Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் மழை பெய்யாதோ? -அ.இரவி-
#1
இப்பொழுது ஓர் இடர் தமிழ்நாட்டு தமிழ்த்திரை உலகை இம்சைப்படுத்துகின்றது. அதனை நச்சுச்சுழல் என்றும் சொல்லலாம். அது என்னவெனில் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தலைப்பு இடுவது. மற்றும் ஆங்கிலச் சொற்கள் அதிகம் கலந்து தமிழ்த் திரைப்படப் பாடல்கள் இயற்றுவது.

சினிமா (Cinema) என்கின்ற சொல் தமிழ் அல்ல. சினிமா தமிழ் பண்பாட்டினுள் புகுந்தபோது அதற்குத் தோதாக தமிழில் சொல் கிடைக்கவில்லை. தமிழாக நாம் அடையாளம் காணக்கூடிய ஏனைய மொழிச் சொற்களிலும் கூட (ஞானம் போன்ற) சினிமாவுக்கு நெருங்கி வரத்தக்க சொல் ஏதும் இல்லை. அது இருபதாம் நூற்றாண்டின் தொழில் நுட்பக்கலை. சினிமா தமிழினுள் வரும்போது தமிழும் தன்னைத் தயார்ப்படுத்தி அதனை எதிர்கொள்ள முயன்றது. ஒத்துவரக்கூடிய ஓரளவுக்கு பொருள் பொருந்தி வரக்கூடிய சொல்லை சினிமாவுக்கு இட்டுப் பார்த்தது. சினிமாவை திரைப்படம் என்றது. திரையில் தெரியும் படம் என்பதுதான் அதன் விளக்கம்.

அது மிகப்பொருத்தமானது தானா? இல்லை என்று நாம் மறுக்கää இன்னும் உதாரணங்கள் உள்ளன. றெயினை (Train) புகையிரதம் என்று முதலில் சொன்னோம். நெற்றியில் குழாய் வைத்து புகை கக்கியதால் அது சரி. ஆனால் இப்பொழுது இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று ஏனைய வாகனங்களும் புகை கக்குகின்றனவே! அப்படியானால் அவை புகையிரதம் இல்லையா? இரண்டு றெயின் (Train) மின்சாரத்தில் ஓடுகின்றபோது புகை கக்கவில்லையே! அங்ஙனமாயின் புகையிரதம் என்று சொல்லுதல் முறைதானா? அப்படிப் பார்க்கின்றபோது றெயினுக்கு தொடரூந்து என்ற சொல் ஓரளவு பொருந்தி வருகின்றது இல்லையா? ஓம்தான் எனில் ட்ராம் (Tram) வாகனத்தை என்ன பெயர் கொண்டு அழைப்போம்? இப்படி இன்னும் இன்னுமென்று கேள்விகள் உள்ளன.

மொழி என்பது கணிதம் போல நிறுவப்பட்ட ஒன்றல்ல. விஞ்ஞானம் போல-காரிய காரணத்தொடர்பு கொண்ட விளக்கமும் அல்ல. மொழி மாற்றம் பெற்றுக்கொண்டே இருப்பது. கொள்வனவும் செய்கின்றது. கொடுப்பனவும் செய்கின்றது. வாங்கியும் வளம் பெறுகின்றது வழங்கியும் வளம் பெறுகின்றது. இவைதாம் சரியெனில் வேற்று மொழிப் பண்பாடு கலை தொழில்நுட்பம் இன்னோரன்னவை நம்மொழியில் புகும்போது நம்மொழி அவற்றை இருகரம் நீட்டி வரவேற்பது மாத்திரமல்ல அவற்றை நம் மொழிப் பண்பாட்டுக்குத் தோதாக மாற்றுவது மகாமுக்கியம்.

அத்துடன் நம்மொழியில் அதன் பொருள்படும் சொல்லைக் கண்டுபிடித்தலும் முக்கியம்;. இல்லையோää பிறமொழியில் இருந்து இரந்து கடன் கேட்போம். உவந்து தரும் ஏனைமொழி. இல்லையென்றுää தனித்தமிழ்தான் முக்கியமென்று ஹஜ்ஜுப் பெருநாளை கச்சுப்பெருநாளாக்கி (இடைக்கச்சா மார்புக்கச்) மொழியையும் இனத்தையும் உணர்வையும் கொச்சைப்படுத்துதல் மகாகுற்றம். தமிழ் வளமான மொழி அல்ல என்று யாருமே சொல்லமுடியாது.

