Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் தலைவரானார் விஜயகாந்த்!
#1
<img src='http://www.thatstamil.com/images26/cinema/vijaykanth12-400.jpg' border='0' alt='user posted image'>


சென்னை:

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் விஜயகாந்த் மீண்டும் வெற்றி பெற்று தலைவரானார். அவரது அணியினரும் இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர்.

நேற்று நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு விஜயகாந்த்தும், பொதுச் செயலாளர் பொறுப்புக்கு சரத்குமாரும், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன், பொருளாளர் பதவிக்கு காளை ஆகியோர் போட்டியிட்டனர்.

தலைவர் தேர்தலில் விஜயகாந்த்தை எதிர்த்து நடிகை தேவி போட்டியிட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது. அதன் பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜயகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 749 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட தேவிக்கு 122 வாக்குகள் கிடைத்தன.

பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட சரத்குமார் 790 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட ராஜாவுக்கு 71 வாக்குகளே கிடைத்தன. இதேபோல நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். பொருளாளர் பதவிக்கு மீண்டும் காளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது அணியின் வெற்றி குறித்து விஜயகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் கூறுகையில், நடிகர்கள் எங்கள் அணி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதையே இந்த வெற்றி காட்டுகிறது.

இதற்காக அனைத்து நடிகர், நடிகையருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Discuss on this topic : http://messages.indiainfo.com/tamil/viewto...pic.php?p=12#12
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)