Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்
#1
பிப்ரவரி 19, 2005

இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்: பயங்கர அலைகளால் பீதி

ஜகார்தா:

இந்தோனேஷியாவை இன்று மீண்டும் சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் மாபெரும் கடல் அலைகள் தோன்றின.


அந் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சுலவேசி தீவுகளின் அருகே கடலுக்கடியில் இந்த பூகம்பம், இன்று காலை 8.04க்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5.34) தாக்கியது. ரிக்டர் ஸ்கேலில் 6.9 என்ற அளவுக்குப் பூகம்பம் பதிவாகியுள்ளது.

கடலுக்கு அடியில் 37 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து கடலில் மிக பயங்கரமான அலைகள் தோன்றின. 4 மீட்டர் வரை உயரமான அலைகள் கரைகளைத் தாக்கியதால் அப் பகுதியில் மீண்டும் சுனாமி வந்துவிட்டதாக பெரும் அச்சம் பரவியது.

இதனால் பௌபௌ உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த சுலவேசி தீவுவாசிகள் கடலோரப் பகுதிகளை விட்டு ஓடினர். ஆனால், இந்த அலைகளால் சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

கடந்த டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலடியில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் தான் (ரிக்டர் ஸ்கேலில் 9) தமிழகம், இலங்கை உள்ளிட்ட தெற்காசியா முழுவதும் சுனாமி பேரலைத் பேரழிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாகவே நியூசிலாந்து, இந்தோனேஷியா மற்றும் நிகோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.


நன்றி : தட்ஸ்தமிழ்
Reply


Forum Jump:


Users browsing this thread: