Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொள்ளையடித்த பணத்தில் பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை
#1
<img src='http://www.dailythanthi.com/images/news/20050219/police.jpg' border='0' alt='user posted image'>கொள்ளையடித்த பணத்தில் பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை
15 ஆண்டுகள் கலக்கிய லட்சாதிபதி கொள்ளையன் கைது
பரபரப்பு வாக்குமூலம்


சென்னை, பிப். 19-

தமிழகத்தை 15 ஆண்டு களாக கலக்கி வந்த லட் சாதிபதி கொள்ளையன் சென்னையில் கைது செய் யப்பட்டான்.

வித்தியாசமான கொள்ளையன்

துப்பாக்கி, அரிவாள், வெடி குண்டுகளை வீசி, ரத்தக் களறியை உண்டாக்கி நகை, பணத்தை கொள்ளை அடித்து கொள்ளையர்கள் பவனி வரும் இந்த நேரத் தில், கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற எந்த விதமான பயங்கர ஆயுதங்களும் இல்லாமல் ரத்தக்களறி உண் டாக்காமல் ஒரு வித்தியாசமான கொள்ளையன் கடந்த 15 ஆண்டு களாக தமிழகம் முழுவதும் வலம் வந்து கொள்ளை தொழிலையும் கன, கச்சிதமாக செய்துள்ளான்.

இன்று அவன் பிரபலமான லட்சாதிபதி. சொந்தமாக பங் களா வீடு. வீட்டு முன்பு விநா யகர் கோவில். அவன் வசிக்கும் இடத்தில் ஏழை மக்களுக்கு பணத்தை வாரி வழங்கும் வள்ள லாக, அவனை மக்கள் போற்று கிறார்கள். திருமண வீட்டுக்கும், துக்க வீட்டுக்கும், இவன் தான் முதல் ஆளாக நிற்பான்.

ஓசையில்லாமல் கொள்ளைத் தொழிலை செய்து கொண்டு, வெளி உலகத்தில் லாரி அதிப ராக, வட்டிக்கு கடன்கொடுக் கும் பைனான்சியராக வாழும் இந்த கொள்ளையன் சென் னைக்கு அருகாமையில் உள்ள திருவேற்காடு எம்.ஆர்.நகரில் தான் வசிக்கிறான்.

ரூ.50 லட்சம் கொள்ளை

இந்த கொள்ளைக்காரனின் பெயர் ராதாகிருஷ்ணன் (வயது 36). 89-ம் ஆண்டில் கொள் ளைத் தொழிலில் குதித்து, இரண்டு முறை ஜெயிலுக்குப் போய், அதன் பிறகு 91-ம் ஆண்டிலிருந்து சுமார் 14 ஆண்டுகள் போலீஸ் கையில் மாட்டாமல் கொள்ளைத் தொழிலில் ராதாகிருஷ்ணன் கொடி கட்டி பறந்தான். இது வரை 26 வழக்குகளில் சுமார் 30 வீடுகளில் திருடி இருக்கிறான்.

திருடிய நகைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும். கொள் ளைத் தொழிலில் சம்பாதித்த பணத்தில் திருவேற்காடு எம்.ஆர்.நகரில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் ஒரு கிரவுண்டு நிலம் வாங்கி, அதில் ரூ.6 லட்சம் செலவில் பங்களா வீடு கட்டி வசிக்கிறான்.

காதல் மனைவி

இவனது காதல் மனைவி பெயர் சுகந்தி. இவனுக்கு 2 மகன் கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் யுவராஜ் 4-வது படிக் கிறான். அடுத்த மகள் இமய வல்லி 2-வது வகுப்பு படிக்கி றாள். அடுத்த மகன் முருகன் 1-வது படிக்கிறான். கடைசி மகள் சோபனா (3 வயது ).

3 குழந்தைகளும் திருவேற்காட் டில் உள்ள கான்வென்ட் பள்ளி யில் படிக்கிறார்கள்.

தனி ஆள் ஸ்டைல்

கொள்ளையன் ராதாகிருஷ் ணனின் கொள்ளை ``ஸ்டைல்" வித்தியாசமானது. தனி ஆளா கவே இந்த தொழில் செய்து வந்தான்.

மாடி வீடுகளில் ``குடிநீர் பைப்" வழியாக ஏறிச்சென்று, திறந்து கிடக்கும் ஜன்னல் கம்பி வழியாக கையைவிட்டு, அருகில் இருக்கும் கதவை திறந்து தான் வீட்டுக்குள் நுழைவான். ஆட்கள் தூங்கிக் கொண்டிருக்கும் வீடுகளில் புகுந்து ஓசையில்லாமல் பீரோவை திறந்து கொள்ளை அடிப்பது தான் இவனது குணம்.

ஆள் இல்லாத வீட்டிற்குள் நுழையமாட்டான். பூட்டை உடைப்பதையும் விரும்பமாட் டான். இப்படி கொள்ளைத் தொழிலில் தனக்கென்று தனி முத்திரை பதித்து வாழ்ந்த ராதாகிருஷ்ணனுக்கு ஒரு மோச மான குணம் இருந்தது.