எல்லா மதத்தவர்களும் தானே ஆண்டவனைத் தொழுகிறார்கள். ஆனால் இஸ்லாமியர்களுக்கு மாத்திரம்தான் 'தொழுகையைக் கொடுத்துவிட்டு மற்றவர்களை வணங்க விட்டது தமிழ். தலைவர் இருக்கும் இடம்தான் கோயில் என்றாலும் அதை இந்துக்களிடம் கொடுத்துவிட்டு தேவனின் ஆலயம்-தேவாலயம் என்று அதை கிறீஸ்த்தவர்களிடம் விட்டது தமிழ். அந்நியராக வந்து ஆக்கிரமித்தவை தாம் என்றாலும் மத உணர்வையும் மதப் பண்பையும் மதித்தது தமிழ்.

இஃது இவ்வாறிருக்க தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத் தலைப்புத்தான் வைப்போமென்று அடாவடித்தனம் புரிகின்றார்களே சிலர்! இது என்ன நியாயம்? இது எதில் சேர்த்தி? சிலர் திரைக்கதையின் தேவை கருதி நியாயப்பாடு கருதி வைக்கிறார்கள். உலகம் முழுவதுமே அவ்வாறு நிகழ்வதுண்டு. தமிழில் மிகச் சமீபத்திய உதாரணம் வேண்டுமென்றால் சேரனின் 'ஆட்டோகிராப்" என்னும் தலைப்பினைக் கூறலாம்.

சேரன் இந்தத் தலைப்பினை தனது திரைப்படத்துக்கு இட்டபோது சக இயக்குனரும் தமிழ்மொழிப் பற்றாளருமான தங்கர் பச்சான் (அழகி சொல்ல மறந்தகதை தென்றல் இயக்குனர்) 'ஞாபகக்கையெழுத்து" என்று பெயர் சூட்டலாமே எனக் கேட்டுள்ளார். திரைக்கதைக்குப் பொருத்தமானதும் அனைவருக்கும் புரியும் என்பதும் சேரனின் உடனடிப் பதில். இந்தப் பதிலில் ஓரளவு நியாயப்பாடு இருப்பதனை நாம் புரிந்துகொள்ளலாம்.

தீவிர இனப்பற்றாளராக தன்னை இனம் காட்டிக்கொள்ளும் நடிகர் கமல்காசன் கூட தனது 'மும்பை எக்ஸ்பிரஸ்" என்னும் ஆங்கிலத் தலைப்பிட்ட திரைப்படத்திற்கு அதே காரணத்தையே சொல்கின்றார். இவையெல்லாம் எப்போது ஏற்றுக்கொள்ளப்படுமெனில் எல்லாம் சரியாக நிகழும்போது. யாவும் உண்மையாக இருக்கும்போது. செயலில் நேர்மை தெரியும்போது. அப்போது மாத்திரமே. என்ன நிகழ்கின்றதென்றால் ஆங்கிலத் தலைப்பிடுவதை ஒரு மோடி (குயளாழைn) யாக நினைத்து விடுகின்றோம்.

அவ்வாறு தலைப்பிட்டால்தான் படம் 'பிய்ச்சுக்கிட்டு" ஓடும் என்று அசட்டு நம்பிக்கை வேறு. மற்றும் தமிழ்மொழி மீதான தீராக்காதல் கொள்ளாதவர்கள் இவர்கள். சுருக்கமாகச் சொன்னால் 'யாவாரிகள்" இதைத்தான் செய்வார்கள். ஆங்கில மோகம் என்பது நமது தாழ்வுச் சிக்கலையே காட்டுகின்றது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளம் கர்நாடகா ஆந்திரப்பிரதேசம் ஆகிய பிரதேசங்களில் எடுக்கப்படும் திரைப்படங்களில் ஆங்கிலத் தலைப்பிட்ட திரைப்படங்கள் இல்லையென்றே சொல்லலாம். இன்னும் சொன்னால் வேற்றுமொழித் தலைப்பிற்கு அவர்கள் எதிராகவே இயங்குகிறார்கள்.

ஆனால் சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி தமிழ்த்திரைப்படங்களுக்கான தலைப்பில் சுமார் எழுபது வீதமானவை ஆங்கிலத்தில் அமைந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நம்மூர்க் கவிஞரான சண்முகம் சிவலிங்கம் எழுதிய ஒரு கவிதைதான் இப்போது என் ஞாபகத்தில் வருகின்றது.

'எங்கள் ஆணுடம்பு ஏன் எழுவதில்லை எங்கள் யோனிகளில் ஏன் அரிப்புக் குதிர்வதில்லை இன்றைய பேப்பரைப்பார் எகிப்தின் தெருக்களிலே... என்று போகிறது அந்தக் கவிதை. அதாவது எகிப்தில் அதிகாரத்தின் அட்டூழியம் கண்டு மக்கள் கிளர்ந்தெழும்போது இங்கு நாம் அதிகாரத்தின் அட்டூழியம் கண்டும் வாளாவிருக்கின்றோம் என்பதைச் சொல்ல வந்தது இந்தக் கவிதை. இதையே தமிழ்நாட்டுச் 'சனங்களும்" செய்கிறார்கள் என்னும் ஆதங்கத்திலேயே இக்கவிதை இங்கு குறிக்கப்பட்டது.

