01-28-2005, 06:07 PM
ஜனவரி 28, 2005
அந்தமானில் தொடரும் நில அதிர்வுகள் மாபெரும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
டெல்லி:
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று முதல் மீண்டும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டவாறு இருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் 120 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாலும், அதில் 33 நில நடுக்கங்கள் ரிக்டர் அளவு கோளில் அபாயகரமான அளவான 5 புள்ளிகளை எட்டியுள்ளதாலும், இந்தப் பகுதிகளில் பெரிய அளவில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் நிலவியல் பிரிவு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலநடுக்கங்களால் பூமிக்கடியில் இருந்து அதிகபட்சமான அதிர்வு சக்தி வெளியாக வருவதால் வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத ஏதாவது சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் நிலவியல் பிரிவும் எச்சரித்துள்ளது.
கடந்த மாதம் 26ம் தேதி இந்தோனேஷியா கடல் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை அடுத்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நில அதிர்வுகள் நிற்கவில்லை. இதனால் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும் மக்களிடம் பெரும் பீதி நிலவுகிறது.
இந் நிலையில் நேற்றிரவு முதல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து தொடர்ந்து 16 முறை பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை ரிக்டர் கோளில் 5.2 என்ற அளவில் இருந்து 5.8 என்ற அளவுக்கு பதிவாகியுள்ளன.
இவை நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக ஏற்படும் நில அதிர்வுகளா (ஆப்டர் ஷாக்), அல்லது மிகப் பெரிய பூகம்பம் ஏற்படப் போவதற்கான முன் அதிர்வுகளா (போர் ஷாக்) என்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக நிக்கோபார் தீவில் உள்ள காமோர்ட்டா பகுதியில் நேற்று காலை 09.29, 10.52, மதியம் 12.27, 02.12, பிற்பகல் 03.23, 04.28, மாலை 05.14, இரவு 08.54, 09.05 ஆகிய நேரங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.0 லிருந்து 5.8 வரை பதிவாகின.
இன்று காலை 10.35 மற்றும் 11.09 ஆகிய நேரங்களில் நிலநடுக்கம் (5.1 ரிக்டர்) ஏற்பட்டது.
இதே பகுதியில் நேற்றிரவு 11.11, 12.23, 02.15, 03.28, 04.11 மற்றும் 04.57 ஆகிய நேரங்களில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.1லிருந்து 5.5 வரை பதிவாகின.
லிட்டில் நிக்கோபாரின் வடக்கு கடலோரப் பகுதியில் நேற்று காலை 09.29க்கு நில நடுக்கம் (5.4 ரிக்டர்) ஏற்பட்டது.
இதே பகுதியில் நேற்றிரவு 01.40 மணியளவில் அடுத்தடுத்து 2 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நில நடுக்கம் 5.1 ரிக்டராகவும், அடுத்த நில நடுக்கம் 5.2 ரிக்டராகவும் பதிவானது. இன்று ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
கிரேட் நிக்கோபார் தீவில் இன்று காலை 09.02 மற்றும் மதியம் 01.40 மணிக்கு முறையே 5.3 மற்றும் 5.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கார் நிக்கோபாரின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் நேற்று மதியம் 02.07க்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. இதேபகுதியில் மாலை 05.14 மணி முதல் இரவு 10.29 வரை அடுத்தடுத்து 4 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் இவை 5லிருந்து 5.4 வரை
பதிவாகின. நேற்று முன்தினம் இரவு 03.30க்கு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது.
இந்த இடைவிடாத நில நடுக்கங்களால் அந்தமான் தொடர்ந்து குலுங்கி வருகிறது.
Thatstamil

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?