்பாளர்கள் உட்படப் பெரும் எண்ணிக்கை யான செய்தியாளர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பால சிங்கம் பதிலளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
இந்தச் சந்திப்பு முக்கியமான தொன்று. ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் எமது தேசியத் தலைவர் வெளிநாட்டுத் தலைவர் களை - குறிப்பாக சமாதான முயற்சியில் அனுசரணையாளர்களாக கடந்த 5 ஆண்டு களாகப் பணியாற்றிவரும் நோர்வே நாட்டின் அமைச்சர்கள் இருவரைச் சந்தித்து எமது மக்களின் நிலைபற்றியும் அரசியல் நிலை வரம் பற்றியும், சமாதான முயற்சிகள் குறித் தும் விரிவாகப் பேசியுள்ளார். இந்தப் பேச்சு இருமணி நேரம் நீடித்தது.
ஆமியால் ஏற்பட்ட சுனாமி
எமது மக்களுக்கு ஆழிப்பேரலை அனர்த் தத்தால் ஏற்பட்ட அழிவு வித்தியாசமானது. ஏற் கனவே மூன்று தசாப்தகால யுத்தத்தினால் வடக்கு - கிழக்கில் உள்ள எமது வளங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. மாதகலி லிருந்து அம்பாறை வரை பல தமிழ்க் கிராமங் கள் - குறிப்பாக மீனவக் கிராமங்கள் - அழிக் கப்பட்டுள்ளன. பல கிராமங்கள் இன்னும் இரா ணுவ ஆக்கிரமிப்பில் உள்ளன. எழுபதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உடைமை கள் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. அதனை ஆமியால் ஏற்பட்ட சுனாமி என்று தலைவர் விவரிக்கின்றார்.
அதன்பின்னர்தான் ஆழிப்பேரலை அழிவு அதுவும் எமக்குப் பெரும் நாசத்தைத் தந்துள் ளது. வடக்கு - கிழக்கில்தான் அதிகளவு சேதம். வடக்கு - கிழக்குக் கரையோரங்களில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என இருபதாயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.
அதனால்தான் போரழிவையும், ஆழிப் பேரலைப் பேரழிவையும் ஒன்றாகக் கவனத் தில் எடுக்கும்படி தலைவர் பிரபா வேண்டுகி றார்
எனவேதான் யுத்தத்தையும் மறந்து இனப் பிரச்சினையையும் மறந்து சுனாமியுடன் நிற் காதீர்கள். கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக எமது மக்கள் அனுபவித்த இன ஒடுக்கல் வரலாற் றையும் கவனத்தில் கொள்ளுங்கள் என்கின் றோம்.
இவ்வளவு பேரழிவை எமது மக்கள் சந்தித் துள்ளபோதிலும் இப்போது சுனாமிப் பேரழி வின் பின்னர்தான் சர்வதேசத்தின் கவனம் எங்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஆகவே, எங் கள் மக்களின் ஒட்டுமொத்த அழிவைக் கவ னத்தில் எடுத்துகொள்ளுங்கள் என்று கோருகின் றோம்.
எமக்கு இந்த அரசில் நம்பிக்கையில்லை. காலங்காலமாக இருந்துவந்த அரசுகள் இத் தகைய பேரழிவுகளைத் தங்களது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தியதே எமது அனுப வப் பாடம்.
எனவேதான் சர்வதேச உதவிகளை பாதிக் கப்பட்ட மக்களுக்கு - அவர்கள் தமிழர்களாக வோ, சிங்களவர்களாகவோ, முஸ்லிம்களா கவோ இருக்கலாம். சரிசமமாக - சமத்துவமாக - பங்கிட்டு அவர்களுக்கு நேரடியாகக் கிடைக் கச் செய்யுங்கள் எனக் கோருகின்றோம்.
கடந்த ஐந்து வருடங்களாக சமாதான முயற்சியில் நோர்வே ஈடுபட்டுள்ளதால் அவர் களுக்கு இந்த விடயங்கள் நன்கு தெரியும். எனவேதான் அவர்களிடம் இதனை கவனத் தில் எடுக்கும்படி கோரினோம்.
இந்த விடயத்தில் தாங்கள் தெளிவான ஒரு கொள்கைத் திட்டத்திற்கு வர விரும்புகிறார்கள் என நோர்வே தரப்பினர் தெரிவித்தனர்.
அரச கட்டமைப்பு மூலம் இல்லாமல் - அரசமயப்படுத்தப்பட்ட நிர்வாகங்கள் மூலம் இல்லாமல் - பொதுமக்கள், பொதுநிறுவனங் கள், சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் அமைப்புக்கள், உள்ளூர் தொண்டர் அமைப் புக்கள் எனப் பலதரப்பினரும் கூடுதலாகப் பங்குபற்றக் கூடியதாக நிவாரண ஒதுக்கீட்டுத் திட்டமொன்றைக் கொண்டுவந்து சர்வதேச சமூகத்திற்கு முன் சமர்ப்பிப்பதே அவர்களின் யோசனை. சர்வதேச சமூகம் அந்தக் கட்ட மைப்பு மூலம் நடவடிக்கைகளை எடுத்துப் பணிகளை மேற்கொள்வதே அத்திட்டமாகும்.
அரசும் நாங்களும் எங்களுக்குள் இழு பறிப்படாமல் இதுவிடயத்தில் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது.
ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்குரிய நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக பிணக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் - நாங்களும் அரசும்- ஒரு இணக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதுவே நோர்வேயின் எதிர்பார்ப்பு.
இது தொடர்பான பேச்சுக்கள் பூர்வாங்க மட்டத்தில் நடைபெறுகின்றன. கொழும்பிலும் கிளிநொச்சியிலும் உள்ள இருதரப்பு சமாதா னச் செயலகங்கள் மூலம் பேச்சுக்கள் நடக் கின்றன.
இரண்டு பேருக்கும் இணக்கமான ஒரு கட்டமைப்பை - பொறிமுறையை - காண்பதற் கான பேச்சுக்கள் நடந்தாலும் அதிலும் சிக்கல் கள் உள்ளன.
அந்த விவகாரம் வேறு. இனப்பிரச்சினை, உரிமைப் பிரச்சினை வேறு. எமது மக்களின் உரிமைப் பிரச்சினை சுனாமி விவகாரத்தால் தீரப்போவதில்லை இன்னும் தீவிரமடையுமே தவிர தீரப்போவதில்லை.
எங்களுடைய அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சுமுகமான நிலையை ஏற்படுத்தும் சில நடவடிக்கைகளை அரசு எடுப்பதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அத்திபாரத் தைப் போடமுடியும்.