எல்லா மக்களையும் இங்கு நாம் குறிப்பிடவில்லை. பெரும்பாலானோர் என்கின்றோம். ஆங்கில மோகம் அதை ஊதி வளர்க்க பிராமணிய சக்திகள் அடிமை மனோபாவம் அசண்டையீனம் என்னும் காரணங்கள் தமிழ்த்திரைப் படங்களுக்கு ஆங்கிலத் தலைப்பிடும் ஊக்கத்தைக் கொடுக்கின்றது. இதை எதிர்த்து உணர்வு மிக்க தமிழ்த்திரைப்படக் கலைஞர்கள் போராட வேண்டும். அவர்கள் போராடாதபோதுதமிழின உணர்வாளர்கள் போராட்டத்தைக் கையில் எடுப்பது தவிர்க்க முடியாதது.

மத்திய அரசு இந்தியைத் திணிக்க அதை எதிர்த்து போராடுவது சரியெனில் இதுவும் மெத்தச் சரியே. படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுதல் தவறென்போருக்கு பதில் சொல்லல் இங்கு அவசியமில்லை. தமிழ்மொழி மூலத் திரைப்படம். தமிழர் வாழ்வைச் சொல்லும் திரைப்படம். தமிழர்களைப் பார்வையாளர்களாகக் கொண்ட திரைப்படம். மொத்தத்தில் தமிழ்த்திரைப்படம். இதற்கு ஆங்கிலத்தில்தான் தலைப்பிடுவேன் என அடாவடித்தனம் புரிவதன் பெயர் படைப்பாளியின் சுதந்திரம் தானென்றால் அதில் உணர்வாளர்கள் யாரும் தாராளமாகத் தலையிடலாம். அதுவென்ன தமிழ்த் தேசிய அரசியலை கிண்டல் செய்து தமிழ்த்திரைப்படப் படைப்பாளிகள் திரைப்படங்கள் தயாரிக்கலாமென்றால் (பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை மணிரத்தினத்தின் இருவர் ஆயுத எழுத்து இன்னும் பல) தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் தமிழ்த்தேசிய எதிர்ப்புணர்வைக் கேள்வி கேட்டு போரில் இறங்குவதில் என்ன தவறு கண்டீர்?

இறுதியாக ஒன்று சொல்லலாம்: திரைக்கதைக்கு ஏற்ப தமிழில் பொருத்தமான தலைப்பு கிடையாது என்போருக்காக. ஜெயராஜ் என்கின்ற மலையாளத் திரைப்பட இயக்குனர் 'கருணம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி உலகத்திரைப்பட விழாவில் முதலாம் திரைப்படத்திற்கான தங்கமயில் விருது பெற்றவர். அவர் சொல்கின்றார் அதை என் மொழியில் சொல்கின்றேன். தமிழ் மிக வளமான மொழி. மொழிப்பஞ்சம் கிடையாது மலையாளத்தில் ஒரு திரைப்படத்திற்கு தலைப்பிடுவது என்றால் அதற்குப் பொருத்தமான சொல்தேடி அலைய வேண்டும்.

எனக்குப் பல மொழி தெரியும். அதனால் சொல்கின்றேன். தமிழில் அம்பாரம் சொற்கள் குவிந்துள்ளன. உதாரணத்திற்கு மற்றயை மொழிகளில் மழை பெய்கிறது அவ்வளவும்தான். தமிழில் மழை என்ன செய்கிறது? மழை-பெய்கிறது பொழிகிறது கொட்டுகிறது சிணுங்குகிறது சீறுகிறது துமிக்கிறது தூவானமிடுகிறது தூறுகிறது தெறிக்கிறது அடிக்கிறது சாரல் தெறிக்கிறது.

ஒரு மழை பெய்யும் விதத்தில் உள்ள வகைகளுக்கேற்ப தமிழில் சொற்கள் உள்ளன. அதன் மொழியும் கூட கவித்துவமான மொழி. 'தூறல் நின்னு போச்சு" என்பது தமிழின் ஒரு திரைப்பட தலைப்பு. எவ்வளவு கவித்துவமான தலைப்பு. தமிழில்தான் இப்படியெல்லாம் தலைப்பு வைக்கமுடியும். இது மலையாள இயக்குனர் ஜெயராஜ் சொன்னது என்றால் ஆங்கிலத் தலைப்பு இடுவோருக்கு இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை.

