Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சலனம்: ஈழத்தமிழ் திரைக்கலை சஞ்சிகை
#1
<img src='http://img228.imageshack.us/img228/3529/salanamm1kt.png' border='0' alt='user posted image'>

<b>சலனம் பற்றி </b>

வணக்கம்

தமிழில் சற்று வித்தியாசமானதோர் இணையம் இது.

'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்" - எனத் தேடலும், பதிவுமாக இதன் பக்கங்கள் விரிவடையும்.

கலைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அரங்க மற்றும் திரைக்கலை, இரசனைக்கான தளம்தான் இந்தச் சலனம்.

புத்தாயிரத்தில் உருவான இவ்வெண்ணக்கரு 'அப்பால் தமிழ்"த் தாயில் உருவகமாகி, மெல்லத் தவழ்ந்து, நடைபயின்று, நிமிர்கிறது.

பிரான்சில், லூமியர் சகோதரர்களால் முதல் அசையும் பட ஒளிப்பதிவைச் செய்த 1895 மார்ச் 19ம் நாளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து இணையவலைப் பதிவாகிறது சலனம்.

நம் சமூக கலைசார் ஈடுபாட்டால் ஒன்றிணையவும், பணியாற்றவும், தன்னார்வத்துடன் கைகோர்த்த ஆற்றலாளர்களின் கூட்டு வெளிப்பாடாகவே சலனம் பதியமாகின்றது.

இதேவேளை புலம்பெயர் வாழ்வுச் சூழலுக்கமைவான பல்தேசிய சமூகக்கலைகளுடன்; நேசவுறவாடும். அவற்றில் ,நல்லவை உள்வாங்கி அல்லவை அகற்றி, தனக்கான தடமமைத்துச் செல்லும்.

கடந்த நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து நம் சமூகம் பூமிப் பந்தில் பெற்றுக்கொண்ட, கொண்டிருக்கும் எண்ணற்ற அனுபவங்கள் நம்மவர்களாலேயே கலைப்படைப்புகளாகப் பதிவுறவேண்டும் என்பதிலும் சலனம் அக்கறை கொள்கிறது.

கலை ஆற்றலாளர்கள், ஆர்வலர்கள், கரிசனையாளர்கள், இரசனையாளர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் தமது இனிய பயணத்தைத் சலனத்தில் தொடர வாழ்த்துகள்.

பாரிஸ்
19.03.2006 ஞாயிறு
வள்ளுவர் ஆண்டு 2037 பங்குனி 06

வணக்கம்

இணையவழி கைகுலுக்குகிறோம்

வாழ்க வளமுடன்!

www.salanam.com

<img src='http://img228.imageshack.us/img228/3529/salanamm1kt.png' border='0' alt='user posted image'>
Reply
#2
சலனம் எல்லோருக்கு ஒரு தகவற் களஞ்சியமாகவும் இருக்கின்றது.
"நமக்கென்றோர் நலியாக கலையுடையோம்" அழகான வரிகள். சலனம் உரிமையாளருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் ...

இணைப்பு இங்கு இணைத்தமைக்கு அனிதாவிற்கு நன்றி

Reply
#3
நன்றாகவும் வித்தியாசமாகவும் அமைக்கப்பட்டுள்ளது..............வாழ்த்துக்கள்...............
Reply
#4
நன்றாக வடிவமைத்துள்ளார்கள். அனிதாவுக்கு நன்றிகள்
,
,
Reply
#5
..............வாழ்த்துக்கள்...............அனிதாவுக்கு நன்றிகள்
"To think freely is great
To think correctly is greater"
Reply
#6
நல்லதொரு முயற்சி!நம்மவர் படைப்புக்கள் ஆங்காங்கே தனித்து நிற்காது சலனத்தில் சங்கமித்திருப்பது மகிழ்ச்சியழிக்கிறது.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
இணைப்புக்கு நன்றிகள அனிதா. நல்லதொருமுயற்சி நன்றாகவடிவமைத்துள்ளார்கள். பாராட்டுக்கள்
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)