01-26-2005, 07:15 AM
<img src='http://www.yarl.com/forum/files/paddamaramum_padsiyum.png' border='0' alt='user posted image'>
<span style='font-size:21pt;line-height:100%'>பறந்து சென்ற பட்சியே..!
பாதி வழியில்
உன் களைப்பாற - நீ
என் கிளையில் அமர்ந்து
ஓய்வெடுப்பதில் மகிழ்ச்சி.
உன்னை கதிரவனின்
கதிர்களில் இருந்து
காப்பாற முடிய வில்லை
என என் மனம் வருந்துகிறது.
பட்ட மரம் நான்.
ஒருவருக்கும் பயன் படாத
பிணமாகி விட்டேனே.
மரமே
நீ பட்ட மரம்..!
ஆனால்,
பயன் உள்ள மரம்.
உன் சாவுக்கு காரணம் நீ அல்ல.
அந்த பாவி மனிதர்கள்
ஆம்.. அவர்கள் செய்யும் அட்டகாசங்கள்.
ஆளுக்கு ஆள்,
நாளுக்கு நாள்,
உங்கள் இனங்களை
வெட்டி சாய்க்கிறார்கள்.
கொட்டில் போட்டார்கள்
கட்டில் செய்தார்கள்
தொட்டில் செய்தார்கள்,
இன்று..! கடதாசி செய்கிறார்கள்,
உங்களை கொன்று.
காய்ந்து போன உங்கள்
தாகம் தீர்க்க யாரும் இல்லை
காடு காடாய் வெட்டு வதற்கு
கருவிகளுடன் கள்ளர் கூட்டம்.
நீங்கள் தெய்வ பிறப்பு,
உங்களுக்கு என்று
எந்த ஆசைகளையும் வைத்து கொள்வதில்லை.
நீரையும் நிலத்தையும்
வளியையும் ஒளியையும்
ஆகாரமாயும் ஆதாரமாயும் கொண்டு
வானுயர வளர்கிறீர்கள்
வளங்களை அள்ளி கொடுக்கிறீர்கள்.
பழங்களை உலுப்பி கொட்டுகிறீர்கள்
பூக்களை சொரிகிறீர்கள்.
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்
புகலிடம் கொடுக்கிறீர்கள்
போதாக்குறைக்கு
மனிதர்களுக்கு நிழலும் கொடுக்கிறீர்கள்
ஆனால்
நன்றி கெட்ட மனிதர்கள்
உங்களை கொன்று
தாங்கள் நலமோடு
வாழத்துடிக்கிறார்கள்.
நீங்கள் பட்டமரமாக இருந்தால் என்ன
பச்சைமரமாக இருந்தால் என்ன
அந்த மனிதர்களுக்கு தேவை
உங்கள் உடல்கள்.
நீங்கள் எங்களுக்கு செய்யும்
உதவிகளை நாம் என்றும் மறவோம்.
என்னை இளைப்பாற நீ
அளித்த இடமே எனக்கு போதுமானது.
கதிரவன் இவர்களிலும் கண்ணியமானவன்.
இவர்களிடம் நீ கவனமாக இருந்து கொள்
பட்ட மரம் என தூரவிலகி போகார்கள்
கிடைத்த வரைக்கும் இலாபம் என
விறகாகவோ, பலகையாகவோ
ஆக்கிட துடிப்பார்கள்.
பாசம் இருப்பது போல் நடிப்பார்கள்
அடுத்த நாள் பகல் வரும் முன்னே அறுப்பார்கள்,
அரசாங்கத்துக்கு தெரியாமல்.
மனிதர்கள்,
கணவன் இறந்தால் மனைவிக்கு
\"பட்டமரம்\"
என பட்டம் சூட்டி விடுவார்கள்.
என்ன அதிசயம் ..! என்ன கொடுமை ..!
பாருங்கள்..
நீங்கள் இறந்ததால் பட்ட மரம் என்கிறார்கள்
ஆனால்,
அவள் இறக்காமலே பட்ட மரம் ஆகிறாள்.
இவ்வளவு நேரமும் இளைப்பாற இடமும்,
பேசச்சு துணையும் தந்த உனக்கு நன்றிகள்.
நான் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது
விடைபெறுகின்றேன், மீண்டும் இவ்வழியால் வந்தால்
உன்னோடு உரையாடுகிறேன்... நீ .. நீயாக இருந்தால்.
நன்றி .. பட்சியே..!
எங்களை பற்றி
நீ ஆற்றிய பேச்சு
என்மனதை கவர்ந்து விட்டது.
நான் பூமியில்
நிலையாக நிற்கும் வரை
உன் பேச்சை கேட்பதற்காய்
உன் நட்பை தொடர்பதற்காய்
உன் நினைவோடு,
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.
நன்றி மரமே..!
நீங்கள் இறந்தும் வாழ்கிறீர்கள்
மனிதர்கள் பிறந்தே வாழவில்லை. </span>
http://kavithan.yarl.net/
கவிதன்
25/01/2005
9.41 இரவு.
