Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
¸ñ¦¸ð¼À¢ý Ýâ¿ÁЏ¡Ãõ-¾Á¢ú¿¡¾õ
#1
தெற்காசியப் பிராந்தியத்தில் அனர்த்தத்தை விளைவித்த சுனாமியினால் ஏற்பட்ட அரசியல் தாக்கம் புவிசார் அரசியலில் ஏற்படுத்திய விளைவுகள் தொடர்பான உணர்வுகள் படிப்படியாக வெளிவரத் தொடங்கி விட்டன. இவ் உணர்வுகள் வெளிப்படுவது தவிர்க்கமுடியாதவையே ஆகும். ஏனெனில் புவிசார் அரசியலில் சுனாமி அரசியல் ஏற்படுத்திய தாக்கம் பெரியதாகும். சுருக்கமாகக் கூறுவதானால்ää தெற்காசியப் பிராந்தியத்தின் இராணுவ சமநிலையை மாற்றிவிடக் கூடிய அளவிற்கு அதன் தாக்கம் உள்ளது.

சுனாமியினால் தென்கிழக்காசிய நாடுகள் பாதிப்புற்ற போது இந்தியாதான் இப்பிராந்தியத்தின் (இந்து சமுத்திர பிராந்தியத்தின்) வல்லரசு என்ற எண்ணப்பாட்டுடனேயே செயற்பட்டது. இதன் வெளிப்பாடே பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிவாரணம் மட்டுமல்லää மீட்புப்பணிக்கென தனது கடற்படைக் கப்பல்களையும்ää உலங்குவானூர்திகளையும்ää இராணுவத்தினரையும் அனுப்பி வைத்தது. அத்தோடு இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு உலக நாடுகள் நிவாரண உதவிகளை வழங்க முன்வந்தபோதும் தம்மாலேயே தமது இழப்பை ஈடுசெய்ய முடியும் என்ற ரீதியில் நிவாரண உதவிகளையும் இந்தியா ஏற்க மறுத்து விட்டது.

ஒரு வகையில் பார்த்தால் இந்திய அரசு தனது நாட்டில் மேற்கொள்ள வேண்டியதான நிவாரணப் பணிகளையும் ஓரம் தள்ளிவிட்டுää அண்டைய நாடுகளுக்கு நிவாரண உதவிகளை உணவுப் பண்டங்கள்ää நிதிää ஆளணி என்ற ரீதியில் உதவ முன்வந்தமைக்கு காரணம் சுனாமியினால் ஏற்பட்ட அனர்த்தத்தை ஏனைய நாடுகள் -குறிப்பாக மேற்குலக வல்லரசுகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இப் பிராந்திய அரசியலில் தலையீடு செய்வதை நிறுத்துவது அல்லது மட்டுப்படுத்துவது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே ஆகும்.

ஆனால் இந்தியாவின் இத்தகைய எதிர்பார்ப்பு தோல்வியில் முடிவுற்றது என்பதே உண்மையாகும். அத்தோடு இச்சுனாமி அரசியல் தொடர்பான இராஜதந்திர செயற்பாட்டை இந்தியா திறம்பட்ட முறையில் கையாளவும் இல்லை. இவ்வாறான நிலைமை தோன்றியமைக்கு இத்தகையதொரு சந்தர்ப்பத்தை எவ்வாறு தமது நலனுக்குப் பயன்படுத்த முடியும் என மேற்குலக வல்லரசுகள் ஏற்கனவே அனுபவரீதியில் புரிந்து கொண்டு இருந்தமையும்ää சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதம் மிக உயர்வாக இருந்தமையுமே காரணமாகும்.

சுனாமி தாக்கியதும் இலங்கைக்கெனப் பெரும் நிவாரண உதவிகளை இந்திய அரசு அறிவித்ததோடு விரைந்தும் செயற்பட்டது. இந்தியாவின் சரக்குக் கப்பல்களும்ää கடற்படை கப்பல்களுமே சுனாமிக்குப் பின்னர் இலங்கை வந்தடைந்த முதலாவது நிவாரணக் கப்பல்களாக இருந்தன.

இவ் விரைந்த செயற்பாட்டின் மூலம் சிறிலங்கா அரசை தனது பிடிக்குள்ஃ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம் என்றே இந்தியா கருதியது. ஆனால்ää வழமைபோலவே இந்தியாவுடன் கலந்து போசாமலே- ஏன் இந்தியாவிற்கு அறிவிப்புச் செய்யாமலே அமெரிக்க போர்க்கப்பல் இலங்கைத் துறைமுகங்களுக்குள் பிரவேசிக்கவும்ää அமெரிக்க இராணுவ விமானங்கள் விமானத் தளங்களில் தரையிறங்கவும் சிறிலங்கா அரசால் அனுமதிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உட்பட பல நாட்டுப் போர்க்கப்பல்கள்ää விமானங்கள் இராணுவää கடற்படை சிப்பாய்கள்ää சிறிலங்காவிற்குள் பிரவேசித்தன. இது ஒரு வகையில் இப்பிராந்தியத்தின் இராணுவச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி தம்மிடம் உள்ளதென இந்தியாவிற்கு மேற்கு நாடுகள் உணர்த்தியஃ வெளிப்படுத்திய சம்பவம் எனக் கொண்டாலும் தவறாக மாட்டாது.

