02-14-2005, 02:00 PM
இராக் தேர்தலில் ஷியா மதத்தினரின் கட்சி வெற்றி
ஷியா வேட்பாளர்கள் பெரும்பான்மையாக உள்ள குழுவொன்று இராக்கிய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது.
மூத்த மத குருவான அயதொல்லா அலி சிஸ்தானியின் அனுசரணையுடனான இந்தக் குழு அளிக்கப்பட்ட என்பத்தைந்து லட்சம் வாக்குகளில் சுமார் அரைவாசியை பெற்றுள்ளது.
இந்த குழு ஒரு பிரதமரை பிரேரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்காலப் பிரதமர் இயாத் அலவியினால் தலைமை தாங்கப்படும் கூட்டணி, சுமார் கால்வாசி வாக்குகளைப் பெற்ற குர்து இனத்தவர்களின் இரண்டு கட்சிகளினால் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
சதாம் ஹுசைனின் ஆட்சியில் ஆக்கிரமித்திருந்த பல சுனி இன முஸ்லிம்கள், இரண்டு வாரத்துக்கு முன்னர் நடந்த இராக்கின் இந்த தேர்தலை பகிஸ்கரித்திருந்தனர்.
அவர்களை அரசியல் செயற்பாடுகளுக்குள் ஈர்க்கப் முயற்சிக்கப் போவதாக ஷியா தலைவர்கள் கூறுகின்றனர்.
275 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபையில், அதிகார சமநிலையை தம்வசம் தக்கவைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் குர்து இனத்தவர்களின் கட்சிகள், அதிபர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள்
BBC

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>