Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனவுகள்
#1
<span style='font-size:25pt;line-height:100%'>கனவுகள் </span>

கண்ணிமை மூடிக் கொண்டும்
கனவினை வளர்த்துக் கொண்டும்
வேதமாய் உந்தன் பேரை
மெல்லமாய்ப் பாடிக் கொண்டும்
சின்னதாய் மூச்சை விட்டு
தூக்கம் போல் கிடந்துன்னை
எண்ணியே களிக்க வேண்டும்
என்னைநான் மறக்க வேண்டும்.


வெண்பாவின் முச்சீர் விட்டு
உன் பாவைப் பாடுதற்கு
யாப்புக்குள் யாப்பு ஒன்றை
நான்பாடி வைக்க வேண்டும்.
சந்தத்தை விட்ட கலா
உந்தனின் பெயரைப் பாடி
காவியம் ஒன்று செய்வேன்
காத்திரு! காலம் வெல்லும்.


கண்டதும் உன்னை யெந்தன்
நெஞ்சது பதறும் ஏனோ?
கண்களைக் கண்கள் நோக்க
கால்களில் நடுக்கம் ஏனோ?
எத்தனை மேடை கண்டேன்
இப்படி யான தில்லை.
வித்தகி யுன்னால் என்றால்
விழியில்நீர் தருவாய்!. வேண்டாம்.


அழகெது என்றே என்னை
எவரேனும் கேட்டால் உன்னை
அளந்துநான் சொல்வேன் அந்த
அழகது இது தானென்று.
நல்லதோர் வீணை யொன்றைக்
கைகளில் தந்தால் போதும்
கலைமகள் என்றே யுன்னைக்
கைதொழக் கைகள் நீளும்.


கவிதைக்குப் பொய் தானழகு
என்பதால் சொன்னேன் பொய்யே
என்றுநீ எண்ணிக் கொண்டு
என்னையே வெறுக்க லாமோ?
நாளையுன் எதிரில் வந்து
நானெந்தன் காதல் சொன்னால்
நேரிலே ஓடி வந்தென்
நெற்றியில் முத்தம்போடு!


ஊமைகள் பேச்சைப் போலே
உணர்விலே காதல் செய்தோம்.
வேதமே வேண்டாம் போதும்
வேண்டுவ தொன்றைத் தானே.
என்னுயிர் வேரைப் பிய்த்து
உனக்கொரு தாலி செய்வேன்
மஞ்சளும் பொன்னும் வேண்டாம்
கழுத்துக்கு அவைகள் பாரம்.
.
.!!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)