<b>நிவாரண உதவிகள் சமச்சீரான பங்கீடு
உறுதி செய்யப்படும் என்கிறது நோர்வே
அந்நாட்டு அமைச்சர் ஜோன்ஸன் அம்மையார் தெரிவிப்பு </b>

மீட்பு, நிவாரணம் மற்றும் மீள் கட்டமைப் புப் பணிகளைப் பரவலாக்கம் செய்வது தொடர் பான முக்கிய கொள்கைகள் அடங்கிய பேச்சுக் கள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இத்திட் டத்தின் கீழ் பாதிப்புற்ற சகலருக்கும் சமச்சீராக வும், சமபங்கிலும் நிவா ரணம் மற்றும் உதவி கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக் கப்படும்.
- இவ்வாறு தெரிவித் திருக்கின்றார் நோர்வே நாட்டின் சர்வதேச அபி விருத்தி அமைச்சர் ஹில்டி எவ்.ஜோன்ஸன் அம்மையார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிர பாகரனுடன் கிளிநொச்சியில் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
க்ஷி கேள்வி: சுனாமியால் பாதிக்கப்பட்டோ ருக்கு என சர்வதேச சமூகம் வழங்கும் உதவி கள் நேரடியாகப் புலிகளிடம் கையளிக்கப்படுமா?
ஐ பதில்: ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் தொண்டர் அமைப்புக்கள் மூலம் கணிசமான உதவிகளை நோர்வே ஏற்கனவே வழங்கி யுள்ளது. அதை நாம் தொடர்வோம்.
ஏற்கனவே எங்களிடம் பல தரப்பு நம்பிக்கை நிதியம் உள்ளது. உலக வங்கி அனுசரணையு டன் புலிகளின் ஒத்துழைப்போடு அது செலவிடப் படுகிறது. அந்த நிதியத்துக்கு நோர்வே உதவுகின் றது. இப்போதைய மீள்கட்டுமானத்துக்கும் அந்த நிதியைப் பயன்படுத்தலாம். இது குறித்து உதவும் நாடுகளும் உலக வங்கியும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுடன் கொழும்பில் பேச்சு நடத் தியுள்ளன.
க்ஷி கேள்வி: வடக்கு - கிழக்கில் ஏற்பட்ட பாதிப் புகள் தொடர்பாக அரசு உரிய கவனிப்புச் செலுத்த வில்லை என்று கூறப்படுகின்றதே. இந்நிலையை எப்படி சீர்செய்யப்போகின்றீர்கள்?
ஐ பதில்: இது குறித்து நேற்று அரசுடன் விரி வாகப் பேசியுள்ளோம். மீட்பு, நிவாரண மற்றும் மீள் கட்டமைப்புப் பணிகளைப் பரவலாக்கம் செய்வது தொடர்பான முக்கிய கொள்கைகள் அடங்கிய பேச்சுக்கள் இப்போது பூர்த்தியடைந் துள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பாதிப்புற்ற சகலருக்கும் சமச்சீராகவும் சமபங்கிலும் நிவாரணம் மற்றும் உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் உதவி கள் கிடைக்க வேண்டும் என்பதை அரசு உணர்ந்தே உள்ளது.
மீள்கட்டுமானப் பணியில் அரசுக்கும் புலிக ளுக்கும் இடையில் கூட்டிணைப்பும் பங்கிணை வும் இருக்கவேண்டும் என நாம் விரும்புகின் றோம். அதற்கான நிலைமையை ஏற்படுத்தும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் - என்றார்.

