Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அஞ்சலி-புஸ்பராஜாவுக்கு!
#1
<b>விடிந்தும் விடியாததொரு காலை
அம்மணமாய் கிடக்கும் என் சோதரி
உடலை என் மேலங்கி கொண்டு
போர்த்தி தரையில் அடித்து அழுதாலும்...
உமது இறப்புக்காகவும் இரங்குகிறேன்!

கல்லாகி போகாத மனிதனென்று
நாம்...............ஆனதால்...........
கல்லீரல் புற்று கணக்கு முடித்ததால்
உம்...அற்ப ஆயுள் சோகம் எண்ணி
மனசு - கனக்கிறோம்- ஆயினும்


எலும்பெங்கும் வலிக்கிறது!
அடி காயங்கள் ஆறுவதாய் இல்லை!
இன்றும் உம் தோழர் - எம்
அடிமடியில் தீ மூட்டுவதை
எப்பிடி மன்னிக்க? மறக்க?
வலிக்குது!

தேரோடும் வீதியில்
சேறள்ளி கொட்டிவிட்டு
கோயில் வாசல் அது வருகையில்
விடைபெறுகிறேன் ...
புலிதான் எல்லாமென்றொரு புராணமா?
கேவலம்... நீரல்ல...போய்விட்டீர்
இன்னும் உம் காலடி தொழுபவர்!

விடைபெற்ற மனிதா
நானறியா காலம் நீ
எமதெதிரிக்காய் போர் தொடுத்தாய்
மகிழ்ச்சி- நானறிந்த காலம்
எதிரி கால் கழுவியே வாழ்ந்தாயா?
ஊர் சொல்கிறதே!

உயிர் துடிக்கும் நேரத்தில்
எமக்கு தண்ணீர் கொடுக்காதே
என்று வாழ்ந்தாய் -!
ஓடி போனாய்- உனக்காய் கண்ணீர்
ஒரு மனிதனாய்-!
மானமுள்ள தமிழனாய் அல்ல!!! 8) </b>
-!
!
Reply
#2
வரணன் புஸ்பராஜா யார் ? :oops:
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
சினேகிதி இதை பாருங்க
http://www.yarl.com/forum/viewtopic.php?t=9929
-!
!
Reply
#4
ம்.......பார்த்தாச்சு வர்ணன்.என்னத்த சொல்ல வீட்டில விபரம் கேட்டா நிறைய கதை சொல்லுவினம் போல இருக்கு.இவரைப்போல நிறையப்பேருக்கு புத்தி தெளியாமல் இருக்கு.எப்ப தெளியுமோ...அண்மையில் கூட ஊரில(நீங்கள் வடமராட்சி என்று எங்கோ சொன்னதா ஞாபகம்.) ஒருவரை இவற்ற குறூப் ஆக்கள் சுட்டுப்போட்டினம்.சுட்டவர் தன்ர மனைவி பிள்ளையை பத்திரமா வேற ஊhருக்கு அனுப்பிப்போட்டு மனைவியின் ஊருக்குப்போய் சுட்டிருக்கிறார்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
வர்ணன் உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
! ?
'' .. ?
! ?.
Reply
#6
விடிந்தும் விடியாததொரு காலை
அம்மணமாய் கிடக்கும் என் சோதரி
உடலை என் மேலங்கி கொண்டு
போர்த்தி தரையில் அடித்து அழுதாலும்...
உமது இறப்புக்காகவும் இரங்குகிறேன்!
******

வர்ணன் அழகான வரிகள்.. உண்மையை உங்கள் கவி வரியில் தந்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

Reply
#7
நானும் ஆனந்த விகடனில் இவரது பேட்டியை வாசித்தேன் ஆனால் யார் என்று எனக்கு தெரியவில்லை பழைய போராளிகளில் ஒருவராக இருப்பார் என நினைத்தேன்

வர்ணண் அண்ணா கவிதையில சொன்ன மாதிரி ஒரு சக மனிதனாக இம்மனிதனின் இறப்புக்கு எனது அனுதாபங்கள்
. .
.
Reply
#8
Quote:உயிர் துடிக்கும் நேரத்தில்
எமக்கு தண்ணீர் கொடுக்காதே
என்று வாழ்ந்தாய் -!
ஓடி போனாய்- உனக்காய் கண்ணீர்
ஒரு மனிதனாய்-!
மானமுள்ள தமிழனாய் அல்ல!!!

8) 8) 8) 8)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)