<span style='font-size:21pt;line-height:100%'>பறந்து சென்ற பட்சியே..!
பாதி வழியில்
உன் களைப்பாற - நீ
என் கிளையில் அமர்ந்து
ஓய்வெடுப்பதில் மகிழ்ச்சி.
உன்னை கதிரவனின்
கதிர்களில் இருந்து
காப்பாற முடிய வில்லை
என என் மனம் வருந்துகிறது.
பட்ட மரம் நான்.
ஒருவருக்கும் பயன் படாத
பிணமாகி விட்டேனே.
மரமே
நீ பட்ட மரம்..!
ஆனால்,
பயன் உள்ள மரம்.
உன் சாவுக்கு காரணம் நீ அல்ல.
அந்த பாவி மனிதர்கள்
ஆம்.. அவர்கள் செய்யும் அட்டகாசங்கள்.
ஆளுக்கு ஆள்,
நாளுக்கு நாள்,
உங்கள் இனங்களை
வெட்டி சாய்க்கிறார்கள்.
கொட்டில் போட்டார்கள்
கட்டில் செய்தார்கள்
தொட்டில் செய்தார்கள்,
இன்று..! கடதாசி செய்கிறார்கள்,
உங்களை கொன்று.
காய்ந்து போன உங்கள்
தாகம் தீர்க்க யாரும் இல்லை
காடு காடாய் வெட்டு வதற்கு
கருவிகளுடன் கள்ளர் கூட்டம்.
நீங்கள் தெய்வ பிறப்பு,
உங்களுக்கு என்று
எந்த ஆசைகளையும் வைத்து கொள்வதில்லை.
நீரையும் நிலத்தையும்
வளியையும் ஒளியையும்
ஆகாரமாயும் ஆதாரமாயும் கொண்டு
வானுயர வளர்கிறீர்கள்
வளங்களை அள்ளி கொடுக்கிறீர்கள்.
பழங்களை உலுப்பி கொட்டுகிறீர்கள்
பூக்களை சொரிகிறீர்கள்.
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்
புகலிடம் கொடுக்கிறீர்கள்
போதாக்குறைக்கு
மனிதர்களுக்கு நிழலும் கொடுக்கிறீர்கள்
ஆனால்
நன்றி கெட்ட மனிதர்கள்
உங்களை கொன்று
தாங்கள் நலமோடு
வாழத்துடிக்கிறார்கள்.
நீங்கள் பட்டமரமாக இருந்தால் என்ன
பச்சைமரமாக இருந்தால் என்ன
அந்த மனிதர்களுக்கு தேவை
உங்கள் உடல்கள்.
நீங்கள் எங்களுக்கு செய்யும்
உதவிகளை நாம் என்றும் மறவோம்.
என்னை இளைப்பாற நீ
அளித்த இடமே எனக்கு போதுமானது.
கதிரவன் இவர்களிலும் கண்ணியமானவன்.
இவர்களிடம் நீ கவனமாக இருந்து கொள்
பட்ட மரம் என தூரவிலகி போகார்கள்
கிடைத்த வரைக்கும் இலாபம் என
விறகாகவோ, பலகையாகவோ
ஆக்கிட துடிப்பார்கள்.
பாசம் இருப்பது போல் நடிப்பார்கள்
அடுத்த நாள் பகல் வரும் முன்னே அறுப்பார்கள்,
அரசாங்கத்துக்கு தெரியாமல்.
மனிதர்கள்,
கணவன் இறந்தால் மனைவிக்கு
\"பட்டமரம்\"
என பட்டம் சூட்டி விடுவார்கள்.
என்ன அதிசயம் ..! என்ன கொடுமை ..!
பாருங்கள்..
நீங்கள் இறந்ததால் பட்ட மரம் என்கிறார்கள்
ஆனால்,
அவள் இறக்காமலே பட்ட மரம் ஆகிறாள்.
இவ்வளவு நேரமும் இளைப்பாற இடமும்,
பேசச்சு துணையும் தந்த உனக்கு நன்றிகள்.
நான் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது
விடைபெறுகின்றேன், மீண்டும் இவ்வழியால் வந்தால்
உன்னோடு உரையாடுகிறேன்... நீ .. நீயாக இருந்தால்.
நன்றி .. பட்சியே..!
எங்களை பற்றி
நீ ஆற்றிய பேச்சு
என்மனதை கவர்ந்து விட்டது.
நான் பூமியில்
நிலையாக நிற்கும் வரை
உன் பேச்சை கேட்பதற்காய்
உன் நட்பை தொடர்பதற்காய்
உன் நினைவோடு,
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.
நன்றி மரமே..!
நீங்கள் இறந்தும் வாழ்கிறீர்கள்
மனிதர்கள் பிறந்தே வாழவில்லை. </span>
http://kavithan.yarl.net/
கவிதன்
25/01/2005
9.41 இரவு.
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->