Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொன்றவர்களின் சகாக்களும் கண்காணிப்புக்குழுவின் தலைவரும் ....
#1
கௌசல்யனை கொன்றவர்களின் சகாக்களும் அதனை நியாயப்படுத்தும் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவரும் டென்மார்க்கைச் சேர்ந்தவர்.
வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 -ஜெயராஜ்-
கௌசல்யனைக் கொன்றவர்களின் சகாக்கள் டென்மார்க்கில் தங்கி இருப்பதுடன் அங்கிருந்து கொலைக்கு உரிமை கோரியுள்ள அதே நேரம் இந்தக்கொலை யுத்த நிறுத்த மீறல் இல்லையென்றும் டென்மார்க் நாட்டுப் பிரிஜையான இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவர் அறிவித்துள்ளமை மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. கௌசல்யன் உட்பட 4 போராளிகளின் மரணத்திற்கும் இலங்கை அரச புலனாய்வுப்பிரிவினரின் புதிய தமிழ்த் தாக்குதல் பிரிவான கருணா குழு என்ற பெயரில் இயங்கும் முன்னை நாள் கிழக்கு மாகாண தமிழ்ப் போராளிகளின் கூட்டுக்குழுவினர் இன்று உரிமை கோரியியுள்ளது. இவர்களின் இணையத்தளம் வுஆஏP மற்றும் வுஐஏஆ டென்மாக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இந்தக் கொலையை நியாயப்படுத்தியுள்ளதுடன் உரிமையும் கோரியுள்ளார்கள். இதேநேரம் இந்தச் சம்பவம் யுத்த நிறுத்த மீறல் அல்ல எனவும் இது ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்டது என்றும் டென்மார்க்;கைத் தாயகமாகக் கொண்ட புதிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக டென்மார்க் நாட்டின் பிரதமரின் செயலாளர் ää வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ää வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான இராஜதந்திரப் பிரதிநிதி ஆகியோரிடம் கருத்துக் கேட்டபோது தமது இரகசிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்புடன் தொடர்புகளைப் பேணுபவர்கள் கண்காணிக்கப்படுவர் என்றும் தெரிவித்தனர். மேற்கொண்டு தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.

இதேநேரம் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் இலங்கையரசின் புதிய தமிழ்ப் புலனாய்வுப்பிரிவினர் தமக்கிடையே மோதியதில் 9 பேர் வரை பலியாகி இருந்தார்கள். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் வீட்டில் நடந்த சம்பவத்தை ஒரு யுத்த நிறுத்த மீறல் என்றும் இது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டது கவலைக்குரிய விடயமென்றும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு அறிவித்திருந்தது. இதுவொரு பயங்கரவாத செயல் என்று அரசு தெரிவித்திருந்ததுடன் இலங்கையில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்படும் எனவும் அரச சமாதானச் செயலம் தெரிவித்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் ää அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் கருணா குழு எனக்கூறிக்கொண்டு இலங்கையரச புலனாய்வுப் பிரிவினர் தாக்குதலை மேற்கொண்டு அழிவுகளை உருவாக்கினால் அது யுத்த நிறுத்த மீறல் இல்லை என்றும் அதனைக் கருணா குழுவென்றும் முரன்பாடு என்றும் வேறாகப் பார்க்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு கருணா குழு என்று கூறிக்கொண்டு அரச உளவாளிகள் உலாவும் போதும் அவர்கள் மீது அரச புலனாய்வுப்பிரிவு தமது பாதுகாப்புக்காக தகவல்களைத் திரட்டி பின்னர் கொன்றுவிட்டு புலிகள் மீது பழிசுமத்தும் போதும் அது யுத்த நிறுத்த மீறல் எனவும் புதிய நியாயம் கற்பிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இதுவரை கேணல் சங்கர் முதல் லெப்.கேணல் கௌசல்யன் வரை பல டசின் தளபதிகளும் போராளிகளும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளையும் திட்டமிட்டுக் கொன்று குவிக்கும் அரசு அதற்கு அனுதாப அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றது.

Source : http://www.nitharsanam.com/?art=8705
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
கேணல் சங்கர் யுத்த நிறுத்த காலத்தில கொல்லப்படேல.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)