ரசித்து பார்ப்பான்

கொள்ளை அடிக்க நுழையும் வீடுகளில் படுக்கை அறைக்குள் நுழைந்து, தூங்கிக்கொண்டி ருக்கும் பெண்களின் ஆடை விலகி இருந்தால் அதை ரசித்து பார்ப்பான். சில வீடுகளில் புகுந்தபோது கணவன்-மனைவி ஒன்றாக இருப்பதையும் பார்த்து ரசிப்பது இவனது மோசமான குணம்.

சமீபத்தில் சென்னை வளசரவாக்கம், திருவான்மிïர், அடையார், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் திருட்டு போன 8 வீடுகளில் ராதாகிருஷ்ணனின் கைரேகை பதிவாகி இருந்தது. இதை வைத்து ராதாகிருஷ் ணனை கைது செய்ய கமிஷனர் நடராஜ் உத்தரவிட்டார். இணை கமிஷனர் சாஸ்திரி, துணை கமிஷனர் ஆயுஸ்மணி திவாரி, உதவி கமிஷனர் ராமச் சந்திரன் ஆகியோர் மேற்பார் வையில் இன்ஸ்பெக்டர்கள் எட்வர்டு, ஜான்ஜோசப், தெய்வ சிகாமணி, ஏசுபாதம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கோர்ட்டில் சரண்

போலீஸ் தேடுவதை அறிந்த ராதாகிருஷ்ணன் சென்னை எழும்பூர் 6-வது கோர்ட்டில் சரண் அடைந்துவிட்டான். தனிப்படை போலீசார் அவனை காவலில் எடுத்து விசாரித்தார் கள்.

விசாரணையில் திருடிய நகை களை நெல்லிக்குப்பம், கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் மார்வாடிகளிடம் விற்று இருப் பது தெரிய வந்தது. போலீசார் மார்வாடிகளிடமிருந்து சுமார் 400 சவரன் எடையுள்ள ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனர்.

மீட்கப்பட்ட நகைகள் நேற்று சென்னை, திருவான்மிïர் போலீஸ் நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. போலீஸ் கமிஷனர் நடராஜ் அவற்றை பார்வையிட்டு தனிப்படை போலீசாரை பாராட்டினார்.

வாக்கு மூலம்

திருட்டு தொழிலுக்கு வந்தது எப்படி? என்று ராதாகிருஷ்ணன் தனிப்படை போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத் துள்ளான். அதன் விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் எனது ஊர். எனது தந்தை பெயர் ஏழுமலைச் செட்டியார். தாயார் பெயர் துளசி. 2 சகோதரிகள், 2 சகோ தரர்கள் உள்ளனர். 6-வது வகுப்பு வரை மட்டும் படித்தேன். அதன்பிறகு படிப்பு ஏறவில்லை. தோட்டத்தில் புகுந்து தென்னை மரத்தில் ஏறி தேங்காய் திருடுவேன். மாமரத்தில் ஏறி மாங்காய் திருடி விற்பேன். இவ்வாறு திருட்டு தொழிலை தொடங்கிய நான், காலப் போக்கில் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருட ஆரம்பித் தேன். முதன் முதலாக நெல்லிக் குப்பத்தில் தென்னை மரத்தின் வழியாக ஏறி ஒரு வீட்டுக்குள் புகுந்து திருடினேன்.

மரம் ஏறி பழக்கம் இருந்ததால், குடிநீர் குழாய் வழியாக ஏறி வீடுகளுக்குள் புகுந்து செல்வது எனக்கு எளிதாக இருந்தது. இதையே எனது திருட்டு ஸ்டை லாக கடைபிடித்தேன். கூட்டு சேர்ந்து திருடுவது எனக்கு பிடிக்காது. இதனால் தான் நான் 14 ஆண்டுகளாக போலீசில் மாட்டவில்லை.

நான் திருடி சம்பாதிப்பது எனது மனைவிக்கு பிடிக்க வில்லை. தீக்குளித்து தற் கொலைக்கு கூட முயற்சித்து விட்டாள். லாரி அதிபர் என்று ஏமாற்றி தான் என் மனைவியை காதலித்து மணந்தேன். என் குழந்தைகளுக்கு நான் திருடன் என்பது தெரியாது. நான் வாழும் திருவேற்காட்டு பகுதி மக்களுக் கும் நான் திருட்டு தொழில் செய் வது தெரியாது. திருடி சம்பா தித்த பணத்தை நான் ஏழை களுக்கு கொடுத்து உதவுவேன். திருமணம் கூட செய்து வைப் பேன்.

4 காதலிகள்

நெல்லிக்குப்பத்திலும், புதுச் சேரியிலும் எனக்கு 4 காதலிகள் உள்ளனர். அவர்கள் வீட்டுக்கு எப்போதாவது சென்று உல்லாச மாக இருப்பேன். இன்னும் ஒரு வருடம் திருட்டு தொழில் செய்துவிட்டு, வேறு தொழில் தொடங்க நினைத்தேன். அதற் குள் போலீஸ் கெடுபிடி, அதிக மாக இருந்ததால் கோர்ட்டில் சரண் அடைந்துவிட்டேன்.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில் கூறி இருக்கிறான்.

சொத்துக்களை முடக்க திட்டம்

ராதாகிருஷ்ணன் திருட்டு தொழிலில் சம்பாதித்து கட்டிய பங்களா வீட்டை பறிமுதல் செய்ய சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினார்கள்.

Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)