<b>சமாதான முயற்சி பற்றி
இன்று எதுவும் பேசவில்லை </b>

இப்பேரழிவு விடயத்தில் நல்ல முன்மாதிரி யான நல்லெண்ண நடவடிக்கைகளை எடுப் பதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஆக்கபூர்வமான அத்திபாரங்களை அரசால் போடமுடியும்.
இருதரப்பும் சேர்ந்து ஆழிப்பேரலை அழி வுக்கான நிவாரண விவகாரத்தில் பொதுவான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதில் இணக் கம் காணுமானால் அது சமாதான முயற்சி விடயத்தில் ஆக்கபூர்வமான அடியாக இருக்கு மென்று நோர்வே கருதுகின்றது. இதைத் தவிர சமாதான முயற்சிகள் குறித்து நாம் இன்று பேசவில்லை.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக் கான அவசர, மனிதாபிமான நிவாரணப் பொருள்கள் பெருமளவில் கிடைத்துள்ளன. சர்வதேச அமைப்புக்களும் ஒத்துழைக்கின் றன. இதில் நாம் குறைகூறவில்லை.
இனி அடுத்த கட்டமாக அந்த மக்களுக்கு இருப்பிடம், தொழில்வாய்ப்பு என்பன ஏற்படுத் திக் கொடுக்கப்படவேண்டும். மீனவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அடுத்த கட்டமாக அவர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வீடுகள் கட்டப்பட வேண் டும். படகுகள் வழங்கப்படவேண்டும். தொழில் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
பிரமாண்டமான அளவில் நிவாரண, புனர் நிர்மான, அபிவிருத்தி வேலைகள் செய்யப்பட வேண்டும். இது தனிப்பட்ட புலிகள் அமைப் பால் செய்யக்கூடிய விவகாரம் அல்ல. இதற்கு சர்வதேச உதவிகள் தேவை.
இதற்காக வரும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமமாகப் பகிர்ந்தளித்து நியாயம் செய்வதற்கு ஒரு கட்டமைப்புத் தேவை என்று நோர்வேயும் விரும்புகின்றது. நாமும் விரும்பு கின்றோம். அத்தகைய கட்டமைப்பை ஏற்படுத் தும் விடயத்தில் முழு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராக உள்ளோம். இது தொடர்பான பேச்சுக்களில் உள்ள சிக்கல்கள், இழுபறிகளை நாம் இப்போது வெளிப்படுத்த விரும்பவில்லை.

<b>ஈரானிலிருந்து ஆயுதம் கொள்வனவு
</b>
பரஸ்பர நம்பிக்கையையும் நல்லெண்ணத் தையும் கட்டியயழுப்பும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாததை நோர்வே தரப்புக்குத் தலைவர் பிரபாகரன் கவலையோடும் அதிருப்தியோடும் சுட்டிக்காட்டினார்.
அரசுடன் இணங்கிப்போவதில் உள்ள முக் கிய குறைபாடு இதுதான்.
நிவாரணப் பொருள்களை அனுப்புவதில் உள்ள தாமதம் ஒருபுறம் இருக்க,இந்த மனி தப் பேரழிவுக்கு மத்தியில் அதனைத் தனது இராணுவக் கூட்டமைப்பை வலிமைப்படுத்தும் சந்தர்ப்பமாக அரசு பயன்படுத்துவது எமக்குக் கவலையளிக்கிறது. அரசு இந்த பேரழிவுக்கு மத்தியில் தனது இராணுவத்தை வலிமைப் படுத்த மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கை களில் ஒன்றாக ஈரானில் இருந்து 15 கோடி அமெரிக்க டொலர் (ஆயிரத்து ஐநூறு கோடி ரூபா) பெறுமதிக்கு ஆயுதங்களைக் கொள்வ னவு செய்வதை பிரபாகரன் சுட்டிக்காட்டினார்.
மனிதப் பேரழிவுக்காக சர்வதேச சமூகம் நிதியுதவியை வாரி வழங்கும்போது அரசு ஆயுதத் தளபாடங்களை வாங்கிக் குவித்து இவ்வாறு நடந்து கொள்வது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. - என்று தெரிவித்தார்.

Source : Uthayan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)