Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
`வானம் இருண்டுவிடும்' அச்சம்
#1
`வானம் இருண்டுவிடும்' அச்சம் ஆர்தர் சி கிளார்க் நிலையம் நிராகரிப்பு

சூரிய கிரகணம் காரணமாக பெப்ரவரி 22 முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வானம் கறுப்பாக மாறிவிடும். இதன் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்படுமென வெளியாகியுள்ள செய்திகளை கொழும்பின் ஆர்தர் சி கிளார்க் நிலையம் நிராகரித்துள்ளது.

சூரிய கிரகணம் அல்லது சூரிய புயல் காரணமாக வானம் கறுப்பாக மாறிவிடும் என்ற வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளதையடுத்து தென்பகுதியில் அச்ச நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மக்கள் தமது நகைகளை மறைத்துவைக்கத் தொடங்கியுள்ளதுடன், மாணவர்களை பாடசாலைகளுக்குச் செல்ல விடாமல் மறித்துவருகின்றனர்.

சில இடங்களில் ஆடைத் தொழிற்சாலைகளுக்கு ஊழியர்கள் செல்லாததால் அவை இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இவ்வாறான நிகழ்வொன்றிற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென ஆர்தர் சி கிளார்க் மையத்தைச் சேர்ந்த கலாநிதி சந்தான ஜெயரட்ண குறிப்பிட்டுள்ளார்.

பௌர்ணமி நாட்களில் சூரிய கிரகணத்திற்கான சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், வானம் கறுப்பாக மாறினால்கூட அது ஏழு, அல்லது எட்டு நிமிடங்களுக்கே நீடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய எரிகல் ஒன்று பூமியை தாக்கினால் மாத்திரமே இது சாத்தியம். எனினும், இதுவரை இவ்வாறான எரிகல் எதுவும் பூமியை நோக்கி வருவதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Thinakural
--------------------------------------------------------------------------------
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)