Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடலே கடலே
#1
கடலே கடலே
எம்கடலே பதில் சொல்
உன் செல்வத்தை நாம்
அள்ளி சேர்த்தாலா
எம் செல்வத்தையெல்லாம்
அள்ளிச் சென்றாய்
உன்கரையில் விழையாடி
சிப்பிபொறுக்கிய சிறுவர்கள்
உடல்களையல்லவா
பொறுக்கிகொண்டிருக்கிறேம்
தீர்ந்ததா உன்பசி
காணும் கரைதோறும்
காதலர் கூட்டங்கள்
கூடிமகிழந்த குழந்தைகள்
பேசி பொழுது போக்கும்
பெரியவர்கள் ஏன்
சில கிராமங்களையே
காணவில்லை
பிள்ளை உடலை
அடையாளம் காட்ட
பெற்றவரை தேடினோம்
பெற்றவரையும் காணவில்லை
போதும் தாயே போதும்
இனியும் அழுததும் போதும்
இழப்பு எமக்கு புதிதில்லை
மெத்தமாய் புதைத்த குழியில்
மீதமாய் எம்சோகங்கழையும்
புதைத்து
புதிதாய் மீண்டும் எழுவோம்
கடலே கடலே
மீன்பிடிக்க மீண்டும் வருவோம்.......

சுனாமி அனர்த்தத்தில் இறந்த எம்உறவுகளிற்கு சமர்ப்பணம்
; ;
Reply
#2
நன்றி . இன்று அனுட்டிக்க படும் துக்க தினத்தில் இக்கவிதை ..... மக்கள் பட்ட துயரை சொல்கிறது...
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)