'ப்ரென்ட்ஸ்" என்று தமிழ்த்திரைப்படம் ஒன்றிற்குப் பெயர் வைக்கிறார்கள். அதற்கு தமிழில் பொருத்தமான தலைப்பு இல்லையா? 'நிய10" என்கின்ற ஆங்கிலத் தலைப்புக்கும் அந்தத் தமிழ் திரைப்படத்துக்கும் என்ன சம்பந்தம்? இன்னும் நிறையக் கேள்விகள் கேட்கலாம். கிழிய கிழியக் கேட்கலாம். விடுவோம். இவர்களெல்லோரும் தானாகத் திருந்தவேண்டும். இல்லை தடியெடுத்தால்தான் திருந்துவோம் என்றால் தடியெடுக்கவும்தான் வேண்டும். தடியெடுக்க வேண்டியவர்கள் தமிழர்கள். அவ்வளவும்தான் சொல்வேன்.
- அ.இரவி-

நன்றி: ஈழமுரசு


சுடுவதில் உதவி; தமிழ்நாதம்.கொம்.
.
.!!
Reply
#2
மிகவும் சிந்திக்க வைக்ககூடிய கட்டுரை. நன்றி தயா ஜிப்ரான் அவர்களே.

நாங்கள் படத்தயாரிப்பாளர்களை ஆங்கிலபெயர்சூட்டலுக்கான காரணத்துக்காக குற்றம் சொல்லமுடியாது. இன்று சென்னையில் 50 வீதம் தமிழும் 50 வீத ஆங்கிலமும் பேசும் தமிழ்நாட்டில் எப்படி தனித்தமிழில் பேர் வைப்பதற்காக தயாரிப்பாளர்களை மட்டும் குற்றம் சொல்லமுடியும்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் திருந்தமாட்டார்கள் அல்லது சினிமாக்காரன்கள் அப்பிடித்தான் காசிலதான குறி என சிலர் சொல்வார்கள். அரசியல்வாதிகளை உருவாக்குவது யார்? வெற்றி படங்களாக நூற்றுக்கணக்கான நாட்களாக படத்தை ஓடவைப்பது யார்?

எல்லாமே நாமே. நாம் திருந்தும் வரை இதற்கு விமோசனமில்;லை.

அடுத்த முக்கியமான விடயம் தமிழ் அரியாசனம் ஏறும்வரை தமிழ்மொழியை மேன்மைப்படுத்த முடியாது.

அதுவரை மிச்சதமிழை காப்பாற்ற கத்துவோம்.. கத்துவோம்... கத்துவோம்.
Reply
#3
Quote:மற்றயை மொழிகளில் மழை பெய்கிறது அவ்வளவும்தான். தமிழில் மழை என்ன செய்கிறது? மழை-பெய்கிறது பொழிகிறது கொட்டுகிறது சிணுங்குகிறது சீறுகிறது துமிக்கிறது தூவானமிடுகிறது தூறுகிறது தெறிக்கிறது அடிக்கிறது சாரல் தெறிக்கிறது.
நன்றி
Reply
#4
எழுதுவதுடன் மட்டும் நிறுத்தினால் போதுமா? இங்கும் அந்த திரைப்படங்கள் திரையிடப்படும் வேளைக்கே போய் பாத்துவிடுவம். தமிழ் தன்ரை பாட்டில் வளரும் என்று இருந்துவிடுவோர் இருக்கும் வரை இதை மாற்றமுடியாது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#5
ஏன் வேஸ்ரா தியேட்டருக்கு காசு குடுக்கிறீங்கள்..:?: :?:
உடன உடன இணையத்தில பார்க்கவேண்டியது தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: ?
Reply
#6
அந்த இணைய தள் முகவரிகளை கொஞ்சம் தாருங்களேன் வசி, சில படங்கள் தியேட்டரில் பார்க்கும் போது அதன் முழுமையான effect கிடைக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
நீங்கள் சொல்லுறது சரிதான். ஆனா ராம் படம் இங்கு தியேட்டரில் ஓடவில்லையே? :roll:
நான் Torrents மூலம் தான் படங்களை தரவிறக்கி பார்க்கிறேன். அப்படியான இணையத்தள முகவரிகள் வேண்டுமா?
Reply
#8
ராம் Streatham Odeon சினிமாவில் போடுவதாக சொன்னார்கள். பின்பு போட்டார்களோ இல்லையோ தெரியவில்லை, Bit Torrents மூலம் தரவிறக்கம் செய்து பார்க்கும் போது தெளிவாக இருக்கின்றதா? அந்த இணைய முகவரிகளை தாருங்களேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#9
படங்கள் நல்ல தெளிவாகத்தான் இருக்கின்றது.
இதோ சில முகவரிகள்.. :wink:

www.tamiltorrents.net
www.raagaswaram.com
www.tmstorrents.com
Reply
#10
நன்றி வசி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)