Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
யோவ் வானம்baaady ளொள்ளா வேற வேலையில்லை உமக்கு
நடக்கிற அலுவலை பாரப்பு அப்பிடியே குருவீ`s மேல சொன்னதை நல்லா வாசியப்பு
5000 சாகேக்கை வாராதேங்கோ 1 எண்டால் நல்லா சவுண்ட் போடங்கோ
அப்பு அங்க சிறையில உந்த அமெரிக்கர்களும் பிரித்தானியர்களும்
செய்யிறதைவிட உது ஒண்டும் பெரிசில்லை
சரி அந்த ஒரு உசிர் பெரிசென்டால் உவர் யாரப்பா இத்தாலி பெரிசு பெர்னஷ்கோனி தானே அடியப்பு போன்
சும்மா இங்க வந்து ....
நீரும் ஒரு றிப்போட்டர் தானே அங்கால பக்கம் போய்டாதேயும்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
அங்க (அமெரிக்கர்களும் பிரித்தானியர்களும் நிக்கும் இடத்தில) என்ன நடக்கும் எண்டு உலகத்துக்கு நல்லா தெரியும் றிப்போட்டர் போய் பாத்து சொல்ல தேவையில்லை
யோவ் 10 :evil: என்ன நடக்கிது இங்க...........
[b]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சின்னப்ஸ்...உங்க சின்னக் கருத்து பலதைச் சொல்லுது...அதோட சேர்த்து சிலதைச் சொல்ல வேணும்...அமெரிக்காவுக்கு மற்றவன் ஆயுதம் வைச்சிருந்தால் என்ன.. இல்லாட்டால் என்ன...ஏதோ அவையட்டக் கேட்டுத்தான் மற்றவன் ஆயுதம் வைச்சிருக்க வேணும் போல...பிறகென்ன சுதந்திரம் அவங்களுக்கு...இப்ப ஈரானுக்க அணு ஆயுதம் கிடக்காம்..புராணம் பாட வெளிக்கிட்டார் புஷ்...அப்ப அவரட்ட என்ன இருக்காம்...அவையள் எல்லாம் வைச்சிருந்து உலகத்த ஏய்க்கலாம்..மற்றவன் வைச்சிருந்து உவையின்ர அநியாயங்கள தட்டிக்கேட்டா அது பயங்கரவாதம்....!
இத்தாலிக்காரனுக்கும் அமெரிக்கனுக்கும் பிரிட்டனுக்கும் என்ன வேலை ஈராக்கில... சாதம யார் வளர்த்தது..இதே அமெரிக்கன் தான்..ஒசாமாவ யார் வளர்த்தது...இதே அமெரிக்கன் தான்...ஈராக் மக்களா கேட்டார்கள் வளர்த்துவிடென்று...நீங்களா உங்கட பிராந்திய வல்லாதிக்க நலனுக்காக சாதாரண மக்களைத் துன்புறுத்தும் தலைவர்களை வளர்க்கும் போது அவங்கள் செய்யுறதை எப்படித் தப்பென்று சொல்ல முடியும்...அவங்கள் கொலை செய்திட்டு வெளியில சொல்லுறாங்கள்...இவங்கள் கொலை செய்திட்டு பயங்கரவாதி என்று மூடிமறைக்கிறாங்கள்...இதுதான் வித்தியாசம்..யார் செய்தாலும் கொலை கொலைதான்...! யார் செய்தாலும் அது குற்றம்...!
இப்ப தேவை... நடக்க இருக்கிற கொலையை நிற்பாட்ட கொலை செய்யுறவ யாரா இருந்தாலும் மக்கள் விரும்பாத இடத்தில நிக்கக் கூடாது....!
நிதர்சன்...கொஞ்சம் சிந்தியுங்கோ...இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் இலங்கையில இருக்கேக்க...உலகத்துக்கு அமைதிப்படை...ஆனா அங்க செய்ததெல்லாம் அநியாயம்...அவங்கட இருப்பை மக்கள் அனைவரும் விரும்பினவையோ...கொஞ்சப் பேர் விரும்பினவ...இப்பவும் விரும்பினம்...அப்ப அங்க புலிகள் பெரிய இராணுவ இலக்குகளையா தாக்கினவ..... இல்லையே...சின்னன் சின்னனாத் தாக்கி கரைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்திச்சினம்...அவனும் சனத்தைப் போட்டு கரைச்சல் பண்ணிக்கொண்டே இருந்தான்...அதுக்குள்ள டக்கிளசின்ர மண்டையன் குழுவும் மற்றதுகளும் போட்டுத்தள்ள புலியும் போட்டுத்தள்ள...தினமும் கொலைதான்...! அதுதான் இப்ப ஈராக்கில நடக்குது...எனி நீங்க அங்க சொன்னதைப் பற்றிச் சிந்தியுங்கோ...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 44
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
குருவியர் சொல்வதும் ஒருவகையில் சரிதான். பிடிபட்டால் சாதாரன பிரஜை. இல்லையென்றால் சிறந்த ஒற்றர். ஆனால் சிலசமயம் சாதாரண பிரஜையும் தண்டிக்கப்படுகிறார். ஏகாதிபத்தியங்களின் கண்களில் சாதரண உயிர்களின் விலை அவ்வளவு மதிப்பானதல்ல. அவைகளின் ஏகாதிபத்திய நலன்கள் தான் மிக முக்கியமானவை. ஆனால் இவைகள் தம் நாட்டு மக்களை மிகத் திறமையாக ஏமாற்றி தம் போக்கிற்கு ஏற்ப இசைவாக்கி விடுகிறார்கள். இதுதான் சோகமாகிவிடுகிறது.
glad
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
இத்தாலி நாட்டின் கடத்தப்பட்ட
பெண் நிருபரை இன்று கொல்வோம்
ஈராக் தீவிரவாதிகள் மிரட்டல்
துபாய், பிப். 7-
இத்தாலி நாட்டு பெண் நிருபர் ஜியுலியானா க்ரேனா. செய்தி சேகரிப்பதற்காக ஈராக் சென்ற இவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர்.
``இத்தாலி ராணுவம், ஈராக்கில் இருந்து திரும்பப் பெறப்படா விட்டால், அந்த நிருபரை இன்று (திங்கட்கிழமை) பகல் கொலை செய்து விடுவோம்" என்று ஜிஹாத் அமைப்பு தீவிரவாதிகள் மிரட்டி உள்ளனர்.
இதே பெயரைக் கொண்ட இன்னொரு அமைப்பும் இந்த நிருபரை கடத்தியதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அந்த இயக்கம் நிருபரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை.
Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>