Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
100 வயதில் மணப்பெண் தேடும் ராணுவ அதிகாரி
#1
3 மனைவிகள், 38 மகன்கள் 100 வயதில் மணப்பெண் தேடும் ராணுவ அதிகாரி

நகரி, பிப். 23-

நாகரீகம் பெருகிவிட்ட இக்கால கட்டத்தில் 60 வயதை தாண்டினாலே பெரும் பாலான ஆண்கள் நோயின் பிடியில் சிக்கி வீட்டில் முடங்கி விடுகிறார்கள். ஆனால் 100 வயதை கடந்த முன்னாள் அதிகாரி ஒருவர் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற விரும்புகிறார்.

அவரது பெயர் ஸ்ரீகடிபிரேம் பிரசாத். ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் காரேபள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.

1905-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந்தேதி பிறந்த இவர் 25 வயதில் இந்திய ராணு வத்தில் அதிகாரி ஆனார். அப்போது இவர் லண்டனில் பணியாற்றியபோது 1925-ல் பாஸ்சி என்ற கிறிஸ்தவ பெண்ணை மணந்தார். இவர்களுக்கு 8 ஆண் குழந்தைகள் பிறந்தன.

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரது மனைவியும் மகன்களும் இங்கு வர மறுத்து விட்டனர்.

இதனால் அவர் 2-வதாக கோவையைச் சேர்ந்த கண்ணம்மா என்பவரை திருமணம் செய்தார். 20 ஆண் குழந்தைகள் பிறந்தன.

இந்த நிலையில் 1965-ல் இந்தியா-சீனா போர் வந்தது. இதில் கலந்து கொண்டு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட போது சீன வீரர்களின் துப் பாக்கி குண்டு ஒன்று இவரது உடலில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்ததால் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பிறகு 1981-ல் பெங்களூர் வந்து தங்கினார். அப்போது மனதை மஞ்சுளா பீபி என்ற அழகான முஸ்லிம் பெண் ஆக்கிரமித்துக் கொண்டார். அவரை பிரிய மனம் இல்லாததால் 3-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு 9 ஆண் குழந்தைகள் பிறந்தன.

அந்த காலகட்டத்தில் அவர் ஒரு தடவை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது அனாதையாக ஒரு சிறுவன் அழுது கொண்டிருப் பதை கண்டார். அவனது நிலையை அறிந்த அவர் தன்னுடன் அழைத்துச் சென்றார். இந்த அனாதை சிறுவனையும் சேர்த்து பிரேம் பிரசாத்துக்கு 38 மகன்கள் உள்ளனர்.

அவர்கள் அத்தனை பேரும் தற்போது வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வருகி றார்கள்.

கடந்த மாதம் 100-வது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய அவருக்கு "தனக்கு பெண் குழந்தை இல்லையே" என்ற ஒரே ஒரு குறைதான் உள்ளது.

இதுபற்றி பிரேம் பிரசாத் கூறும்போது, "எனக்கு 3 மனைவிகள், 38 மகன்கள் இருக்கிறார்கள். எனக்கு பெண் குழந்தை இல்லையே என்ற ஒரு குறைதான் உள்ளது.

அந்த குறையைப் போக்க 4-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்.

அதற்காக மணப் பெண்ணை தேடிக் கொண் டிருக்கிறேன் என்றார்.

100 வயதைக் கடந்தாலும் பிரேம் பிரசாத் தினமும் வாக்கிங் செல்கிறார். கடினமான வேலைகளைச் செய்கிறார்.

அவரது உடல்பலத்தை பார்த்து காரேபள்ளி மக்கள் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள்.

மாலைமலர்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
இவருக்கு றொம்ப அவசியம் தான்.. ஐஸ்வர்யாராய்க்கு அப்பிளிக்கேசன் போட சொல்ல வேணும். :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
«¼! þó¾ ¯Ä¸ò¾¢ø þôÀÊì ܼ ¿¼ì¸¢È¾¡.!! þÅ÷ ¸¢ýÉŠ Òò¾¸ò¾¢ø ÅÃÄ¡§Á?


Á†¡òÁ¡.
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#4
கண்ணம்மா எப்படித்தான் 20 பிள்ளைகளையும் வளர்த்திருப்பா? 1 பிள்ளைய சமாளிக்கிறதே சிரமம்....பாவம் கண்ணம்மா..
" "
" "

Reply
#5
Malalai Wrote:கண்ணம்மா எப்படித்தான் 20 பிள்ளைகளையும் வளர்த்திருப்பா? 1 பிள்ளைய சமாளிக்கிறதே சிரமம்....பாவம் கண்ணம்மா..

உங்களை மாதிரி இல்லாமல் சமர்த்து பிள்ளைகளாய் இருந்திருக்குங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)