அமெரிக்கத் துருப்புக்கள் இலங்கையில் தரையிறங்கியதும்ää இது குறித்து இந்திய அரசு விசனம் அடைந்திருப்பதாகவும்ää சிறிலங்கா அரசிற்கு சில அறிவித்தல்களைச் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தபோது சிறிலங்கா அதனை மறுத்தது. அமெரிக்க வருகை இந்தியாவுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதானதொரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது வரும் தகவல்களின் படியும்ää இந்தியத்தரப்பில் இருந்து வெளிப்படுத்தும் கருத்தின் அடிப்படையிலும்ää அமெரிக்க இராணுவத்தினரின் வருகை குறித்து சிறிலங்கா அரசு இந்தியாவிற்கு தெரியப்படுத்தவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. அதாவது இந்தியாவுடன் ஆலோசனையோ அன்றிப் கருத்துப்பரிமாற்றமோ இன்றி அமெரிக்கத் துருப்புக்கள் வருகைக்கு சிறிலங்கா அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனை வெளிப்படுத்துவது போன்றே இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங்கின் பேட்டியும் அமைந்திருந்தது. 'இரண்டு நாடுகளும் கலந்தாலோசித்த பின்னர் யார் வேண்டுமானாலும் இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம்." என்ற நட்வர்சிங்கின் கூற்றுக்கள் இந்தியா இதில் ஓரம் கட்டப்பட்டு இருந்தது என்பதையே வெளிக்காட்டுவதாக இருந்தது.

இந்த வகையில் சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர போட்டியில் இந்தியா பின்னடைவைச் சந்தித்த அதேவேளைää இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் இந்தியாவின் அணுகுமுறை தோல்வி கண்டுள்ளது. ஏனெனில்ää சுனாமி அரசியலின் பின்னணியில் ஏற்படக்கூடிய அன்றி பயன்படுத்திக்கொள்ளக் கூடியதான மிகப் பெரிய அரசியல் வாய்ப்பினை இந்திய இராஜதந்திரிகள் வெற்றிகரமாக கையாளவில்லையென்றே கூறலாம்.

கடந்த நூற்றாண்டின் 90 களின் ஆரம்பத்திலிருந்து இலங்கை தொடர்பான இராஜதந்திர செயற்பாட்டில் இந்தியா பெரிதாக எதனையும் சாதித்துக் கொண்டதாக இல்லை. ஒரு மந்த நிலையிலேயே அது இருந்தது. மாறாகத் தவறானதொரு வழிமுறையைக் கைக்கொண்டது என்றே கூறலாம். அதிலும்ää இனப்பிரச்சினை தொடர்பான அதன் இராஜதந்திரமானது உணர்ச்சிகளின் அடிப்படையிலானதாக இருந்ததே ஒழிய -மதிப்பிடத்தக்க மதிநுட்பத்துடனும்ää தேச நலனுடனும் கூடியதாகவும் இருக்கவில்லை.

<b>விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருந்த இந்திய அரசு இலங்கையின் தமிழ் மக்கள் தொடர்பான அணுகுமுறையில் பெரும் தவறிழைத்திருந்ததென்பது வெளிப்படையானது.

இனப்பிரச்சினைக்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் எனக் கூறிய இந்திய அரசின் நடவடிக்கைகள் சம நிலையானதாக இருக்கவில்லை. சிறிலங்கா அரசுக்கு சார்பாகவே இருந்தது.

மறுபுறத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மாறாகச் செயற்படுபவர்களையும்ää சிறிலங்கா அரசின் கைக்கூலிகளாகச் செயற்படுபவர்களையும் கொண்டே தமிழ் மக்களை அணுகவும் இந்தியா முனைந்துள்ளது. அதாவது தமிழ்மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயுள்ள சக்திகளை தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இந்தியா முயன்று கொண்டிருந்தது.

[b]அதுமட்டுமன்றி இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்பாக இந்தியாவிற்கு இதில் உரிய பங்கை வழங்குவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராகவே இருந்தது. இதன் காரணமாகவே விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்தியா ஊடாகப் பயணம் செய்வதற்கு அனுமதிக்;குமாறு கோரிக்கைகளும் விடுக்கப்பட்டது.</b>

ஆனால் இந்திய மத்திய அரசும் சரிää தமிழக அரசும் சரி இலங்கையின் கள நிலவரம்ää இலங்கை தொடர்பாகச் சர்வதேச நாடுகளின் பார்வையில் ஏற்பட்டு வரும் மாற்றம் விடுதலைப்புலிகள் விடயத்தில் அவர்களின் அண்மைக்காலப் போக்கு என்பன போன்ற எதிலுமே கவனம் செலுத்தவில்லை. இராஜதந்திர நகர்வுகளை ஏதோவொரு வரையறைக்குள் உட்பட்டது போன்றதாகவே இலங்கை விவகாரத்தை இந்தியா கையாண்டது.

<i>இவ்வாறு இந்தியா கையாண்டமைக்கு வறட்டுத்தனம் பொருந்திய சில இராஜதந்திரிகள் காரணமாக இருந்திருக்கலாம். குறிப்பாக அண்மையில் காலமான முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் டிக்சிற் போன்ற இராஜதந்திரிகளின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளும் இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் ராம் போன்றவர்களின் வறட்டுத்தனமான வழி காட்டுதலும் காரணமாக இருந்திருக்கலாம்.</i>

மேலும்ää சுனாமி அனர்த்தத்தின்போது மேற்கு நாடுகளின் இராஜதந்திரத்தைப் புரிந்து கொண்டாவது இந்திய இராஜதந்திரிகள் நடந்து கொண்டிருக்கலாம். இந்தியா மட்டும்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடைசெய்துள்ள நாடு அல்ல சிறிலங்காவிற்கு நிதியுதவி செய்யும் பிரதான 12 நாடுகளில்; அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து முக்கிய நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தே உள்ளன.

இருப்பினும்ää சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இலங்கை அரசியலில் தீவிர கவனம் செலுத்திய மேற்கு நாடுகள் நிவாரணம் என்ற நிலையில் தமிழர் தாயகப் பகுதிக்கும் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கைகளை வெளியிட்டன. அது மட்டுமல்ல ஒப்பிற்குச் சிறிய அளவிலாயினும் வடக்கு- கிழக்கில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டன.

ஆனால் இந்தியா ஆட்சியாளர்களோ கொழும்பிலுள்ள சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவரோ இவ் விடயத்தை எள்ளளவிலும் சிந்திக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கத்துடனேயே தமது உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டன. இந்தியா கடைப்பிடித்த இவ் இராஜதந்திரமே இன்று இப்பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கிற்கு எல்லையிடுபவையாகியுள்ளன.

<b>ஆனால் இந்தியாவில் இருந்து காலம் தாழ்த்திய நிலையிலாயினும் இலங்கை தொடர்பான சிறிலங்காவின் கொள்கை குறிப்பாக இலங்கையின் தமிழர் தொடர்பான நிலைப்பாடு மாற்றம் செய்யப்படுதல் வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்த வகையில் ஜவகர்லால் நேரு பல் கலைக்கழகப் பேராசிரியர் சகாதேவன் அண்மையில் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில் இக் கருத்தினைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை பேராசிரியர் சகாதேவன் போன்றவர்கள் தமது கருத்துக்களை ஏன் முன்னர் வலுவாக வெளிப்படுத்தவில்லை. தற்பொழுது வெளிப்படுத்தவேண்டிய தேவை ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் இடமுண்டு. ஆனால் இதற்குச் சில வேளை இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தி பொருந்தியவர்களாக இருந்த டிக்சிற் போன்றவர்களின் வறட்டுத்தனமான பிடிவாதங்கள் இவர்களின் கருத்துக்களை புறம்தள்ளியிருக்கலாம். அல்லதுää சுனாமி இப் பிராந்தியத்தில் உருவாக்கிய இராணுவச் சமநிலை மாற்றம் பேராசிரியர் சகாதேவன் போன்றவர்களுக்கு இலங்கை தொடர்பான- குறிப்பாக இலங்கைத் தமிழர் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக இருந்திருக்கலாம்.

[b]காரணம் எதுவாயினும் இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாது ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படையானதொன்று. </b>

இப்பிராந்தியத்தில் அமெரிக்காவோ அன்றி அதன் நேசநாடுகளோ தமது ஆயுதப் படைகளை நிரந்தரமாக வைத்திருக்காது போனாலும் இப்பிராந்தியத்தில் எவ்வேளைகளிலும் தமது ஆயுதப்படைகளை இந்தியாவின் அனுசரணையின்றி அதாவது இந்தியாவின் கருத்தறியாது தரையிறக்க முடியும் என்பதை அவை செயல் மூலம் வெளிப்படுத்தியுள்ளன.

[b]அத்தோடு சிறிலங்கா இந்தியாவின் விசுவாசம் மிக்க உற்ற நண்பனாக எப்பொழுதுமே இருக்க மாட்டாது என்பதையும் இந் நிகழ்வுகள் வெளிப்படுத்தியிருக்கும். இதேவேளை வரலாற்று ரீதியாகவும் சரிää இன்றும் சரி இந்தியா மீது சிறிலங்கா தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது கிடையாது.

-----------------------------------------------------------------------

þó¾¢Â¡ º¢í¸Ç þÉÅ¡¾¢¸¨Ç ±É¢Ôõ ¿õÀ¢ þÕ󾡸 «¦Áâ측×ìÌ þý¦É¡Õ þŠ§Ãø þó¾¢Â¡×ìÌ «Õ¸¢ø ¯ÕÅ¡¸¢Å¢Îõ.. ¯ÕÅ¡¸¢ÅÕ¸¢ýÈÐ.
:evil: :oops:
[b]

,,,,.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)